Yoga Ravi Page

Yoga Ravi Page MEDICAL & SPIRITUAL MESSAGES

02/09/2026

https://www.facebook.com/share/1EDrXXHoNt/

கோவில்களுக்குள் செல்போன்கள் தடை!

ரீல்ஸ்கள் எடுக்கக்கூடாது …. நியாயமான காரணம்!

ஆனால்.,

ஆலயத்திற்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது, கேக் வெட்டி டான்ஸ் ஆடுவது, கார்களை மண்டபத்தில் நிறுத்துவது, … அடாவடியாக வசூலிப்பது, பக்தர்களை ஏமாற்றுவது, அவமதிப்பது…,
இதெல்லாம் வீடியோக வந்தது அதன் காரணம்..

பழனி..
வயதானவர்கள் விஞ்சில் வருகிறார்கள்.., மற்றவர் படிகளில் ஏறி வருகிறார்கள்.., இருதரப்பினரும் எங்கஏ என்று ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள் போன் மூலம் தான்…

சமீபத்தில் ஒரு வீடியோ..
திருச்செந்தூர் அன்னதான க்யூவில் மாட்டிக்கொண்ட ஒருவர் தன் குடும்பத்திற்கு போன் செய்து தான் வெளியே வர 3 மணி நேரம் ஆகும்.. குடும்பத்தினர் ஊருக்கு சென்று விடுங்கள் என்று பேசுகிறார்..

மொபைல் போன் இல்லையென்றால் அந்த குடும்பத்தினர் எப்படி தவித்து போயிருப்பர்!!

நடிகர், நடிகைகளை வீடியோ எடுப்பது… உள்ளே நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளை வீடியோ எடுப்பது தண்டிக்கவே செய்யலாம்

ஆனால்..
மொபைல் போன் என்பது இப்போது தவிர்க்கவே முடியாத கருவி…
கோவிலுக்குள் சில கட்டணங்களை செலுத்தவும் கூட போன் தேவை..

ஆலயங்களுக்குள் நடக்கும் அக்கிரமங்களை… அமைச்சர்கள். அதிகாரிகள் குடும்பத்தினர் நடத்தும் அடாவடித்தனங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தான் இந்த உத்தரவு!

போன் பாதுகாப்பிற்கு ரூ5/- ( ஒரு போனுக்கு) என்பது மற்றொருவகை கொள்ளை., இனி அவை கட்சி ஆட்களுக்கு காண்டிராக்ட்டில் கொடுக்கப்படும்…
இனி அவர்கள் வைப்பது தான் கட்டணம்!

ஏற்கனவே இராமேஸ்வரம். சமயபுரம் போன்ற ஊர்களில் … ஊருக்குள் நுழையவே காசு வசூலிப்பது சாதாரணமாக நடக்கிறது..

மொத்தத்தில் அரசை நடத்துவது…. நேர்மையற்ற அரசு அதிகாரிகள்..

படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான் போவான் அய்யோ என்று போவான்…
பாரதியே மனம் நொந்து விட்ட சாபம்..

01/09/2026

தீப்புண் ஏற்பட்டு ஐ சி யூ வில் இருந்த குழந்தையை ஜெபத்தினை விட்டுக் கொடுத்து காப்பாற்றிய சம்பவம்:
-----------------------------
லட்சக்கணக்கில் ஜெபம் செய்து சேமித்து வைக்கும் மந்திரம் ஒரு உயிரைக் காப்பாற்ற பயன்படும். நாம் முயற்சி செய்யலாம் முடிவு இறை சக்தியின் கையில். இதுபோல் அனைவரையும் காப்பாற்ற முடியுமா என்றால் தெரியாது. தெய்வத்தின் முடிவு மட்டுமே.

தீப்புண் ஏற்பட்டு ஐ சி யூ வில் இருந்த குழந்தையை ஜெபத்தினை விட்டுக் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் :
குருநாதரின் பேரன். இரண்டு வயது. 15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.

கொதிக்கும் வெந்நீரை மேலே ஊற்றிக் கொண்டு உடலில் 50 சதவீதத்திற்கு மேல் உடல் வெந்து விட்டது. சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனையில் ஐ சி யூ வில் சேர்க்கப்பட்டான்.

நான்காம் நாள் மருத்துவர்கள் 25% மட்டுமே பிழைக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.

குழந்தையின் பெற்றோர்கள் கதற ஆரம்பித்து விட்டனர்.
நான் அவர்களிடம் " இந்த டாக்டர் சொல்லுவதும் பொய். அவர்களின் மெஷின் கூறுவதும் பொய். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்று நான் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன்.

இரவு 11 மணி. நான் பிரதி கிரியா சூலினி எனும் துர்க்கையின் மந்திரம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஜபம் செய்து சேமித்து வைத்திருந்தேன். அந்த மந்திரத்தை கூறி அந்த துர்கையை அழைத்தேன்.

நடந்த சம்பாஷனை :

என்ன வேண்டும் உனக்கு?

எனக்கு அந்த குழந்தை உயிருடன் வேண்டும்.

நீ செய்த ஜெபத்தினை விட்டுத் தருகிறாயா?

முழுதாக வேண்டுமா பாதி வேண்டுமா கால்வாசி வேண்டுமா?

கால்வாசி ஜெபத்தினை விட்டுக் கொடு.

நான் அந்த அம்மாவை வேண்டி

இதுவரையில் நான் செய்த ஜெபத்தில் கால் வாசி இந்த குழந்தைக்காக விட்டு தருகிறேன். குழந்தையை உயிருடன் திருப்பிக் கொடு.

சரி இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே.

அதன் பிறகு அந்த குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி காலையில் நல்ல நிலைக்கு வந்து விட்டான். நிச்சயம் மறுபிறவி.
தற்போது அந்த குழந்தை பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறான். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.

அதர்வண வேதம் இரண்டு மந்திரங்கள் (விநாயகர், முருகன்),தமிழில் இடும்பன் கவசம்.  போதும்.  உங்கள் வாழ்க்கைக்கு உதவும், மற்றவர...
01/09/2026

அதர்வண வேதம் இரண்டு மந்திரங்கள் (விநாயகர், முருகன்),
தமிழில் இடும்பன் கவசம். போதும். உங்கள் வாழ்க்கைக்கு உதவும், மற்றவர்களுக்கும் உதவலாம்.
----------------------------------
கற்றுக் கொள்ள கீழ்க்கண்ட க்ரூப்பில் இணையவும்.
நிறைய நண்பர்கள் சேர்ந்த பிறகு வகுப்பு ஆரம்பிக்கிறேன்.
மீதி விபரங்களுக்கு க்ரூப்பில் கேளுங்கள்.

WhatsApp Group Invite

01/09/2026

அவசர காலத்தில் உதவும் இடும்பன் எனும் தெய்வம். இடும்பனை வணங்குவதற்கு நேரம் காலம் தேவையில்லை. துக்க வீட்டிலும் இடும்பனை அழைக்கலாம். தீட்டு கிடையாது.

இடும்பனின் உதவி கொண்டு எனது உறவினரை காப்பாற்றிய சம்பவம் :

நாகை மாவட்டத்தில் எனது உறவினர் ஒரு நயவஞ்சக மனிதனால் ஏமாற்றப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஜாமீன் வாங்க வேண்டும். வாங்க வேண்டிய இடம் நாகப்பட்டினம் கோர்ட். துரதிஷ்ட வசமாக அங்குள்ள ஜட்ஜ் தொடர் விடுமுறையில் இருந்தார். மற்றொரு ஜட்ஜ் வந்தால் தான் ஜாமின் வாங்க முடியும்.

எனது உறவினரின் சிறு குழந்தை அப்பாவை காணும் என்று இரவு பகலாக அழுது கொண்டிருந்தது. இதனை சாதிக்க நான் சென்னையில் களமிறங்கினேன்.

இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை இடும்பன் மந்திரம் ஜெபம். பிறகு மூன்று முறை இடும்பன் கவசம். இடும்பனுக்கு பிராந்தி அசைவ வகைகள் படைக்கப்பட்டன.

அன்று இரவு 3 மணி அளவில் நாகப்பட்டினம் கோர்ட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்ததாரர் பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

அதற்காக ஒரு ஜட்ஜ் ஒருவர் கோர்ட்டுக்கு வந்தார். அவரிடம் ஜாமீன் பெறப்பட்டது.
குருவருளும் இறையருளும் துணை நிற்க மற்றும் ஒரு வெற்றி.

01/09/2026

தமிழ் நாட்டில் BJP என்று ஒரு கட்சி உள்ளதா?

அனைத்து ஏழை மாணவ மாணவியருக்கும் கல்வி உதவி வேண்டும் என்று கேட்காமல் என்ன செய்கிறார்கள்?

கவர்னர் பதவி, அமைச்சர் பதவி என்று அனுபவித்த கட்சியினர் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்?

இதனை எடுத்து பேச வேண்டியவர் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே இருக்கிறார். அவரும் மௌனம்.

அந்த அளவுக்கா நாம் கையாலாகாதவர்கள்?

நான் ஹோமத்தில் கருப்பண்ணசாமியிடம் பிரார்த்தனை வைத்து விட்டேன்.

என்னுடைய அளவில் தெய்வத்திடம் முறையிட மட்டுமே முடியும்.

01/09/2026

மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணை காப்பாற்றிய நிகழ்வு :
---------------------------
1996 97 இல் நடந்தது. நான் அப்போது ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாம்பலம் ரயில் நிலையம் எக்ஸ்பிரஸ் பிளாட்பார்ம் அங்கு நின்று இருந்தேன்.

அப்போது ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. பயணிகள் இறங்கினர். ஒரு 40 வயது பெண்மணி ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

அவருக்கு முன்னால் சென்றவர் இந்த பெண்ணை பார்த்து நீங்கள் இறங்க வேண்டிய நிலையம் எழும்பூர். தவறாக இங்கு இறங்கி விட்டீர்கள் என்று கூறினார்.

அப்போது அந்த ரயில் நகர ஆரம்பித்து விட்டது. அந்தப் பெண்மணி ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்தார். கை பிடிமானம் கிடைக்காமல் பின்பக்கமாக விழுவதற்கு இருந்தார். விழுந்திருந்தால் பின் தலை அடிபட்டிருக்கும்.

அங்கு நின்றிருந்த நான் கடகடவென்று பத்து அடி எடுத்து வைத்து அந்த பெண்ணை இரண்டு கைகளில் தாங்கி ரயிலோடு ஓடி ரயிலின் உள்ளே தள்ளி விட்டேன்.
இதற்கு உதவியது என்னுடைய கராத்தே பயிற்சி.

பெரிய ஆபத்திலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றிய திருப்தி.

நல்ல வேளை அந்தப் பெண் ஒல்லியாக இருந்தார். குண்டாக இருந்திருந்தால் என் நிலைமை என்ன ஆகி இருக்கும்?

31/08/2026

பொய் வழக்குகள், சொத்து பிரச்சினை, துஷ்டர்கள் தொல்லை தீர கருப்பண்ணசாமி ஹோமம் நிச்சயம் உதவி செய்யும்.

எந்த ஊரிலும் நான் வந்து செய்து தருகிறேன்.

நீங்கள் தர்மத்தின் பக்கம் இருப்பது அவசியம்.

சித்தர் யோகா ரவி
போன் 9444192892 : 8531013101 :

விபத்தில் காயமடைந்தோருக்கு மிக சக்தி வாய்ந்த மலிவான முதலுதவி - உதவும் குணம் கொண்ட நல்லோருக்கான பதிவு.நம்மில் எத்தனை பேரு...
30/08/2026

விபத்தில் காயமடைந்தோருக்கு மிக சக்தி வாய்ந்த மலிவான முதலுதவி - உதவும் குணம் கொண்ட நல்லோருக்கான பதிவு.

நம்மில் எத்தனை பேருக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதல் உதவி செய்யத் தெரியும்? மருத்துவமே தெரியாத ஒருவரும் முதலுதவி செய்ய முடியும். மிக மிக எளிமையானது. உதவும் மனம் மட்டுமே முக்கியம். ..........அதற்கு தேவை ஹோமியோ மலர் மருந்துகளின் கலவை "rescue remedy" என்ற மருந்தும் கருப்பு, சிவப்பு marker பேனாவும்தான்...........முதலில் விபத்தில் சிக்கிய நபரை சாலை ஓரமாய் உட்கார/படுக்க வைத்து பிறகு அவருடைய வாயில் ஹோமியோ மருந்து நான்கு உருண்டைகளை விட வேண்டும். வாயில் ரத்தம் வந்தால் தண்ணீர் கொண்டு கொப்பளிக்க சொல்லி பிறகு மருந்தை கொடுக்க வேண்டும். ..........அடுத்த நிமிடம் அந்த நபர் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவார். ரத்தம் வெளிவருவது நின்று விடும்/குறையும்...........பிறகு ஆள்காட்டி விரலின், நடு விரலின் உள்புறம் கருப்பு, சிவப்பு புள்ளிகளை வைக்க வேண்டும். கருப்பு புள்ளிகள் மூன்று ஆள்காட்டி விரலின், நடு விரலின் நடு ரேகையில் வைக்க வேண்டும். சிவப்பு புள்ளிகள் மொத்தம் பன்னிரண்டு இரண்டு விரல்களின் முதல் ரேகைக்கு மேல் வைக்க வேண்டும். (படங்களைப் பார்க்கவும்).........இந்த புள்ளிகளை வைத்த பின் முப்பது வினாடிகளில் அந்த நபரின் வலி குறைய ஆரம்பிக்கும். வலி குறைகிறதா என்று கேட்டால் அந்த நபர் நம்ப முடியாமல் ஆமாம் என்று தலையை ஆட்டுவார்.........நமது முதலுதவி முடிந்தது. பிறகு ஆங்கில மருத்துவரை பார்க்கச் சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்று விடலாம்.........இந்த முறையானது சுஜோக் என்ற acupuncture முறையின் கலர் தெரபி ஆகும். ஹோமியோ மருந்துகள் எல்லா ஹோமியோ கடைகளிலும் கிடைக்கும். கிட்டத்தட்ட ஐம்பது நபர்களுக்கு முதலுதவி செய்ய ரூபாய் முப்பது மட்டுமே ஆகும்........இந்த முறையிலே கடந்த இருபது வருடங்களாக நூற்றுக்கணக்கான நபர்களுக்கு முதல் உதவி செய்திருக்கிறேன். அந்த நபர் அதிர்ச்சியிலிருந்து வெளி வருவார், ரத்தம் வருவது நிற்கும்/குறைந்துவிடும், வலி குறைந்து விடும் என்பது உங்களால் நம்ப முடியாது. நேரில் பார்த்தால் மட்டுமே உங்களால் நம்ப முடியும்.........முதலுதவி செய்தபின் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த இடம் விட்டு அகன்று விடுவது என்னுடைய வழக்கம். காரணம் பாதிக்கப்பட்ட நபரை பொறுத்தவரையில் "யாரோ ஒரு சித்தர் வந்தார். ஏதோ செய்தார். என்னைக் காப்பாற்றினார்" என்பதோடு முடிந்து விடுகிறது.........இந்த விஷயத்தில் என்னுடைய மன திருப்தியும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. இதை நினைத்து நான் கர்வமே கொள்கிறேன். என்னுடைய குருநாதரும், நான் வணங்கும் காளி அம்மனும் எனக்கு கொடுத்த வரப்ரசாதம் இது. மக்களின் நன்மைக்காக நான் ஆயுள் முடியும் வரை இதனைப் பயன்படுத்தி நன்மை செய்வேன். அந்த இடத்தில நான் யார் என வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். இது சித்தர் வழி. மக்கள் சேவை. இதனை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.......இந்த முதலுதவி செய்வதில் சில சங்கடங்களும் உள்ளன. நான் அவற்றை மறக்கவே நினைக்கிறேன்......."குருவருளும் இறையருளும் துணை நிற்க" என் சேவை தொடரும்.
இன்று காலை கூட ECR ரோடில் ஒரு நபருக்கு முதலுதவி செய்தேன். (காலரை தூக்கி விட்டுக்கொள்கின்றேன். கர்வம்).
இதனை நேரில் கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் நேரில் வரவும். ஒரு குழுவாக கற்றுக்கொள்ள விரும்பினால் சென்னையில் நேரில் வந்து கற்றுகொடுக்கத் தயாராக இருக்கிறேன். சேவை செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும். இது முற்றிலும் இலவசம். மக்கள் நன்மைக்காக இதனை இலவசமாகக் கற்றுத் தரத் தயாராக உள்ளேன். என்னுடைய போன் : 94441 92892
முகவரி : B3 அன்னபூர்ணா அடுக்ககம், 2 ஆலையம்மன் கோயில் தெரு, தேனாம்பேட்டை, சென்னை 600 018. (தேனாம்பேட்டை சிக்னல் அருகில்)......நண்பர்கள் ஷேர் செய்யவும். தயவு செய்து என்னுடைய பெயரை மறைக்காமல் வெளியிடவும். மக்கள் நன்மைக்காக நான் செய்யும் சிறு தொண்டு இது......இதனைக் கற்றுக்கொண்டு விபத்தில் சிக்கியோர்களைக் காப்பாற்ற வேண்டுகிறேன்......இந்த முதல் உதவி ஆங்கில மருத்துவத்தில் இல்லை. முதல் உதவி செய்தபின் ஆங்கில மருத்துவரை அணுகலாம்......படிக்கும் நண்பர்கள் தங்கள் அபிப்ராயங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். தங்கள் கருத்துக்கள் எனக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும். "மக்கள் சேவையில் நமது சிறு தொண்டு".

29/08/2026

Rasanai Shriram post in Facebook:

"சார், என் NRE அக்கவுண்ட் blockedன்னு ஆன்லைன்ல காமிக்குது”

“பார்த்துரலாம் சார், இந்த ஃபார்மை ஃபில் பண்ணி உங்க KYC ஃபாரின் பாஸ்போர்ட், ஓசிஐ, விசா, அட்ரஸ் ப்ரூஃப் எல்லாம் தந்துட்டீங்கன்னா..”

“சார் இதெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும்போதே வாங்கிருப்பீங்களே..”

“இருந்தாலும் மறுபடியும் இந்த ஃபார்மை ஃபில் பண்ணி உங்க KYC டீட்டைல்ஸ்.."

"சார், அப்படியே என் NRO அக்கவுண்ட்டோட லோக்கல் ஃபோன் நம்பர் லின்க் பண்ணா நான் UPI பண்ண முடியும். இப்பல்லாம் டீக்கடைல கூட UPI கேட்கறாங்க”

“ஓகே சார், இந்த ஃபார்மை ஃபில் பண்ணி உங்க KYC டீட்டைல்ஸ்.."

"சார், என் அக்கவுண்ட்டை க்ளோஸே பண்ணிடுங்க சார்”

“அதுக்குமே இந்த ஃபார்ம்மை ஃபில் பண்ணி உங்க KYC டீட்டைல்ஸ்..”

“சார் என் அக்கவுண்ட் இப்ப இருக்கிறபடியே இருக்கட்டும், எதுவுமே பண்ண வேணாம்”

“எதுக்கும் இந்த ஃபார்மை ஃபில் பண்ணி உங்க KYC டீட்டைல்ஸ்..”

”அய்யோ ஆளை விடுங்க சார்”

#பாரதஸ்டேட்பாங்கு பிராசஸ்கள்

டிஸ்கி: இது எதுவுமே கற்பனையல்ல. அப்படியே நடந்தது. கடைசிவரை என்னை 4 பக்க ஃபார்மை ஃபில் பண்ணவைத்து வென்றுவிட்டார். அடேய் SBI ஆபிசர்களா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா?🥲

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Ravi Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yoga Ravi Page:

Shortcuts

Share