07/06/2026
👶💥 குழந்தை ஏன் திடீரென்று கத்துகிறது? அடிக்கிறது? கடிக்கிறது? உடைக்கிறது?
📌 பாகம் 6
👶💔 “குழந்தை ஏன் இவ்வளவு கோபப்படுகிறதே?”
என்று பல பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்…
ஆனால் சில நேரங்களில்…
அது கோபம் அல்ல.
அது “என்னை கவனியுங்கள்…” என்ற ஒரு அமைதியான அழைப்பு. 😞
❌ Quality time குறைவாக இருப்பது
பல குழந்தைகளின் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.
அவர்கள் அமைதியாக இருக்கும்போது
யாரும் பேசவில்லை…
யாரும் கேட்கவில்லை…
யாரும் அருகில் உட்காரவில்லை… என்று உணர ஆரம்பிக்கிறார்கள். 💔
ஆனால்…
ஒரு தவறு செய்த உடனே
அனைவரின் கவனமும் அவர்கள்மேல் திரும்புகிறது.
அந்த தருணத்தில்,
அவர்களின் சிறிய மனம் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்கிறது:
👉 “நான் கோபப்பட்டால்தான் என்னைப் பார்க்கிறார்கள்…”
👉 “நான் சண்டை போட்டால்தான் யாராவது என்னிடம் பேசுகிறார்கள்…”
அப்படியே…
கோபம் அவர்களின் language ஆகிவிடுகிறது. 💥
பல குழந்தைகள் “கெட்ட குழந்தைகள்” அல்ல…
அவர்கள் உள்ளுக்குள் தனிமையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். 😔
❤️ பெற்றோர்களே…
உங்கள் குழந்தைக்கு எப்போதும் பெரிய gifts தேவையில்லை.
சில நேரங்களில்…
✔️ 10 நிமிடம் மனதார பேசுவது
✔️ அவர்கள் சொல்ல வருவதைக் கவனமாக கேட்பது
✔️ phone-ஐ வைத்து விட்டு அவர்களுடன் சிரிப்பது
✔️ “நான் உன்னை கவனிக்கிறேன்” என்று உணர வைப்பது
— இதுவே அவர்களுக்கு உலகிலேயே பெரிய அன்பாக இருக்கும். 🤍
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…
குழந்தைகள் நம்முடைய வார்த்தைகளைவிட
நாம் கொடுக்கும் கவனத்தையே அதிகமாக உணர்கிறார்கள். 🌸
இன்று உங்கள் குழந்தையுடன்
சில நிமிடங்களாவது மனதோடு செலவிடுங்கள்…
அவர்களின் நடத்தை மட்டுமல்ல,
அவர்களின் மனமும் மாற ஆரம்பிக்கும். ❤️
தொடரும்...
இந்தத் தொடரின் பிற பாகங்களை முகநூலில் காண இந்த #என்குழந்தைஏன்இவ்வளவுகோபப்படுது என்ற Hashtag ஐ தொடருங்கள்.
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
#குழந்தைகோபம்
#கோபப்படும்குழந்தை
#குழந்தைஉணர்வுகள்