BADUR NISHA Health Care

Call Contact the business

BADUR NISHA Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BADUR NISHA Health Care, Medical and health, 119 , Palliyadi Road, Eravur.

Specialized Siddha & Integrative Care for Chronic Diseases

CKD | Diabetes | Heart Disease | Asthma
| Paralysis | Arthritis | Infertility | Cancer

Evidence-based traditional healing with modern understanding

📍 Eravur
📞 Online Consultation Available

25/09/2026

🌿 8 #ஆண்டுகளாக_தொடர்ந்த_மலச்சிக்கல்…
“ #மலம்_கழிக்க_வேண்டும்_என்ற_உணர்வே_இல்லை”

நாம் வாழ்க்கையில் சாதாரணமாக நினைக்கும் பல விடயங்கள் மிகப்பெறுமதியானவை
அவற்றை இழக்கும் போதுதான் அதன் பெறுமதியை நாம் உணர்கிறோம்.
தினசரி சாதாரணமாக மலம் கழிவதற்கான உணர்வு ஏற்படுவது கூட மிகப்பெரிய அருளாகும்.

அதை இழந்து அதனால் பல கொடிய நோய்கள் வரை சென்று துன்புறுபவர்களுக்கே அதன் முக்கியத்துவம் புரியும்.

ஏறாவூரைச்சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் ஆசிரியை, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மலச்சிக்கல் பிரச்சனையுடன் வாழ்ந்து வந்தார்.

மலம் கழிக்க வேண்டும் என்ற இயல்பான உணர்வே இல்லாமல் இருப்பது, மலம் வந்தாலும் மிகவும் கடினமாக இருப்பது, மலம் கழிக்க அதிகமாக சிரமப்பட வேண்டியது, சில நேரங்களில் உதவி செய்து மலம் வெளியேற்ற வேண்டிய நிலை , தலைசுற்றல் என, அவரது அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருந்தது.

அதோடு வயிற்று உப்புசம், அதிக வாயு, வயிற்று வலி/அசௌகரியம், பசியின்மை,தொடர்ச்சியான ஏப்பம் போன்ற பிரச்சனைகளும் தொடர்ந்து இருந்தன.

இந்தப் பிரச்சனைக்காக பல மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் பெற்றும், அவர் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை.
பல வருடங்களாகத் தொடர்ந்த இந்தப் பிரச்சனைக்கு ஒரு தெளிவான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர் Colombo Kings Hospital-க்கு சென்று Consultant Surgeon ஒருவரை ஐ சந்தித்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட clinical assessment மற்றும் colonoscopy பரிசோதனையில் sigmoid colon பகுதியில் prominent spasm காணப்பட்டது.

Spastic Colon என்றால் குடலின் தசைகள் அதிகமாகச் சுருங்கி, குடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படும் நிலை என்று புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு Diagnosis செய்யப்பட்ட பிறகும் கூட ஒவ்வொரு மாதமும் KINGS HOSPITAL, COLOMBO க்கு சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காதால் ; தான் விரக்தியடைந்திருந்தாகவும் அதன் பின்னரே எமது சிகிச்சை பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்ததாகவும் கூறினார்.

எப்படியாவது தன்னைக்குணப்படுத்திவிடும்படியும் வினயமாக வேண்டிக்கொண்டார்.

" சாதாரண மலச்சிக்கலுக்கு வீட்டுவைத்தியங்களே போதுமானது
ஆனால் இவருக்கோ எந்த மலமிளக்கும்(laxatives)மருந்துகளை எடுத்தாலும் மலம் வெளியேறுவது சிரமமாகவே இருந்தது.

முக்கிய பிரச்சினை எந்த மருந்துகளாலும் #மலம்_கழிப்பதற்கான_உணர்வு ஏற்படவில்லை என்பதுதான் அதுவும் ஓரிரு நாட்களல்ல ; 8 வருடங்களுக்கும் மேலாக

மலச்சிக்கலை மட்டும் பார்த்து விடாமல்,
மலம் போக வேண்டும் என்ற உணர்வே ஏன் இவருக்கு பல ஆண்டுகளாக இல்லை?”

என்பதை கவனமாக அவருடைய நாடியை பரிசோதனை செய்து கண்டறிந்து நோயாளிக்கு நம்பிக்கையும் தந்து சிகிச்சையளித்தோம்.
⭐ அதன் பிறகு ஏற்பட்ட மாற்றம்…
Treatment தொடங்கிய பின்னர் follow-up-ல் நோயாளி தெரிவித்த முதல் முக்கியமான மாற்றம்:
“இப்போது மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மீண்டும் வருகிறது.”
பல ஆண்டுகளாக இல்லாமல் போயிருந்த அந்த இயல்பான bowel urge மீண்டும் தோன்றியது.

தொடர்ந்து treatment மற்றும் follow-up மேற்கொண்ட 2–3 மாதங்களில், bowel movement மேலும் சீராகி, முன்பு இருந்த மலச்சிக்கல் மற்றும் மலம் கழிப்பதில் இருந்த சிரமம் பெருமளவு குறைந்ததாக நோயாளி தெரிவித்தார்.

“காலடியில் தீர்வை வைத்துக்கொண்டே நான் பல இடங்களுக்கும் அலைந்திருக்கிறேன் என்று தனது உணர்வை பகிர்ந்துகொண்டார்."

“இப்போது பல நோயாளிகளையும் நான் உங்களிடத்தில் போகச்சொல்லி சிபாரிசுசெய்து வருகிறேன் என்று ஆனந்தப்பெருக்குடன் கூறினார்."

🌱 8 ஆண்டுகளாக இருந்த ஒரு பிரச்சனைக்கு இப்போது நிரந்தர தீர்வு கிடைத்தது.
அல்ஹம்துலில்லா

இந்த நோய்க்கு உங்களிடத்தில் தீர்வு உள்ளதா என்று தேடும் நோயாளிகளுக்கு நாம் வழங்கிவரும் SUCCESS STORIES அனுபவபூர்வமான பதிலாக இருக்கும்.

Dr. M R Mohamed Rauhfee
BSMS (Hons), UoJ (SL)
PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician

🌿 BADUR NISHA HEALTH CARE
Dispensary & Clinic
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞076 743 9512
🗓️ Consultation by prior booking
Siddha & Integrative Healthcare | Chronic Care

24/09/2026

“ #மாத்திரை_எடுத்தால்தான்_மாதவிடாய்_வரும்…”
என்ற நிலையில் இருந்த 23 வயது இளம் பெண்ணின் பயணம்.
சில பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு சாதாரணமான மாதாந்திர நிகழ்வாக இருக்காது.
ஒரு மாதம் வரும்…
அடுத்த மாதம் வராது…
மூன்று அல்லது நான்கு மாதங்கள் கடந்தும் வராமல் போகும்…
அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தவர்தான்
23 வயதுடைய இந்த இளம் பெண்.

2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த
கடுமையான கழுத்துவலி, முதுகுவலி,
அதனுடன் அதிகமான வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளும் இருந்தன.

மாதவிடாய் சுழற்சியும் மிகவும் சீரற்றதாக இருந்தது.
முன்னர் மேற்கொண்ட சிகிச்சை முறையில்,
மருந்துகளைப் பயன்படுத்தியபோதுதான் மாதவிடாய் ஏற்படும் நிலை இருந்ததாக அவருடைய மருத்துவ வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நிலையில்தான் அவர் எமது சிகிச்சையை நாடி வந்தார்.

───

சிகிச்சைக்குப் பிறகு…
அடுத்தடுத்த மாதங்களில் சில முக்கியமான மாற்றங்கள் தென்படத் தொடங்கின.
கழுத்துவலி குறைந்தது.
முதுகுவலி குறைந்தது.
வயிற்று தொடர்பான அசௌகரியங்கள் குறைந்தன.
அதிகமான வெள்ளைப்படுதலும் படிப்படியாகக் குறைந்தது.
ஆனால்…
மாதவிடாய் மட்டும் உடனடியாக வரவில்லை.
ஒரு மாதம் கடந்தது.
இரண்டு மாதங்கள் கடந்தன.
மூன்று மாதங்கள் கடந்தன.
நான்கு மாதங்களாகியும் மாதவிடாய் ஏற்படவில்லை.
அந்த நேரத்தில்,
“மாற்றமே இல்லையே…” என்று நம்பிக்கையை இழந்துவிடுவது மிகவும் எளிது.
ஆனால் சிகிச்சைப் பயணத்தை பொறுமையுடன் தொடர்ந்து மேற்கொண்டோம்.
பின்னர்…
நான்கு மாதங்களுக்குப் பிறகு — மாதவிடாய் இயற்கையாக ஏற்பட்டது.
அதற்குப் பிறகு வந்த மாதங்களில்,
முன்பு இருந்த நீண்ட இடைவெளி இல்லாமல்,
மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து சீராகத் தொடங்கியது.
இன்று, இந்த மாற்றம் அந்த நோயாளிக்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கிறது.

───

ஏன் இந்த Success Story-யை நாம் பகிர்கிறோம்?
இது ஒரு நோயாளியின் கதையை மட்டும் சொல்லுவதற்காக அல்ல.
இதேபோன்று,
“மாதவிடாய் சரியாக வரவில்லை…”
“பல மாதங்களுக்கு ஒருமுறைதான் வருகிறது…”
“மருந்து எடுத்தால்தான் வருகிறது…”
“பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை…”
என்று நீண்டகாலமாகத் தீர்வு தேடி வரும் பெண்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லவே இந்த அனுபவத்தைப் பகிர்கிறோம்:
நீண்ட காலமாக ஒரு பிரச்சினை இருந்து வருகிறது என்பதற்காக, நம்பிக்கையை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை.
ஒரு சிகிச்சையின் முடிவு சில நேரங்களில் உடனடியாகத் தெரியாமல் இருக்கலாம்.
சில மாற்றங்களுக்கு நேரமும், தொடர்ச்சியான கவனிப்பும், பொறுமையும் தேவைப்படலாம்.
இந்த நோயாளியின் அனுபவம்,
அதே போன்ற பிரச்சினையுடன் சிகிச்சையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு,
“எனக்கும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?”
என்ற கேள்விக்கு ஒரு அனுபவப்பூர்வமான நம்பிக்கையை வழங்கக்கூடும்.
அதற்காகத்தான் எமது மருத்துவப் பயணத்தில் நேரடியாகக் காணப்படும் நோயாளி அனுபவங்களையும் தொடர்ந்து பதிவு செய்து பகிர்ந்து வருகிறோம்.

ஒரு Success Story —
ஒருவரின் பயணம் மட்டுமல்ல.
இன்னொருவருக்கு நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு அனுபவமும் கூட.
Alhamdulillah.

நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

Dr. M R Mohamed Rauhfee
BSMS (Hons), UoJ (SL)
PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician

🌿 BADUR NISHA HEALTH CARE
Dispensary & Clinic
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞076 743 9512
🗓️ Consultation by prior booking
Siddha & Integrative Healthcare | Chronic Care

23/09/2026

மிகவும் கடுமையான நிலையில் வந்த Re**al Cancer நோயாளி…
சிகிச்சைக்குப் பிறகு காணப்பட்ட சில மாற்றங்கள்.

சில நோய்களின் நிலையில்,
“இனி என்ன செய்ய முடியும்?” என்று தோன்றும் அளவுக்கு நிலைமை கடுமையாக இருக்கலாம்.

ஆனால் அத்தகைய நேரங்களிலும்,
நம்பிக்கையை இழக்காமல் கிடைக்கக்கூடிய வழிகளில் முயற்சி செய்வதும், நோயாளியின் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனமாகப் பதிவு செய்வதும் முக்கியம்.

📌 முதல் வருகையில்

இந்த நோயாளர் ஏற்கனவே Re**al Adenocarcinoma என biopsy மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தார்.

CT scan-ல்:

• T3N2M1 என radiological staging குறிப்பிடப்பட்டிருந்தது
• Re**al tumour
• Regional lymph-node involvement
• Multiple liver secondaries என report செய்யப்பட்டது
• Lung secondaries காணப்படவில்லை

இதற்கு முன்பே சுமார் ஒரு வருடம் chemotherapy எடுத்ததாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும் நோயாளர் தெரிவித்தார்.

மேலும் பல கடுமையான அறிகுறிகளுடன் வந்தார்:

• மலம் கழிப்பதில் சிரமம்
• அடிக்கடி மலம் கழித்தல்
• Loose stool-உடன் bleeding per re**um(கருப்பான மலம் - மலவாயிலால் இரத்தம் வெளியேறல்)
• வலியுடன் மலம் வெளியேறுதல்
• ஆசனத்தில் உட்கார முடியாத அளவிற்கு கடுமையான மூலக்கடுப்பு மற்றும் வலி
• வயிற்று வலி மற்றும் வயிற்று வீக்கம்
• உணவு உட்கொள்வதில் சிரமம்
• காய்ச்சல்
• இருமல்
• உடல் சோர்வு
• தூக்கமின்மை
• மூச்சுத்திணறல்
• கால்களில் weakness / numbness உள்ளிட்ட பல complaints

📌 சிகிச்சைக்குப் பிறகு காணப்பட்ட மாற்றங்கள்

Follow-up-ல் நோயாளர் தெரிவித்த மற்றும் எங்களால் பதிவு செய்யப்பட்ட சில மாற்றங்கள்:

✓ கடுமையான மூலக்கடுப்பு மற்றும் வலி குறைந்து, ஆசனத்தில் உட்கார முடியும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

✓ (Bleeding per re**um )மலவாயிலால் இரத்தம் வெளியேறுவது முற்றிலும் நின்றது.

✓ அடிக்கடி bowel opening குறைந்தது.

✓ இருமல் குறைந்தது.

✓ வயிற்று வலி குறைந்தது.

✓ கால்களில் இருந்த discomfort / weakness குறைந்ததாக தெரிவித்தார்.

✓ முக்கியமாக, வயிற்று வீக்கம் கணிசமாகக் குறைந்தது.

பின்னர் follow-up-களிலும் சில அறிகுறிகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதிலும், வயிற்று வீக்கம் போன்ற சில அறிகுறிகளில் மேலும் முன்னேற்றம் காணப்பட்டது.

🌿 எங்கள் அணுகுமுறை

Advanced stage-ல் இருக்கும் நோயாளிகளிடம்,

“எதுவும் செய்ய முடியாது” என்று நம்பிக்கையை இழப்பதற்குப் பதிலாக,
நோயாளியின் தற்போதைய நிலையை புரிந்து கொண்டு,
கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிகளில் முயற்சி செய்து,
ஒவ்வொரு மாற்றத்தையும் கவனமாகக் கண்காணிப்பது முக்கியம்.

இந்த பதிவு ஒரு cancer cure claim அல்ல.

CT scan-ல் காணப்பட்ட metastasis மறைந்துவிட்டது அல்லது cancer stage மாறிவிட்டது என்று இந்த symptom changes மூலம் மட்டும் கூற முடியாது.

ஆனால்…

கடுமையான நிலையில் இருந்த ஒரு நோயாளிக்கு,
சில முக்கியமான அறிகுறிகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களும்
எங்களுக்கு ஒரு முக்கியமான clinical observation.

❤️ நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்.

ஒவ்வொரு நோயாளியின் நிலையும் வேறுபட்டது.
ஒவ்வொரு உடலும் சிகிச்சைக்கு வேறுபட்ட முறையில் பதிலளிக்கலாம்.

முயற்சி இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்கட்டும்.
நம்பிக்கையுடன், பொறுமையுடன், தொடர்ந்து கண்காணிப்புடன் பயணிப்போம்.

BADUR NISHA HEALTH CARE
Dispensary | Pharmacy | Clinic – Eravur

Dr. M. R. M. Rauhfee
BSMS (Hons), PGCSVT (MAHE, Manipal, India)
Consultant Siddha Physician
Special Interest in Chronic Diseases

📞 076 743 9512

22/09/2026

“ #டாக்டர்… #இரண்டு_வருடங்களாக_என்_மகன்_இப்படித்தான்_இருக்கிறான்.
#தயவுசெய்து_அவரின்_நோயை_குணப்படுத்தி_தாருங்கள்…”

சில வார்த்தைகள் ஒரு தாயின் வேதனையையும்,
ஒரு குடும்பத்தின் நம்பிக்கையையும் முழுமையாக வெளிப்படுத்திவிடும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு,
மீராவோடை பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுடைய 14 வயது மாணவனை எம்மிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த மாணவன் தொடர்ந்து வந்த கடுமையான, தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்திருந்தார்.

இந்த இரண்டு ஆண்டுகளில்…
பல மருத்துவமனைகள்.
பல மருத்துவ ஆலோசனைகள்.
பலவிதமான சிகிச்சை முயற்சிகள்.

ஆனால்…
அவருடைய வேதனை மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை.
ஒரு தாய் தனது மகன் தினமும் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது எவ்வளவு வேதனையானது…
அதிலும், அந்தப் பிரச்சினை அவரது படிப்பையும் கவனத்தையும் பாதிக்கத் தொடங்கியிருந்தது.
அந்த நிலையில்தான் அவர்கள் எம்மை அணுகினர்.

───

❤️ ஒரு தாயின் வேண்டுகோள்…
முதல் consultation-க்கு
தாயும் தந்தையும் இணைந்து தங்களுடைய மகனை அழைத்து வந்திருந்தார்கள்.

அவருடைய மருத்துவ வரலாறு, நீண்டகாலமாக இருந்த அறிகுறிகள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் அனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்தோம்.

அவருடைய தாயார் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியிருந்தார்:
“டாக்டர்… இரண்டு வருடங்களாக என் மகன் இப்படித்தான் இருக்கிறான். நாங்கள் செய்யாத சிகிச்சை இல்லை. ஆனாலும் அவனுடைய வேதனை குறையவில்லை.
இந்தத் தலைவலி காரணமாக அவனால் படிப்பில்கூட சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உங்களைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் இங்கு வந்திருக்கிறோம்.
தயவுசெய்து அவருக்கு உதவுங்கள்…”
ஒரு மருத்துவரிடம் ஒரு குடும்பம் இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் வரும்போது…
அது ஒரு consultation மட்டும் அல்ல.
அது ஒரு குடும்பம் ஒப்படைக்கும் நம்பிக்கை.

───

🔎 ஆரம்பத்தில் காணப்பட்ட முக்கிய அறிகுறிகள்
அவருக்கு கடுமையான தலைவலியுடன்,
• தலைச்சுற்றல்
• தொடர்ந்து மூக்கில் நீர் வடிதல்
• கண்களில் அரிப்பு
• நீண்டகால மலச்சிக்கல்
• 2–3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மலம் கழிக்கும் நிலை
• படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம்
போன்ற பல அறிகுறிகளும் இருந்தன.

அவருடைய மருத்துவ வரலாறும் அறிகுறிகளும் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டபோது, நீண்டகால பீனிசம் (Chronic Sinusitis) தொடர்பான பிரச்சினையாகக் நோய்நிதானம் செய்யப்பட்டு, அதற்கேற்றவாறு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

───

🌿 மாற்றம் தொடங்கியது…
முதல் மாத follow-up…
குடும்பத்தினர் ஏற்பட்டிருந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இரண்டாவது மாத follow-up…
முன்னேற்றம் மேலும் தெளிவாகத் தெரிந்தது.
மூன்றாவது மாதம்…
அவர் தனது தந்தையுடன் மீண்டும் எம்மைச் சந்தித்தார்.

இந்த முறை, அவருடைய முகத்தில் இருந்த நிம்மதியே ஒரு மாற்றத்தைச் சொல்லியது.

அவருடைய சொந்த வார்த்தைகளில்:
**“இப்போது சுமார் 90% வரை நன்றாகிவிட்டேன்.

முன்பிருந்த பிரச்சினைகள் மிகவும் குறைந்துவிட்டன.
இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன்.”**

ஒரு காலத்தில் தினசரி வாழ்க்கையையே பாதித்திருந்த பிரச்சினை…
இப்போது அவருடைய வாழ்க்கையில் இல்லை.

ஒரு தாயின் கவலை குறைந்தது.
ஒரு தந்தையின் மனதில் நிம்மதி பிறந்தது.
ஒரு மாணவனின் முகத்தில் மீண்டும் நம்பிக்கை தெரிந்தது.

───

🎥 “என்னுடைய அனுபவத்தை நான் சொல்ல விரும்புகிறேன்…”
அவருடைய இந்த மாற்றத்தை
அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே பதிவு செய்யுமாறு கேட்டபோது, அவர் தனது அனுபவத்தை ஒரு Testimonial Video-வாக பகிர்ந்துகொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அனுபவித்த வேதனையையும்…
சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றத்தையும்…
அவர் மிகவும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், நீண்டகாலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு எமது சிகிச்சையைப் பெற்ற சில நோயாளிகளின் அனுபவங்களையும் தான் மற்றவர்களிடமிருந்து கேட்டறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நம்பிக்கையுடன்தான் தாங்களும் எம்மை அணுகியதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தனது அனுபவத்தின் அடிப்படையில், நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நம்பிக்கையுடன் சிகிச்சையை நாடுமாறும் அவர் கூறினார்.

───

❤️ ஒரு மருத்துவருக்கு கிடைக்கும் மிக அழகான வெற்றி…
ஒரு நோயாளி,
“டாக்டர்… இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.”
என்று மகிழ்ச்சியுடன் சொல்வது.
ஒரு தாய்,
“என் மகன் இப்போது நிம்மதியாக இருக்கிறான்.”
என்று உணர்வது.
ஒரு மாணவன்,
தன்னுடைய உடல்நலக் கவலையைத் தாண்டி மீண்டும் தனது படிப்பையும் எதிர்காலத்தையும் நோக்கிப் பார்க்கத் தொடங்குவது.

இதற்காகத்தான்
மருத்துவம் என்பது வெறும் நோயைப் பார்ப்பது மட்டுமல்ல.
ஒரு மனிதனின் வேதனையைப் புரிந்துகொள்வது.
அவருடைய குடும்பத்தின் நம்பிக்கையை மதிப்பது.
அவருடன் தொடர்ந்து பயணிப்பது.

🌿 சில நேரங்களில் ஒரு சிகிச்சையின் மிகப்பெரிய வெற்றி,
ஒரு நோயாளியின் முகத்தில் மீண்டும் தோன்றும் அந்த நிம்மதியான புன்னகைதான்.

இது அந்த 14 வயது மாணவனின் பயணம்.
இரண்டு ஆண்டுகளாக நீடித்த வேதனையிலிருந்து…
மூன்று மாதங்களில் மலர்ந்த ஒரு புதிய நம்பிக்கையின் பயணம்.

───

🌿 நீண்டகாலமாகத் தொடரும் உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள்.
சரியான மதிப்பீட்டைப் பெறுங்கள்.
நம்பிக்கையுடன் சிகிச்சையைத் தொடங்குங்கள்.
உங்கள் ஆரோக்கியப் பயணத்தில்
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
BADUR NISHA HEALTH CARE
Siddha & Integrative Healthcare

Dr. M.R.M. Rauhfee
BSMS (Hons), UoJ (SL)
PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician
📍 Eravur, Sri Lanka
📞 076 743 9512

21/09/2026

“ #இனி_என்ன_ஆகுமோ…?” #என்று_அனைவரும்_அஞ்சிய_நிலையில்_இருந்த_65_வயது_பெண்…

65 வயதுடைய ஒரு பெண் நோயாளி.
சுமார் 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய், அதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளாக இதய நோய், கடந்த 3–4 ஆண்டுகளாக கல்லீரல் தொடர்பான தீவிர உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு என, நீண்டகாலமாக பல்வேறு நோய்நிலைகளுடன் போராடி வந்தவர்.

General Physician, General Surgeon, Consultant Physician, Cardiologist, Nephrologist, Endocrinologist உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, பல மருத்துவ நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

கொழும்பு உட்பட பல்வேறு மருத்துவமனைகளையும் அணுகியிருந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில்…
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது.
வயிறு மிகவும் வீங்கியது.
சாப்பிட முடியாத நிலை.
இரவில் நிம்மதியாக உறங்க முடியாத நிலை.
சிறுநீர் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகள்.
உடல் முழுவதும் கடுமையான பலவீனம்.
மூச்சுத்திணறல்.
படுக்கையிலேயே கிடக்கும் நிலை.
ஒரு கட்டத்தில் தெளிவாகப் பேசக்கூட முடியாத அளவுக்கு அவரது நிலை மோசமடைந்திருந்தது.

அவரைப் பார்த்த நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்திருந்தனர்.
அந்த நேரத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்களின் மனதில் ஒரே கேள்விதான்:
“இனி என்ன ஆகுமோ…?”
அவருடைய மகன் பணியாற்றும் அலுவலகத்தின் Staff-களும் அவரது நிலைமையை அறிந்து அவரைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர்.

───

அந்த நிலையில்தான் எமது கிளினிக்கிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது…
நோயாளியின் மகன் BADUR NISHA HEALTH CARE கிளினிக்கிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது தாயாரின் நிலைமையை எமது Assistant இடம் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்த பல்வேறு மருத்துவப் பதிவுகள் மற்றும் Clinic Records-ன் பிரதிகளையும் கொண்டு வந்தனர்.
Cardiology…
Nephrology…
Endocrinology…
கல்லீரல் தொடர்பான மருத்துவப் பதிவுகள்…
இவ்வாறு பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனை முடிவுகள் மற்றும் நீண்டகால மருத்துவ வரலாறு அடங்கியிருந்த அந்த ஆவணங்களை நான் முழுமையாகப் பார்த்து, அவரது நிலைமையைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டேன்.

அதன்பின்னர், அவரது மகன் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்:
“டாக்டர், நீங்கள் ஒருமுறை உம்மாவை நேரில் வந்து பார்த்துவிடுங்கள்…”
பொதுவாக நான் வீடு தேடிச் சென்று நோயாளிகளைப் பார்ப்பதில்லை.

ஆனால், நோயாளியின் நிலைமையையும் குடும்பத்தினரின் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு, அவரை நேரில் சென்று பார்க்க ஒப்புக்கொண்டேன்.

───

நான் அந்த வீட்டிற்குச் சென்றபோது…
நோயாளியைப் பார்ப்பதற்காக பலர் ஏற்கனவே அங்கு இருந்தனர்.
உறவினர்கள்…
அயலவர்கள்…
நண்பர்கள்…
மேலும், அவரது மகன் பணியாற்றும் அலுவலகத்தின் Staff-களும் அவரது தாயாரைப் பார்க்க வந்திருந்தனர்.

நான் நோயாளியை நேரில் பரிசோதித்தேன்.
அவருடைய நாடிநிலையைப் பார்த்தேன்.
அவருடைய உடல்நிலையை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்தேன்.
அந்த நேரத்தில் அவர் தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்தார்.
நோயாளியின் நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னர், சிகிச்சையை ஆரம்பித்தோம்.

───

அடுத்த நாள் வந்த ஒரு தொலைபேசி அழைப்பு…
அடுத்த நாள், அவரது மகன் எமது கிளினிக்கிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, எமது Assistant-ிடம் கூறிய செய்தி:
“நேற்றிரவுதான் உம்மா நிம்மதியாகத் தூங்கியிருக்கிறார்…”
அதன்பிறகு, அவரது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவர் எழுந்திருக்கத் தொடங்கினார்.
தெளிவான உணர்வு திரும்பியதாக தெரிவித்தனர்.
சிறுநீர் வெளியேற்றமும் மலச்செயலும் சீராகத் தொடங்கியதாக கூறினர்.
உடல்நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

பின்னர் எங்களுக்கு வந்த செய்தி…
இந்த மாற்றம் குடும்பத்தினரிடமிருந்து மட்டும் தெரிவிக்கப்படவில்லை.
அவரைச் சுற்றியிருந்த பல அயலவர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நேரடியாக தகவல்கள் எங்களிடம் வந்தன.
சில நாட்களுக்கு முன்பு மிகவும் மோசமான நிலையில் படுக்கையில் இருந்த அவரை நேரில் பார்த்திருந்தவர்களே,
“அவர் எழுந்து வந்துவிட்டார்…”
என்று தெரிவித்தனர்.

அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அவர்கள் நேரடியாகக் கவனித்திருந்தனர்.
சுமார் ஒரு வாரத்திற்குள், ஆரம்பத்தில் இருந்த மிக மோசமான நிலையிலிருந்து அவர் கணிசமாக மீண்டு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

ஒரு குடும்பத்தின் கவலையிலிருந்து மீண்டும் நம்பிக்கைக்கான பயணம்…
சில நாட்களுக்கு முன்பு வரை அந்த வீட்டில் நிலவிய கவலை…
அதன்பிறகு வந்த “அவர் எழுந்துவிட்டார்” என்ற செய்தி…
ஒரு குடும்பத்திற்கு அது வெறும் ஒரு செய்தி அல்ல.
மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு செய்தி.

ஒரு நோயாளியின் நீண்டகால மருத்துவ வரலாறு, பல்வேறு மருத்துவப் பதிவுகள் மற்றும் அந்நேரத்திய உடல்நிலையை கவனமாக மதிப்பீடு செய்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின்னர், குடும்பத்தினரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் கவனித்த முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் ஒரு உண்மையான நோயாளி அனுபவம் இது.

எமது மருத்துவ அனுபவங்களில் எமது நினைவில் ஆழமாகப் பதிந்த ஒரு Success Story.

BADUR NISHA HEALTH CARE – ERAVUR
Dr. M. R. M. Rauhfee
BSMS (Hons), PGCSVT (MAHE, Manipal, India)
Consultant Siddha Physician
Special Interest in Incurable Chronic Diseases
Healing with Compassion

20/09/2026

“ #இந்த_நோய்க்கு_சிகிச்சை_உள்ளதா?”

“இதைப்போன்ற நோய்களை இதற்கு முன்பு மருத்துவர் சிகிச்சையளித்து முன்னேற்றம் பெற்றிருக்கிறார்களா?”

எமது கிளினிக்கைத் தொடர்புகொள்ளும் பல நோயாளிகள் இன்றும் இந்தக் கேள்விகளையே முதலில் கேட்கிறார்கள்.
அவர்களின் சந்தேகம் நியாயமானதே.
ஏனெனில், நீண்டகாலமாக ஒரு நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒருவர், புதிய சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்,
“இதைப்போன்ற நோய்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் உள்ளார்களா?”
என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவது இயல்பானது.

பல நாட்பட்ட மற்றும் சிக்கலான நோய்நிலைகளில், எமது சிகிச்சையைப் பெற்று முன்னேற்றம் கண்ட நோயாளிகளின் அனுபவங்கள் எமக்கு உள்ளன.

அவற்றில் கிடைத்துள்ள Testimonial Videos, Reports மற்றும் நோயாளிகளின் அனுபவப் பதிவுகளில் சிலவற்றை எமது Facebook பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளோம்.
ஆனால், எமது அனுபவங்கள் அதோடு முடிவடைவதில்லை.

எமது சிகிச்சையில் முன்னேற்றம் பெற்ற பல நோயாளிகளின் அனுபவங்கள் இன்னும் எமது Facebook பக்கத்தில் பதிவாகவில்லை.

அவற்றில், எமது நினைவில் தெளிவாக உள்ள சில முக்கியமான Success Stories-களை இனி உங்களுடன் பகிர இருக்கிறோம்.

பல ஆண்டுகளாக நீடித்த நோய்கள்…
சிக்கலான உடல்நிலைகள்…
பல இடங்களில் சிகிச்சை பெற்றும் தொடர்ந்த பிரச்சினைகள்…
மீண்டும் நம்பிக்கையுடன் எம்மை அணுகிய நோயாளிகள்…
இவ்வாறான பல நோயாளிகளின் சிகிச்சைப் பயணங்களில் கிடைத்த முன்னேற்றங்களே இந்த Success Stories.

ஒவ்வொரு கதைக்கும் பின்னாலும்
ஒரு நோயாளி இருக்கிறார்.
ஒரு குடும்பத்தின் கவலை இருக்கிறது.
ஒரு நீண்டகால சிகிச்சைப் பயணம் இருக்கிறது.
அதன் பின்னர் ஒரு மாற்றமும் இருக்கிறது.
அந்த அனுபவங்களில் சிலவற்றை, உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கில் பகிர்கிறோம்.

உங்களுக்கும் இதுபோன்ற ஒரு நோய்நிலை இருக்கிறதா?
பல ஆண்டுகளாக நீடிக்கும் நோய்…
மீண்டும் மீண்டும் தோன்றும் பிரச்சினை…
நீண்டகாலமாக சிகிச்சையில் இருந்தும் தொடரும் தொந்தரவு…
அல்லது,
“இனி என்ன செய்வது?”
என்று தெரியாமல் இருக்கும் ஒரு நிலை…
அப்படியானால், உங்கள் நோய்நிலை குறித்து எங்களை நேரடியாக அணுகி ஆலோசனை பெறலாம்.

உங்கள் நோய்நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சை அணுகுமுறை எவ்வாறு இருக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்கலாம்.

📌 எமது Facebook பக்கத்தில் உள்ள Testimonial Videos & Success Stories-ஐ பாருங்கள்.
📌 இதுபோன்ற நோய்நிலைகளில் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவங்களை அறிந்துகொள்ளுங்கள்.
📌 உங்கள் நோய்நிலையைப் பற்றி நேரடியாக ஆலோசனை பெறுங்கள்.

ஒரு Success Story — ஒருவரின் அனுபவம் மட்டுமல்ல.
அதே பாதையில் பயணிக்கும் மற்றொருவருக்கு அது ஒரு நம்பிக்கையின் தொடக்கமாக இருக்கலாம்.

Dr. M. R. M. Rauhfee
BSMS (Hons), PGCSVT (MAHE, Manipal, India)
Consultant Siddha Physician
Special Interest in Incurable Chronic Diseases

BADUR NISHA HEALTH CARE
Dispensary | Pharmacy | Clinic – Eravur

19/09/2026

🌿 **BADUR NISHA HEALTH CARE**

# **SUCCESS STORY – 01**

# # # 🧠 Parkinson’s Disease (நடுக்குவாதம்)

**பல ஆண்டுகளாக Parkinson’s Disease பாதிப்பில் இருந்த 65 வயது நோயாளியின் சிகிச்சை அனுபவம்**

நாட்பட்ட மற்றும் சிக்கலான நோய்நிலைகளுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் எமது சிகிச்சையை நாடி வருகின்றனர்.

அவ்வாறான ஒரு நோயாளிதான் **கண்டி – கல்ஹின்னை** பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்.

# # # நோயாளியின் முக்கிய பிரச்சினைகள்

• 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
• 6 ஆண்டுகளுக்கும் மேலாக Parkinson’s Disease / நடுக்குவாதம்
• உடல் நடுக்கம்
• கை, கால்களில் அதிகமான இறுக்கம் மற்றும் விறைப்பு (Stiffness)
• விரல்களின் இயக்கம் குறைதல்
• கால்தசைகளில் அதிகமான இறுக்கம்
• நினைவாற்றல் குறைவு
• பேச்சு தெளிவின்மை
• உடல் வெப்பம் அதிகமாக உணரப்படுதல்
• கடுமையான உடல் பலவீனம்

போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் சிரமமான நிலையில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

# # # 🚐 முதல் வருகையின் போது...

கண்டி – கல்ஹின்னையிலிருந்து வேனில் அழைத்து வரும்போது, பயணத்தின் இடையில் பலமுறை வாகனத்தை நிறுத்தி அவரை இறக்கி ஓய்வெடுக்கச் செய்ய வேண்டியிருந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.

மேலும், கை, கால்கள் மற்றும் விரல்கள் மிகவும் இறுக்கமாகவும் விறைப்பாகவும் இருந்ததாகவும், அவற்றை நேராக்க முயன்றாலும் எளிதில் இயல்பான நிலைக்கு வராத அளவிற்கு stiffness இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

# # # 📅 ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு...

அடுத்த மாதம் மீண்டும் சிகிச்சைக்காக வந்தபோது அவரது மகனிடம்,

**“கடந்த முறை வந்தபோதும் இப்போதும் என்ன வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள்?”**

என்று கேட்டோம்.

அவர் கூறிய பதில்:

**“கடந்த முறை வேனில் வரும்போது பல இடங்களில் நிறுத்தி அவரை இறக்கி ஓய்வெடுக்கச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை ஒரு இடத்திலும் நிறுத்தாமல் தொடர்ந்து பயணம் செய்து இங்கு வந்து சேர்ந்தோம்.”**

என்று தெரிவித்தார்.

# # # ✋ கை, கால்கள் மற்றும் விரல்களின் stiffness

முன்பு மிகவும் இறுக்கமாகவும் விறைப்பாகவும் இருந்த விரல்களில் தற்போது தளர்வு மற்றும் இயக்கத்தில் முன்னேற்றம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதேபோல், கை மற்றும் கால்களில் இருந்த stiffness-உம் குறைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

குறிப்பாக காலில் இருந்த தசை இறுக்கத்திலும் முன்பைவிட தளர்வு ஏற்பட்டிருப்பதை குடும்பத்தினர் கவனித்ததாக தெரிவித்தனர்.

# # # 🧠 நடுக்கம் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம்

முன்பு அதிகமாக இருந்த உடல் நடுக்கம் தற்போது குறைந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும், முன்பு திடீரென சத்தமாகக் கத்துவது மற்றும் அமைதியின்றி இருப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி இருந்ததாகவும், தற்போது அவை குறைந்து அவர் சற்று அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்தார்.

சொல்லப்படும் விஷயங்களை ஓரளவு புரிந்துகொண்டு பதிலளிப்பதிலும் முன்னேற்றம் இருப்பதாக குடும்பத்தினர் கவனித்ததாக தெரிவித்தனர்.

# # # ⭐ ஒரு மாதத்தில் குடும்பத்தினர் கவனித்த மாற்றங்கள்

**✔️ பயணத்தைத் தாங்கும் திறனில் முன்னேற்றம்**
**✔️ கை, கால்கள் மற்றும் விரல்களின் stiffness குறைவு**
**✔️ தசை இறுக்கத்தில் தளர்வு**
**✔️ உடல் நடுக்கத்தில் குறைவு**
**✔️ அமைதியின்மை குறைவு**
**✔️ தொடர்பு மற்றும் பதிலளிப்பதில் முன்னேற்றம்**

# # # 🌿 எமது சிகிச்சை அனுபவத்தில்...

Parkinson’s Disease போன்ற நீண்டகால நரம்பியல் நோய்நிலைகளுடன் எம்மை அணுகிய சில நோயாளிகளிடம், சிகிச்சைக்குப் பின்னர் அறிகுறிகளில் முன்னேற்றங்களை நாம் அவதானித்துள்ளோம்.

சில நோயாளிகளிடம் பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகளின் அளவு அல்லது பயன்பாட்டில் மாற்றங்கள் தேவைப்பட்டபோது, அவர்களின் வழக்கமான மருத்துவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆலோசனைகளுக்குப் பின்னரும் முன்னேற்றங்கள் காணப்பட்ட அனுபவங்கள் எமக்கு உள்ளன.

**இறை அருளால், Parkinson’s Disease போன்ற சிக்கலான நாட்பட்ட நோய்நிலைகளில் எமது சிகிச்சை அனுபவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம்.**

இந்த அனுபவங்கள், இதேபோன்ற நோய்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளுக்கு தங்களது சிகிச்சை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும்.

# # # 📞 உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சினை உள்ளதா?

Parkinson’s Disease / நடுக்குவாதம் அல்லது இதுபோன்ற நீண்டகால நரம்பியல் பிரச்சினைகளால் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் **தற்போதைய மருத்துவ நிலை, பரிசோதனை அறிக்கைகள் மற்றும் எடுத்துவரும் சிகிச்சைகள் பற்றிய முழுமையான தகவல்களுடன்** எங்களை அணுகி ஆலோசனை பெறலாம்.

**ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோயின் தீவிரம் மற்றும் சிகிச்சைக்கான பதில் வேறுபடும்.**

இங்கு பகிரப்படும் அனுபவம் **ஒரு குறிப்பிட்ட நோயாளியின் தனிப்பட்ட சிகிச்சை அனுபவமாகும்.**

━━━━━━━━━━━━━━

🌿 **BADUR NISHA HEALTH CARE**
**Dispensary & Clinic**

👨‍⚕️ **Dr. M R Mohamed Rauhfee**
**BSMS (Hons) | PGCSVT**
**Consultant Siddha Physician**

🏥 **119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka**
📞 **076 743 9512**

🌿 **Chronic-Care Siddha Consultant**

**தனிநபர் உடல்நிலைக்கேற்ப ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதல்**

**இதைப்போன்ற இன்னும் பல Success Stories-களை தொடர்ந்து பகிர்கிறோம்…**

12/09/2026

**3 வருடங்களாக சிகிச்சை…
பல மருந்துகள்…
ஆனால் தொடர்ந்து வேதனை.**
**2 மாதங்களுக்குப் பிறகு…
ஒரு பெரிய புன்னகை.
“சுமார் 75% நோயறிகுறிகள் குறைந்துவிட்டது.”**

இது ஒரு உண்மையான நோயாளியின் அனுபவம்.

───

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு Kurunegala-வில் இருந்து ஒரு patient எங்களை அணுகினார்.

அவருக்கு:
🔹 Chronic Liver Disease (CLCD) - நாற்பட்ட கல்லீரல் செயலிழப்பு
🔹 Early Portal Hypertension
🔹 Diabetes
ஆகிய medical conditions இருந்தன.

முன்னர் blood vomiting ஏற்பட்ட history-உம் இருந்தது.

சுமார் 3 வருடங்களாக treatment பெற்று வந்திருந்தாலும், வலியும் வேதனை யும் தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன.

அவருடைய previous treatment book-ஐ பார்த்தபோது, பல medications(ஏறத்தாழ 14-15 மருந்துகள்) prescribed செய்யப்பட்டிருந்தன.

───

🩺 எங்களை சந்தித்தபோது…
அவர் மிகவும் வேதனையோடு இருந்தார்.
Dyspnoea(மூச்சுத்திணறல்)
Upper abdominal colicky pain(மேற்பக்க வயிற்றில் கொழுவல் வலி)
Left lower limb pain(இடது கால் வலி)
Chest pain(நெஞ்சு வலி)
Itching (கடி)
போன்ற complaints இருந்தன.

Clinical examination-ல்:
SLRT — Positive
அவருடைய medical history, previous treatment மற்றும் clinical findings ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்து, எங்கள் treatment approach-ஐ ஆரம்பித்தோம்.

தொலைவில் இருந்து வர வேண்டியிருந்ததால், 2 மாதங்களுக்கு தேவையான medicines வழங்கப்பட்டு follow-up தொடரப்பட்டது.

───

❤️ 12 SEPTEMBER 2026
இன்று அவர் மீண்டும் எங்களை சந்தித்தார்.
ஆனால் இந்த முறை…
அவர் வந்த விதமே எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான surprise.
அவருடைய முகத்தில் ஒரு பெரிய smile.
அவர் கூறியது:
“என்னுடைய symptoms சுமார் 75% குறைந்துவிட்டது.”
மேலும் அவர் தெரிவித்த மாற்றங்கள்:
✅ Dyspnoea — gone
✅ Left leg pain — gone
✅ சில symptoms — completely gone
✅ Overall symptoms — சுமார் 75% reduced
மீண்டும் clinical examination செய்தபோது:
SLRT — Negative

───

🎥 பின்னர் நடந்தது…
தன்னுடைய treatment experience-ஐ அவர் testimonial video-வாக எங்களுடன் பகிர்ந்தார்.
மீண்டும் மீண்டும் “jazakallahu haira Dr” என்று கூறிய அந்த தருணம்…
ஒரு நோயாளியின் நம்பிக்கை திரும்பிய தருணம்.**

───

🤲 இதேபோன்ற நிலையில் suffering செய்பவர்களுக்காக இந்த experience-ஐ பகிர்கிறோம்.

பல வருடங்களாக treatment எடுத்தும் symptoms தொடர்கிறதா?
பல medicines இருந்தும் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லையா?

Chronic Liver Disease?
Portal Hypertension?
Diabetes?
நீண்டகால symptoms?

அப்படியானால் உங்கள் case-ஐ மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.

chronic disease cases-ஐ தொடர்ந்து கவனித்து வரும் எங்கள் clinical practice-ல், patients-ன் symptoms, clinical findings மற்றும் laboratory changes ஆகியவற்றை documented follow-up மூலம் பதிவு செய்து வருகிறோம்.

இந்த patient-ன் experience அதில் ஒரு real-life documented example.
**3 வருடங்கள் suffering செய்த ஒரு patient…
2 மாதங்களுக்குப் பிறகு 75% symptom reduction-ஐ தெரிவித்து,
Dyspnoea மற்றும் leg pain இல்லாமல்,
SLRT negative-ஆக மீண்டும் வந்தார்.**
இந்த மாற்றத்தை அவர் தானே எங்களிடம் பகிர்ந்த testimonial-ல் கூறியுள்ளார்.
**உங்கள் health journey எவ்வளவு நீண்டதாக இருந்தாலும்,
சரியான மதிப்பீடும் தொடர்ந்து கவனிப்பும் முக்கியம்.**

BADUR NISHA HEALTH CARE
Integrative Siddha Chronic Care Centre

Dr. M. R. M. Rauhfee
BSMS (Hons), UoJ (SL) | PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician
Patient testimonial shared with consent. Treatment and follow-up ongoing.
📍 Eravur, Sri Lanka

07/09/2026

“ … #வெறும் 3!” 😢
2½ #வயது_குழந்தை…

பிறந்தது முதல் Chronic Kidney Disease (CKD).
ஒரு கட்டத்தில்…
🩺 Serum Creatinine — சுமார் 900 µmol/L
🩺 eGFR — சுமார் 3 mL/min/1.73m²

அதாவது, குழந்தையின் சிறுநீரக செயல்பாடு மிகவும் கடுமையாகக் குறைந்திருந்தது.

முன்பு நடந்து, cycle ஓட்டி விளையாடிய குழந்தை…
பின்னர்…
❌ நிற்க முடியவில்லை
❌ உட்காருவதற்கும் உதவி தேவைப்பட்டது
❌ Tail-bone பகுதியில் கடுமையான வலி
❌ இரு முழங்கால்கள் மற்றும் joints மிகவும் stiff
❌ கை, கால்களை அசைக்கக்கூட வலி
❌ தொடர்ந்து அழுகை
❌ உணவு சாப்பிட முடியாமை
❌ அடிக்கடி காய்ச்சல்
❌ A**l/perianal பகுதியில் கடுமையான itching & irritation
❌ Urinary problems
குழந்தையை தூக்கினால்கூட வலியால் அழும் நிலை… 💔

───

💔 Treatment தொடங்குவதற்கு முன்பு…
05 August 2026
குழந்தையின் அம்மா எங்கள் Clinic WhatsApp-ல் அனுப்பிய message:
“உடம்பெல்லாம் வலிக்குது என்று அழுகிறார்…
முன்பு இருந்தது போல் active இல்லை…
குழந்தையைத் தூக்கவும் விடவில்லை; அவ்வளவு அழுகிறார்…”
ஒரு தாயின் அந்த சில வார்த்தைகள்…
அந்த நேரத்தில் அந்தக் குழந்தை அனுபவித்திருந்த கஷ்டத்தை வெளிப்படுத்தின. 💔

───

🏥 Dialysis குறித்து…
Nephrologists dialysis செய்யுமாறு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
குடும்பத்தினர் Kandy Hospital-ல் சுமார் 2½ ஆண்டுகளாக follow-up செய்து வந்ததாகவும், dialysis செய்து கொண்டிருந்த குழந்தைகளை நேரில் பார்த்த அனுபவம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அந்த அனுபவங்களின் காரணமாக, தங்கள் குழந்தைக்கு dialysis செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

📌 இது பெற்றோரின் தனிப்பட்ட முடிவு மட்டுமே — dialysis தேவையில்லை என்பதற்கான மருத்துவ ஆலோசனை அல்ல.

Kidney transplant குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

🩸 இன்னொரு கவலை — Hb மிகவும் குறைவு
குழந்தையின் Hb மிகவும் குறைந்திருந்ததால் blood transfusion செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் Erythropoietin injection வாரத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வந்தது.

எங்கள் treatment தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர், blood transfusion தொடர்பான தேவையும் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

பின்னர் Hb normal range-க்கு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

🌿 Treatment-க்குப் பின்னர்…
மாற்றங்கள் மெதுவாகத் தென்பட ஆரம்பித்தன.
✔️ Creatinine அதிகரிக்கும் வேகம் குறைந்தது
✔️ Blood Urea அதிகரிக்கும் வேகம் குறைந்தது
✔️ குழந்தையின் activity அதிகரித்தது
✔️ A**l itching & irritation குறைந்து மறைந்தது
✔️ காய்ச்சல் இல்லாமல் இருந்தது
✔️ வலி இல்லாமல் குழந்தையை தூக்க முடிந்தது
✔️ உதவியுடன் உட்கார ஆரம்பித்தது
✔️ நிற்க முயற்சி செய்ய ஆரம்பித்தது
✔️ மீண்டும் சிரித்து, பேசி, விளையாட ஆரம்பித்தது ❤️

ஒரு குழந்தையின் laboratory values-ல் ஏற்பட்ட மாற்றத்தை விட…
அந்தக் குழந்தையின் முகத்தில் மீண்டும் வந்த சிரிப்புதான் எங்களுக்கு மிகப் பெரிய மாற்றம். ❤️

───

📱 நேற்று வந்த Mother’s Follow-up Message…

சில நாட்களுக்கு முன்பு:
“தூக்கக்கூட விடாமல் வலியால் அழுகிறார்…”

நேற்று:
“Alhamdhulillah… இப்போது பழைய மாதிரி நன்றாக சிரித்து, பேசி, விளையாடுகிறார்… active-ஆ இருக்கிறார்.”
இந்த இரண்டு messages-க்கும் நடுவில் இருக்கும் மாற்றம்…
ஒரு மருத்துவராக எங்களை மிகவும் நெகிழச் செய்தது. ❤️

📌 Mother’s WhatsApp messages — personal details masked for the child’s privacy.

───

🤲 Alhamdulillah…
இந்தக் குழந்தை CKD-யிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டது என்று நாம் கூறவில்லை.
இது ஒரு மிகவும் தீவிரமான chronic kidney disease case.
தொடர்ந்த Nephrology follow-up, Serum Creatinine, Urea, eGFR, Hb மற்றும் தேவையான investigations தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

ஆனால்…
வலியால் அழுத குழந்தை — இன்று வலி இல்லாமல் தூக்கப்பட முடிகிறது.
நிற்க முடியாத குழந்தை — இன்று நிற்க முயற்சி செய்கிறது.
சிரிக்க முடியாத குழந்தை — இன்று மீண்டும் சிரிக்கிறது.

பேச முடியாத அளவுக்கு சோர்ந்த குழந்தை — இன்று மீண்டும் பேசுகிறது.
விளையாட முடியாத குழந்தை — இன்று மீண்டும் விளையாடுகிறது. ❤️

ஒரு மருத்துவராக…
ஒரு குழந்தை மீண்டும் சிரிப்பதைப் பார்ப்பதைவிட பெரிய வெற்றி வேறு என்ன இருக்க முடியும்? ❤️

Alhamdulillahi Rabbil Aalameen. 🤲

Patient/family-reported history and treatment response are presented as reported observations. Individual results may vary. This case does not imply that CKD has been cured, and ongoing specialist monitoring remains essential.

🏥 BADUR NISHA HEALTH CARE
Healing with Care, Rooted in Trust.
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments: 076 743 9512

Dr. M. R. Mohamed Rauhfee
BSMS (Hons), UoJ (SL) | PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician

Address

119 , Palliyadi Road
Eravur
30300

Telephone

+94767439512

Website

Alerts

Be the first to know and let us send you an email when BADUR NISHA Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BADUR NISHA Health Care:

Shortcuts

Share