AH Wellness Hub & Asiri Laboratories

AH Wellness Hub & Asiri Laboratories 𝐅𝐀𝐌𝐈𝐋𝐘 𝐏𝐇𝐘𝐒𝐈𝐂𝐈𝐀𝐍 & 𝐀𝐄𝐒𝐓𝐇𝐄𝐓𝐈𝐂𝐈𝐀𝐍   
𝗔𝗦𝗜𝗥𝗜 𝗟𝗔𝗕𝗢𝗥𝗔𝗧𝗢𝗥𝗬 𝐈𝐍𝐕𝐄𝐒𝐓𝐈𝐆𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐓𝐑𝐄𝐀𝐓𝐌𝐄𝐍𝐓𝐒 & 𝐑𝐄𝐅𝐄𝐑𝐑𝐀𝐋𝐒 𝐇𝐎𝐌𝐄 𝐕𝐈𝐒𝐈𝐓𝐒
𝐂𝐎𝐔𝐍𝐒𝐄𝐋𝐋𝐈𝐍𝐆

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு (Low Testosterone in Women)👉 ​எமது உடலில் இரசாயன தூதுவர்களாக ஹோர்மோன்கள் செயல்படுகின...
02/08/2026

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு (Low Testosterone in Women)

👉 ​எமது உடலில் இரசாயன தூதுவர்களாக ஹோர்மோன்கள் செயல்படுகின்றன. பெண்களின் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் ஹோர்மோன் அளவுகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.

👉 ​டெஸ்டோஸ்டிரோன் என்றதும் அது ஆண்களுக்கான ஹோர்மோன் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களின் உடலுக்கும் இது குறிப்பிட்ட அளவில் அவசியமாகும்.

இந்த பதிவில் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டின் அறிகுறிகள், காரணங்கள், கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைகள் குறித்து விரிவாக காண்போம்.

​பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் தரும் நன்மைகள்

​பெண்களுக்கு அட்ரீனல் சுரப்பிகள் (Adrenal glands) மற்றும் கருப்பைகள் (Ovaries) சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன. இது பின்வரும் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது:

🟢 ​கருவுறுதல் மற்றும்
🟢 பாலியல் ஆர்வம் (Libido)
🟢 ​இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி
🟢 ​தசை வலிமை மற்றும்
🟢 கொழுப்பு விநியோகம் (Fat distribution)
🟢 ​எலும்பு அடர்த்தி (Bone density)

✅️ ​இயல்பான அளவு: ஒரு பெண்ணின் இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 15–70 ng/dL (நானோகிராம்/டெசிலிட்டர்) வரை இருக்க வேண்டும்.

➡️ ​டெஸ்டோஸ்டிரோன் குறைய முக்கிய காரணங்கள்.

📌 ​இயற்கையான முதுமை & மாதவிடாய் நிறுத்தம் (Menopause):

வயது கூடும் போதும், மெனோபோஸ் நிலையை அடையும் போதும் ஈஸ்ட்ரோஜனுடன் சேர்த்து டெஸ்டோஸ்டிரோன் அளவும் இயல்பாகவே குறைகிறது.

📌 ​சுரப்பி பிரச்சனைகள் & அறுவைசிகிச்சை:

கருப்பை நீக்கம் (Oophorectomy/Hysterectomy) செய்துகொண்ட பெண்களுக்கும், அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பி குறைபாடு உள்ளவர்களுக்கும் இதன் உற்பத்தி கணிசமாக குறையும்.

📌 ​மருந்துகளின் பக்கவிளைவுகள்:

மெனோபோஸ் அறிகுறிகளுக்காக வாய் வழியாக உட்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கலாம்.

👉 ​குறைபாட்டின் அறிகுறிகள்.

➡️​அதிக சோர்வு மற்றும் மந்தநிலை.
➡️ ​தசை பலவீனம் மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு.
➡️​ பாலியல் ஆர்வம் குறைதல்.
➡️ பிறப்புறுப்பு வறட்சி.
➡️ ​நித்திரையின்மை (Insomnia)
➡️ ​உடல் எடை அதிகரித்தல்.
➡️ ​ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும்
➡️ கருவுறுதல் பிரச்சனைகள்.

🔴 ​முக்கிய குறிப்பு: மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் மனச்சோர்வு, கவலை, நாள்பட்ட மன அழுத்தம், தைரொய்டு பிரச்சனைகள் மற்றும் மெனோபோஸ் மாற்றங்கள் ஆகியவற்றினாலும் ஏற்படலாம். எனவே, நீங்களாகவே உங்களுக்கு மருத்துவம் செய்யாமல், AH Wellness Hub மருத்துவரை அணுகி உரிய இரத்த பரிசோதனைக்கு பிறகே உறுதி செய்ய வேண்டும்.

🟢 ​எவ்வாறு கண்டறிவது?

​டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மாதவிடாய் சுழற்சியின் போது மாறி கொண்டே இருக்கும் என்பதால், பரிசோதனை செய்வதற்கான சரியான நேரத்தை நம் மருத்துவர் தீர்மானிப்பார்.

🟢 ​நோயாளி கூறும் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எமது மருத்துவர் இரத்த பரிசோதனையை (Blood Test) பரிந்துரைப்பார்.

👉 ​சிகிச்சை முறைகள்.

➡️ ​பெண்களுக்கு நேரடியாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சையளிப்பது சில பக்க விளைவுகளை (தலை மயிர் கொட்டுதல், முக பரு, முகத்தில் மயிர் வளர்தல், குரல் மாறுதல் போன்றவை) ஏற்படலாம் என்பதால் எமது மருத்துவர்களா இதை கவனமாக கையாள்கின்றனர்

👉 ​மாற்றாக, பின்வரும் அணுகுமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

🟢 ​வாழ்க்கை முறை மாற்றங்கள்:

சீரான உணவு,
போதுமான நித்திரை மற்றும்
மன அழுத்தத்தை நிர்வகிக்கும் பயிற்சிகள்.

🟢​ ஆலோசனை (Counseling):

பாலியல் நலம் சார்ந்த சிகிச்சைகள். (Psychosexual Therapy).

🟢 ​சப்ளிமெண்ட்கள்:

எமது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் DHEA (Dehydroepiandrosterone) சப்ளிமென்ட்கள் எடுத்து கொள்ளலாம்.

நான் பார்க்கும் அதிகமான சிறுவர்களின் பற்கள் பழுதடைந்தவைகளாக காணப்படுகின்றன. சிலருக்கு ஒரு சில பற்களே ஒழுங்காக இருக்கின்ற...
01/08/2026

நான் பார்க்கும் அதிகமான சிறுவர்களின் பற்கள் பழுதடைந்தவைகளாக காணப்படுகின்றன. சிலருக்கு ஒரு சில பற்களே ஒழுங்காக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒரு சில பிள்ளைகளின் பற்களில் பாதி 'புழு தின்றவைகளாகழும் மீதி ஓட்டை விழுந்தவைகளாகவும்' காணப்படுகின்றன.

இதற்கு மிக முக்கியமான காரணம்,
பெரும்பாலான பெற்றோர்கள் சிறுவயதிலே குழந்தைகளுக்கு சீனியை உணவில் சேர்க்க துடங்கி விடுகிறார்கள்.

ஒரு‌ மாத பிள்ளைக்கே 'சீனிபோட்ட டீ குடுப்பதாக சொல்லும் சில தாய்மார்களை‌ கண்டிருக்கிறேன். 'ஏனம்மா பிறந்த பிள்ளைக்கு பால் குடுக்கிறீங்கள் என்று!!' கடுமையாக கேட்ட போது, 'அது வந்து... இவங்களுக்கு அம்மாவின் பால் காணாது. அதான் பெட்டி பால் குடுக்கிறேன்' என்று என்னை கிறுக்கு பிடிக்க வைத்த பிள்ளைகளின் அம்மாக்களும் உண்டு.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நமக்கு உண்மையான எதிரி சீனி (Refined Sugar) கொழுப்பு அல்ல. முஹம்மது நபி, இயேசு நாதர், புத்தர் போன்ற சீர்திருத்த வாதிகள், அவர்கள் எல்லோரும் சேர்ந்து தாங்கள் வாழ் நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்த சீனியை விட, கூட சீனியை, நாம் இப்போது, சாதரணமாக ஒரே ஒரு நாளில் தின்று தீர்த்து விடுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

எல்லா மதங்களிலும், கலாச்சாரங்களிலும், பண்டிகை காலங்களில் மட்டும் உண்ணும் உணவாக, கொண்டாடும் பானமாக சீனி இருந்திருக்கிறது. களு தொதல், மஸ்கட், வட்டிலப்பம், சர்க்கரை பொங்கல், பாயாசம் என்று எந்த உணவை எடுத்தாலும் இது தான் கதை. ஏனெனில் அன்று சீனி/ சர்க்கரை ஒரு அரிய பொருள். கொண்டாட்ட காலங்களில் மட்டுமே வாங்க முடியுமான ஒரு பொருள்.

ஆனால் கைத்தொழில் புரட்சியின் பின்னர் அது மலிவாக, தாராளமாக, டெய்லி கிடைக்கும் ஒரு பொருளாக மாறிவிட்டது. விளைவு சந்க்கரை நோய்,பிறசர், கிட்னிஃபெயிலியர், ஹார்ட் அட்டாக் , மூட்டு வருத்தம், குழந்தை பேறின்மை , கான்சர் என்று ஏகப்பட்ட நோய்கள். இவை எல்லாமே, எதோ ஒரு வகையில் நாம் உண்ணும் சீனியால் உண்டாவது என்பது உங்களுக்கு தெரியுமா?

பெரியவர்களில் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்களில் சீனி சேர்ப்பதை கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது என்று தற்போது வெளியாகி இருக்கும் ஒரு முக்கிய ஆய்வு சொல்கிறது.

ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள், கருத்தரித்தது முதல் குழந்தையின் 2 ஆம் ஆண்டு நிறைவடையும் வரை என்பது அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் சீனி அளவை கட்டுப்படுத்துவது நீண்ட காலத்திற்கு பல மகத்தான பலன்களை அளிக்கிறது என இந்த புதிய ஆய்வு சொல்கிறது.

இதையே தான் பல வருஷங்களாக நானும் சொல்லி வருகிறேன் ஆனால் கேட்பார் யாருமில்லை.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் முதல் நாளில் இருந்து சீனியை கட்டுப்படுத்துவதால், தொடர்ந்து 2 வயது வரை சீனியை சீனி சேர்த்த உணவுகளை குடுக்காமல் தவிர்ப்பதால் கீழ் வரும் நிரந்தர ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

1. நாட்பட்ட நோய்கள் குறைவு

சிறு வயதில் சர்க்கரை குறைவாக எடுத்து கொண்டவர்களுக்கு, பெரியவர்களான பிறகு டைப் 2 நீரிழிவு நோய் 35% வரையும், உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) 20% வரையும் குறைகிறது. 2 ஆம் உலக போருக்கு பிந்தைய சீனி/ சர்க்கரை தட்டுப்பாடு காலத்தில் பிறந்தவர்களை பற்றிய ஆய்வும் இதையே உறுதி படுத்துகிறது.

2. ஆரோக்கியமான சுவை விருப்பங்கள்.

இந்த ஆரம்ப காலத்தில் அதிக சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம், குழந்தையின் நாக்கு அதிக இனிப்பு சுவைக்கு அடிமையாவதை தடுக்கலாம். இது பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இயற்கையான உணவுகளை அவர்கள் ரசித்து சாப்பிட உதவுகிறது. சீனி சேர்த்து பால் குடுத்த அதிகமான குழந்தைகள் பெரும்பாலும் 2 வயதை அடையும் போது நிறை குறைந்தவர்களாகவும் வேறு உணவுகளை விரும்பி உண்ணாதவர்களாகவுமே இருக்கின்றனர்.

3. உடல் பருமன் குறைவு.

சர்க்கரை நிறைந்த உணவுகள் ஊட்டச்சத்து இல்லாத, கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கும். துடக்கத்திலேயை சீனியை/ சர்க்கரையை தவிர்ப்பது சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடையே ஏற்படும் உடல் பருமனை தடுக்க உதவுகிறது. தற்போது அதிகரித்து வரும் Adolescent Obesity க்கு சீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

4. வளர்சிதை மாற்றம் (Metabolic Health) ஆரோக்கியம்.

சீனியின்/ சர்க்கரையின் கட்டுப்பாடு, உடலின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்முறைகளை பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) தடுக்கிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) இல‌ங்கை‌யி‌ல் உள்ள 90% வீதமானவர்களுக்கு இந்த நோய் உண்டு.

உங்களுக்கும் உண்டா என்பதை பரிசோதித்து (Fibro Scan, AST , ALT பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்) நீரிழிவு, PCOS மற்றும் இதய நோய் அபாயங்கள் குறைக்கலாம்.

5. மூளை வளர்ச்சியில் பங்களிப்பு.

அதிக சர்க்கரை/ சீனி கொண்ட உணவு மூளையின் வளர்ச்சி முறையை மாற்றுகிறது. இது கற்றல் மற்றும் நினைவாற்றலில் நிரந்தர குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று விலங்கு ஆய்வுகள் காட்டுகின்றன.

சீனியை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் நினைவாற்றல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

6. பசியின்மை கட்டுப்பாடு.

சர்க்கரை/ சீனி கூடவது, பசியை ஒழுங்கு படுத்தும் மூளையின் வழிமுறைகளை குழப்பி, வயிறு நிரம்பும்/ திருப்தியடையும் உணர்வை அறிந்து கொள்ளும் திறனில் தலையிடுவதன் மூலம் அடிக்கடி பசியை ஏற்படுத்தி அதிக சீனி/ மாப்பொருள் உணவு உண்பதை ஊக்கப்படுத்துகிறது.

7. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள்.

குழந்தையின் குடல் நுண்ணுயிரிகள் இந்த 1000 நாட்களில் வேகமாக வளரும். தாய் பாலில் உள்ள HMOs போன்ற சர்க்கரை இல்லாத பொருட்கள், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன.

அதே சமயம், அதிக சர்க்கரை.

ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களை தூண்டி, ஒவ்வாமைகள் (Allergies) மற்றும் ஆஸ்துமா போன்ற நீண்டகால உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன.

ஓகே. இவ்வளவு பிரச்சினைகள் நோய்கள் சீனியினால்/ சர்க்கரையினால் ஏற்படுகிறது என்றால் சர்க்கரை/ சீனி அளவை நிர்வகிக்க, குறைக்க எளிய வழிகள் எவை?

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரை/ சீனி அறவே கூடாது.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஒரு சீனி / சர்க்கரையும் (Added Sugars) சேர்க்கப்பட்ட உணவையும் வழங்க கூடாது என்று பல்வேறு சர்வதேச சிறுவர் நல அகாடெமிகள் உறுதியாக பரிந்துரைக்கின்றன. ஆகையால் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணவில் சீனி சேர்வதை தடுக்க முடியும்.

1. பழச்சாறுகளை கட்டு படுத்துங்கள்.

வீட்டில் தயார் செய்த பிரஸ் 100% பழச்சாறில் கூட அதிக சர்க்கரை உள்ளது. முழு பழங்களில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதால், முழு பழங்களை துண்டுகளாக வெட்டி, அல்லது மசித்து குடுப்பதே சிறந்த வழி. சீனி, தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

2. லேபிள்களை படிக்கவும்.

குழந்தைகளுக்கு குடுக்கும் பிஸ்கட், தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குழந்தை உணவுகள், டிரிங்க்ஸ் வகைகள் , டொபி, சொக்கலெட் உட்படப் பலவற்றில் மறைந்திருக்கும் சர்க்கரைகளை கண்டறிய அந்த உணவுகளில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

அப்படி படித்தால் மாத்திரமே அவைகளை குடுப்பது குழந்தைகளுக்கு ஏற்புடையது அல்ல என்பது விளங்கும்.

3. முடிந்த அளவு தாய் பால் குடுங்கள்.

தாய் பால் இயற்கை சர்க்கரைகளை கொண்டிருந்தாலும், அது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் சர்க்கரையின் எதிர்மறை விளைவுகளை எதிர்த்து போராடும் பல நன்மை பயக்கும் சேர்மங்களையும் ஒருங்கே குழந்தைகளுக்கு வழங்குகிறது.

ஆகவே, இந்த ஆரம்பகால ஊட்டச்சத்து தேர்வுகள் உங்கள் குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்திற்கு ஒரு வலுவான ஆரோக்கியமான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

குழந்தையின் முதல் 1000 நாட்கள் என்பது வெறும் ஒரு கால கட்டம் அல்ல. அது ஒரு சக்தி வாய்ந்த, வாழ்வை தீர்மானிக்கும் அடித்தளம். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் ஊட்டச்சத்து தேர்வுகள் தான்,

உங்கள் குழந்தையின் மூளை, வளர்சிதை மாற்றம் (Metabolism), மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) சரியாக வடிவமைப்பு செய்கின்றன.

உங்கள் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை வடிவமைத்து, கட்டமைக்கின்றன. முழுமையான, சத்துக்கள் நிறைந்த உணவை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், தலைமுறைகளுக்கு பலன் தரும் மிக சிறந்த ஒரு முதலீடாகும். மேலும் அறிந்து கொள்ள AH Wellness Hub இந்த பக்கத்தை பகிருங்கள்.

இரத்த பரிசோதனை அறிக்கையில் LDL அளவு கூடி இருப்பதை பார்த்தவுடனே, பலருக்கும் ஏற்படும் முதல் பயம் 'என் இரத்த குழாய்களில் கொ...
01/08/2026

இரத்த பரிசோதனை அறிக்கையில் LDL அளவு கூடி இருப்பதை பார்த்தவுடனே, பலருக்கும் ஏற்படும் முதல் பயம் 'என் இரத்த குழாய்களில் கொழுப்பு அடைத்து கொள்ளுமா? எனக்கு ஹார்ட் அட்டாக்/மாரடைப்பு வருமா?' என்பது தான்.

ஆனால், இங்கே பலரும் அறியாத ஒரு மருத்துவ உண்மை இருக்கிறது எல்லா LDL கொலொஸ்ட்ராலும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை.
உங்கள் உடலில் எவ்வளவு LDL இருக்கிறது என்பது மட்டுமல்ல. அது என்ன வகையான LDL என்பது தான் மிக முக்கியம்.

கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் LDL பற்றி கதைப்பதற்கு முதல் நாம் உடலில் உள்ள கொலொஸ்டரோல் பற்றிய மிக முக்கியமான ஒரு உண்மையை நாம் உணர வேண்டும். நமது உடல் தொழிற்பாட்டிற்கு கொலொஸ்ட்ரால் மிகவும் அவசியமான ஒன்று. கொலொஸ்டரோல் ஒன்றும் கெட்டது கிடையாது. அதனால் தான் உடல் அதிக அளவான கொலொஸ்ட்ரோலை தினமும் உற்பத்தி செய்கிறது. உண்மையில், நமது உடலில் இருக்கும் பெரும்பாலான கொலொஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நேரடியாக வருவதில்லை.

மாறாக, நமது கல்லீரலே அதை தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 85% கொலொஸ்ட்ரோலை கல்லீரலே /Liver உற்பத்தி செய்கிறது. முட்டை, இறைச்சி போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலின் கொலொஸ்ட்ரோல் உடனடியாக ஆபத்தான அளவுக்கு உயர்ந்து விடாது.

நாம் பெருமளவில் உட்கொள்ளும் சுத்திகரிக்கப்பட்ட மாச்சத்துக்களும் (Refined Carbs), சர்க்கரையும் தான் உண்மையான வில்லன்கள்.

அதிகப்படியான சர்க்கரை மற்றும் ரிஃபைன்ட் உணவுகளை (சீனி, சோடா பேக்கரி பண்டங்கள், சோட் ஈட்ஸ், சாப்பிடும் போது, கல்லீரல் அதை திரவ கொழுப்பாகவும் (Triglycerides), ஆபத்தான சிறிய அடர்ந்த கொலொஸ்ட்ரோல் துகள்களாகவும் மாற்றுகிறது.

எனவே முட்டைக்கும் இறைச்சிக்கும் பயப்படுவதை விட்டுவிட்டு உணவில் உள்ள சர்க்கரை மற்றும் சுத்திகரித்து வெள்ளையாக்கப்பட்ட மாவுச்சத்தை கட்டுப்படுத்துவதில் தான் நமது முழு கவனமும் இருக்க வேண்டும்!

கொலொஸ்ட்ரோல் பற்றிய தெளிவான உண்மைகளை அறிவதற்கு பெரிய LDL vs சிறிய அடர்ந்த LDL (sdLDL) குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதா?.

LDL என்பதை இரத்தத்தில் கொலொஸ்ட்ரோலை எடுத்து செல்லும் ஒரு விநியோக வாகனமாக (Delivery Truck) கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இதில் பெரிய மிதக்கும் LDL (Large Fluffy LDL) பாதுகாப்பானவை. இவை அளவில் பெரியவை. இரத்த குழாய் சுவர்களுக்குள் எளிதில் நுழைய முடியாது. உடலால் எளிதாக கையாளக்கூடியவை.

மற்றையது சிறிய, அடர்ந்த LDL (Small Dense LDL - sdLDL). இவை மிகவும் ஆபத்தானவை. இவை இரத்த குழாய் சுவர்களில் எளிதாக சென்று அடைத்து கொள்ளும். இரத்த ஓட்டத்தில் அதிக நேரம் தங்கியிருக்கும்.
எளிதில் ஒக்ஸிஜினேற்றம் (Oxidized) அடைந்து வீக்கத்தை (Inflammation) உண்டாக்கும். இதுவே இரத்த நாடிகளில்/ Arteries அடைப்பை புளொக்கை (Plaque) வேகமாக உருவாக்கும்.

எல்லோரும் சொல்வது போல, மருத்துவ ரீதியாக LDL ≥ 100 mg/dL என்பது எச்சரிக்கைக்குரிய ஒன்று தான்.

ஆனால், ஒரே அளவு LDL கொண்ட இரண்டு நபர்களில், ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் அடைப்பு ஏற்படுகிறது. மற்றொருவருக்கு ஏற்படுவதில்லை.

ஏனெனில், இதய நோய் ஆபத்து LDL- ஐ மட்டும் பொறுத்தது அல்ல! அது தான் உண்மை. கீழ் கண்ட பிற காரணிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன:

⚠️ டிரைகிளிசரைடுகள் (Triglycerides) அதிகமாக இருப்பது.

⚠️ HDL (நல்ல கொலஸ்ட்ரால்) குறைவாக இருப்பது.

⚠️ இன்சுலின் எதிர்ப்பு திறன் (Insulin Resistance).

⚠️ தொப்பை வயிற்று கொழுப்பு / Metabolic Syndrome.

⚠️ உயர் இரத்த அழுத்தம். (High BP? மற்றும் புகைபிடித்தல்

⚠️ பரம்பரை இதய நோய் வரலாறு

⚠️ நாள்பட்ட உடல் உறுப்புகளின் உள் வீக்கம் (Chronic Inflammation)- (Persistent high CRP)

ஆகவே கொலொஸ்ட்ரோல் ரிப்போர்ட்டை மட்டும் பார்த்து வேலை இல்லை. அதற்கு காரணமாக இருக்கும் மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்‌. நிறைய பேர் நோர்மல் கொலொஸ்ட்ரோல் என்று சொல்வார்கள்.

ஆனால் அவர்களுடைய ட்ரைகிளிசரைட் அபரிமிதமாக அதிகரித்திருக்கும்.

HDL குறைவாக இருக்கும்.

LDL நோர்மலாக இருக்கும்.

அப்படி இருந்தால் வேலைக்கு ஆகாது. உங்களின் கொலொஸ்ட்ரோல் ஆபத்தானது தானா என்பதை அறிய வெறும் LDL பரிசோதனை மட்டும் போதாது.

அதை தெளிவாக அறிந்து கொள்ள கீழ் வரும் இந்த சோதனைகளும் அவசியம்.

😭ApoB (Apolipoprotein B): சிறிய இரத்த நாடிகளுக்குள் நுழையக்கூடிய அனைத்து கொழுப்பு புரத துகள்களின் எண்ணிக்கையை காட்டும். ApoB அதிகமாக இருந்தால், ஹார்ட் அட்டாக் ஆபத்து அதிகம்.

😭Lp(a) - Lipoprotein(a). இது மரபணு சார்ந்த ஒரு கொழுப்பு துகள். LDL குறைவாக இருந்தாலும், Lp(a) அதிகமாக இருந்தால் இதய நோய் ஆபத்து வரலாம்.

😭CAC Score (Coronary Artery Calcium Score): இது இருதய இரத்த குழாய்களில் ஏற்கனவே சுண்ணாம்பு படிவுகள் (Calcium/Plaque) உருவாக துடங்கிவிட்டதா என்பதை கண்டறியும் CT ஸ்கேன் பரிசோதனை.

மேலே சொல்லப்பட்ட மூன்று பரிசோதனைகளும் நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் செய்ய முடியாதவை.

கொஞ்சம் செலவு கூடியவை.

இருந்தாலும் அவற்றுக்கு பதிலாக சாதாரண லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile) அறிக்கையிலிருந்தே ஒரு முக்கிய குறிப்பை கண்டுபிடிக்கலாம்.

பின்வரும் எளிய கணக்கீடு மூலம் ஓரளவு ஊகிக்க முடியும்: TG / HDL விகிதம் (Ratio). இது

👉🏼 2-க்குக் கீழ் இருந்தால் ஆரோக்கியமான நிலை. உண்மையில் இது 1 ஆக இருப்பது சூப்பர் ஆரோக்கியமான நிலை.

👉🏼 இரண்டிற்கு மேலே, 3, 4, 5 அல்லது அதற்கு மேல் இருந்தால், இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் சிறிய அடர்ந்த LDL (sdLDL) அதிகமாக இருப்பதற்கான அறிகுறி. இது சிறந்த நிலை இல்லை.

உதாரணம் 1: Triglycerides = 90 | HDL = 60
90 /60 = 1.5 (சிறப்பான நிலை)

உதாரணம் 2: Triglycerides = 240 | HDL = 40
240/40 = 6 (எச்சரிக்கை தேவைப்படும் நிலை!)

இங்கே உங்கள் LDL நோர்மலாக இருந்தாலும் சரியே. (குறிப்பு: இது ஒரு வழிகாட்டி மட்டுமே; சரியான மருத்துவ பரிசோதனைக்கு உண்மையில் ApoB Lp(a), CAC Score மூன்றும் அவசியம்.)

ஆகவே அன்பர்களே!! நமது குறிக்கோள் வெறும் கொலொஸ்டிரோல் ரிப்போர்ட் இல் உள்ள LDL எண்ணை குறைப்பது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் (Metabolic Health) சீராக்குவது தான். LDL ஐ குறைப்பதற்காக கொலொஸ்ட்ரோல் மருந்து எடுத்தாலும் உண்மையான மாற்றம் அது இல்லை என்பதை விளங்கி நடந்தால் மாத்திரமே வெல்ல முடியும்.

1. உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். முட்டை, இறைச்சி, ஆரோக்கியமான கொழுப்புகளை கண்டு பயப்படுவதை விட்டு விட்டு இனிப்பு பானங்கள், சோடா, பேக்கரி உணவுகள், மைதா மற்றும் அதிகப்படியான வெள்ளை அரிசி / சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துக்களை பயப்படுங்கள். அவற்றை குறையுங்கள். இவற்றுக்கு பிரதியீடாக காய்கறிகள், புரதம் (Protein), பயறு வகைகள் மற்றும் கொட்டைகள் (Nuts) நிறைந்த உணவுகளை உணவின் மைய பகுதியாக பிரதான பகுதியாக மாற்றுங்கள். நீங்களே ஆச்சரியப்படும் விளைவுகளை அப்போது தான் காண முடியும்.

2. உடற்பயிற்சியால் HDL- ஐ உயர்த்துங்கள்: HDL மாத்திரைகளால் மட்டும் உயராது. தினமும் நடைபயிற்சி, எயிரோபிக் பயிற்சிகள் மற்றும் எடைகூட்டும் பயிற்சிகள் (Resistance Training) அவசியம். தொப்பையை குறைப்பதும், நல்ல நித்திரையும், புகைபிடித்தலை நிறுத்துவதும் HDL- ஐ உயர்த்தும் ஏணி படிகள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

3. உங்கள் உடலில் மெதுவாக வளர்ந்து வரும் இன்சுலின் எதிர்ப்பை Insulin Resistance தீவிரமாக எடுத்து கொள்ளுங்கள்: 6 மாதங்களுக்கு ஒரு தடவையாவது இடுப்பு சுற்றளவு, வெறும் வயிறோடு எடுக்கப்படும் சீனியின் அளவு (Fasting Sugar), HbA1c மற்றும் BP, இரத்த அழுத்தத்தை, Chronic Inflammation CRP ன் அளவு ( இது 1, 2 ஆக இருக்க வேண்டும் ) கண்காணிக்கவும்.

ஏனெனில், சர்க்கரை நோய், மன அழுத்தம், வீக்கம் மற்றும் கொழுப்பு ஆகியவை ஒன்றாக சேரும் போது தான் இரத்த குழாய்கள் அதிகம் சேதமடைகின்றன.

இறுதியாக, உங்கள் இரத்த பரிசோதனை அறிக்கையில் LDL, Triglycerides அல்லது HDL எண்கள் சிவப்பில் இருந்தால், பதற்றமடையாமல் ஆழமாக ஆராயுங்கள்.

உடலின் வளர்சிதை மாற்றம் Metabolic Response சீர்கெட்டு இருக்கும் போது தான், கொலொஸ்ட்ரோல் ஆபத்தானதாக மாறுகிறது. எனவே, முட்டையையும் மாட்டு இறைச்சியையும் குற்றவாளி ஆக்குவதை நிறுத்திவிட்டு, உணவில் உள்ள சீனியை, சர்க்கரையை, மாப்பொருளை குறைத்து, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இன்றே தொடங்குங்கள்!

பிற்குறிப்பு :- உங்கள் LDL 100 mg/dL அல்லது அதற்கு மேல் இருந்தால், அல்லது ஏற்கனவே இதய நோய், சர்க்கரை நோய் இருந்தால், உணவுமுறை மாற்றத்தோடு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளும் மிக மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

60 வயதில் மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றால் 40 வயதிலிருந்தே உங்கள் ஆரோக்கியம் குறித்து கவனம் எடுங்கள். மேலும் பதிவுகளுக்கு AH Wellness Hub இனை தொடருங்கள்.

இளவயது மரணங்கள் விதியா? விபத்தா?(Warning - இந்த பதிவு மரணம் மற்றும் வாழ்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கேள்விக்கு உட்படுத...
01/08/2026

இளவயது மரணங்கள் விதியா? விபத்தா?

(Warning - இந்த பதிவு மரணம் மற்றும் வாழ்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தலாம். இளகிய மனம் கொண்டவர்கள், சிறுவர்கள், கர்ப்பவதிகள், ஹார்ட் பேசன்ட்கள் கவனம்)

உங்களுக்கு எவ்வளவு காலம் உயிர் வாழ ஆசை?

இந்த கேள்வியை கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்வர். உங்கள் விடை என்ன?

ஆனால், மனிதர்களில் ஒரு சிலரை தவிர, மற்றைய எல்லோரும் நீடூழி வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மரணம் இல்லாத நித்திய வாழ்வு (Immortal life) என்பது மனித மனங்களில் ஆழப்பதிந்த ஒரு ஆசை.

அதனால் தான் என்னவோ எம்மால் இயலாத அதை காரணியாக முன் வைத்து வாழ்க்கை ஆசை ஊட்டி இருக்கிறது.

என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை வயது போக போக தான், மனிதர்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற இந்தப் பேராசை கூடி செல்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞன் ஒருவன் மரணத்திற்கு பயப்படுவதை விட வயோதிபர் ஒருவர் அதிகம் மரணத்திற்கு பயப்படுவது மிகவும் விசித்திரமானது. இது மனித வாழ்வை விளங்கப்படுத்த முடியாத மிக பெரும் முரண் நகையும் கூட.

இந்த வாழ்வில் மரணம் தவிர்க்க முடியாத அங்கம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இறைவனை மறுத்தாலும் மரணத்தை மறுக்க முடியவில்லை என்பது தான் மெய் ஞானம்.

அது போல, நான் எப்போது மரணிப்பேன் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக என்றோ ஒரு நாள் நான் மரணிப்பேன் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தான் இந்த வாழ்க்கையில் உள்ள மிக பெரிய ட்விஸ்ட்.

துரதிர்ஷ்டவசமாக நவீன உலகியல் ஒழுங்கில், தாராள வாதத்தில், முதலாளித்துவத்தில், மரணத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஏனெனில் இந்த சித்தார்ந்தங்களுக்கு மிகப் பெரிய எதிரி மரணம் தான். என்றாலும், இந்த நவீன அறிவியல் விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கு முன்னால் உள்ள மிக பெரும் சவாலும் இந்த மரணத்தை வெல்வது தான். அதற்காகவே பாரிய பொருட்செலவில் பல்வேறு ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது இன்னும் ஒரு தனி கதை. அதை பிறகு பார்ப்போம்.

மரணம் இரண்டு வகையில் நிகழ்கிறது.

ஒன்று இயற்கை மரணம் Natural Death.

மற்றையது செயற்கை மரணம். இல்லை, தடுக்கக்கூடிய மரணம் (Preventable Death).

இயற்கை மரணம் சாதாரணமாக நமது கலங்கள் மூப்படைவதன் காரணமாக, வயோதிபத்தின் காரணமாக, சில அரிதான சந்தர்ப்பங்களில், தீர்க்க முடியாத நோய் காரணமாக ஏற்படுகிறது.

நாம் எவ்வளவு தான் விஞ்ஞான வளர்ச்சியை, மருத்துவ புரட்சியை செய்திருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் முறைகளை அறிந்திருந்தாலும், இதுவரை இயற்கை மரணத்தை தடுக்க கூடிய எதையும், அல்லது அதை கொஞ்சம் பிந்தி போட கூடிய எதையும், நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்பது தான் உண்மை.

சுருக்கமாக சொன்னால், In truth so far modern medicine has not extended our natural life span by a single year என்பது தான் யதார்த்தம். ( மனித ஆயுட்காலம் காலம் அதிகரித்து இருக்கிறதே என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம். கீழே படியுங்கள்)

இதற்கு மாற்றமாக, தடுக்க கூடிய மரணங்களை, அதாவது Technical glitch ஆல் ஏற்படும் மரணங்களை தடுப்பதில் நவீன மருத்துவம் மிக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் பல வருஷங்களாக அதிகரித்திருக்கிறது. கூடி வருகிறது. இதனால் தான் சிசு மரணங்கள், குழந்தை மரணங்கள், இளவயது மரணங்கள் மிக பெரிய அளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தான், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது என்பதன் விளக்கம். மற்றபடி நான் மேலே சொன்னது போல இயற்கையான மனித வாழ்க்கை காலத்தில், life span இல் எந்த மாற்றமும் இல்லை. நாம் நமது விஞ்ஞானம், மருத்துவம் என்று ஒரு ஆணியையும் புடுங்கவில்லை.

டெக்னிகல் புரொப்ளம் காரணமாக ஏற்படும் மரணங்களை நாங்கள் எதிர்பாராத/ திடீர் மரணங்கள் என்று சொல்கிறோம். இதற்கு நல்ல உதாரணம் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், வீதி விபத்துக்கள், ஏனைய அக்சிடென்ட்கள், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் மூலம் ஏற்படும் இளவயது மரணங்கள். இவை எல்லாம் தடுக்கப்பட கூடிய மரணங்கள். இவற்றில் தான் நாம் முன்னேறி இருக்கிறோம்.

எப்படி வீதி விபத்துக்கள் தடுக்க பட முடியுமோ அப்படியே எதிர்பாராத விதமாக technical failure ஆல் ஏற்படுகின்ற, இவ்வாறான எல்லா திடீர் மரணங்களும், பெரும்பாலும் தடுக்க பட வேண்டும் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, சிந்திக்க வேண்டிய உண்மை.

இளவயது ஹார்ட் அட்டாக்கள் - தொற்றா நோய்கள், தொற்றும் நோய்கள் எல்லாமே நிச்சயமாக தடுக்க பட கூடியவை.

இது நவீன அறிவியல் சொல்லும் செய்தி.

ஆனால் இவை குறித்து கவனம் செலுத்தாமல் 'இப்போது தான் என்னோடு கதைத்து கொண்டிருந்தவர் இறந்து விட்டார். என்ன செய்ய விதி அப்படி? நேற்றுதான் வெளிநாட்டில் இருந்து வந்தவர். இன்று கல்லறைக்குள் போய் விட்டார்....' என்று நாம் விதி மேல் பழியை போட்டு விட்டு கடந்து போய் விடுகிறோம்.

இது உண்மையில் மாடுகளை கட்டி போடாமல் இறைவன் பார்த்து கொள்வான் என்பதற்கும், கதவை பூட்டி வைக்கமால் களவு போன பின் விதி மேல் பழி போடுவதற்கும் ஒப்பானது.

விதி பற்றிய பிழையான புரிதலே அன்றி வேறில்லை. இங்கே விதி என்பது மனதை தேற்றும் பாரத்தை இறக்கி வைக்கும் ஒரு கருவியே அன்றி வேறில்லை.

விபத்துக்கள் தடுக்க படுவதற்கு வாகனங்களை ஒழுங்காக மெய்ன்ட்டெய்ன் பண்ண வேண்டும். உரிய முறையில் சேர்வீஸ் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால், டெக்னிக்கல் கிளிச்/ ஃபெயிலியர் வருவது, விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாகி விடும்.

அதை போல தான் நமது உடம்பும். அதுவும் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். உரிய முறையில் சேர்வீஸ் செய்ய பட வேண்டும். இல்லை என்றால் டெக்னிக்கல் ஃபெயிலியர் இங்கேயும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஆகிவிடும். சடுதியான பகரேக் டவுண். அதாவது மரணங்கள் கூடி விடும்.

வாகனத்திற்கு எப்படி நல்ல தரமான பெட்ரோல் அடிக்க வேண்டும்? எவ்வளவு பெற்றோல் அடிக்க வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும்? என்ன ஒயில் மாற்ற வேண்டும் ? எப்போது மாற்ற வேண்டும்? எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும் ? எதை ஊற்ற வேண்டும்? எதை ஊற்ற கூடாது என்று மனுவலில் சொல்ல பட்டது போல, அச்சு பிசகாமல் பார்த்து பார்த்து செய்கிறோமே!

அப்படியே, நமது உடம்புக்கும், நாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். நம்மை நாமே கவனிக்க வேண்டும். அப்போது உடம்பை நாங்கள் உரிய முறையில் நல்ல கண்டிஷனில் மெயின்டெய்ன் பண்ண முடியும். விளங்குதா!!

இலாபமாக கிடைக்கிறது என்பதற்காக காருக்கு எப்போதாவாது, நாம் தரம் குறைந்த, கலப்படம் உள்ள பெற்றோலை ஊற்றி இருக்கிறோமா? 5000 Km தாண்டியும் ஒயில் மாற்றாமால் ஓடி இருக்கிறோமா? உரிய கால இடைவெளியில் செக்கப் செய்யாமல் விட்டிருக்கிறோமா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அப்படி விட்டால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் நமது உடம்புக்கு ஒத்து வராது என்று தெரிந்தும் தரம் குறைந்த, விஷம் நிறைந்த உணவுகளை நாள் தவறாமால் ஏன் நாம் உட்கொள்கிறோம்?

நமது ஹெல்த் எப்படி இருக்கிறது என்று எப்போதாவது செக் பண்ணி இருக்கிறோமா? நமது பிளட் பிறஷர் எவ்வளவு இருக்கிறது? சீனியின் அளவு எவ்வளவு? சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று யோசித்து இருக்கிறோமா? சாராயம் குடிப்பதை கை விட வேண்டும் என்று எண்ணி இருக்கிறோமா? ஹார்ட் கண்டிஷன் எப்படி இருக்கிறது? என்று எப்போதாவது செக் பண்ணி பார்த்திருக்கிறோமா? இல்லவே இல்லை.

ஏன் இந்த பாரபட்சம்? இப்படி ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததால் 40 வயதில் ஹார்ட் அட்டாக் வராமால் நம்மை கலியாணம் கேட்டு பெட்டியா கொண்டு வர போகிறார்கள்? சிந்தியுங்கள்.

30 வயதை அடைந்து விட்டால் பிராண்ட் நியூ வாகனம் என்ற தரத்தை நமது உடல் இழந்து விடும். இனி மெயின்டனன்ஸை பொறுத்தே வாகனம் ஒழுங்காக கன்டிஸனாக இருக்கும். 40 வயதை அடைந்து விட்டால் இனி அது செகன்ட் ஹான்ட் சாமான் தான். சேர்விஸ் மெயின்டனன்ஸ் எல்லாம் கட்டாயம். இல்லை என்றால் ஊத்தி கொண்டு போய் விடும். இடையில் மக்கர் பண்ண துடங்கி விடும். சம் டைம், ரிப்பெயார் பண்ண முடியாமலே போய்விடும்.

இயற்கையாகவே, நமது உடம்புக்கு உள்ளேயே, நம்மை ஓட்டோவாக மெயின்டெயின் பண்ணும் ஒரு சிஸ்டம் இருக்கிறது. அது இறைவன் நமக்கு தந்த மிக பெரும் அருட் கொடை. அது தான் நமது நோய் எதிர்க்கும் சக்தி (Immune System). நமது மைக்ரோபயோம் பெமிலி (Gut Microbiomes) நாம் உண்ணும் உணவுகளை, குடிபானங்களை பொறுத்தே இந்த இரண்டு சிஸ்டங்களும் தொழிற்படும்.

ஆரோக்கியமான உணவுகள்:- நிறைய காய் கறிகள், பழங்கள், நொதிக்கப்பட்ட உணவுகள், நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால் இவை இரண்டும் நன்றாக வேலை செய்யும். இதற்கு மாறாக, ஆரோக்கியமற்ற, கெடுதியான உணவுகளை தினமும் உட்கொண்டால் இவை இரண்டும் பழுதடையும். சிஸ்டம், Automatic repair செய்யும் தகுதியை இழந்து விடும்.

அது போல, இந்த சிஸ்டம் முறையாக இயங்குவதற்கு போதுமான நித்திரை, அளவான உடற்பயிற்சி கட்டாயம். இவை இரண்டும் இல்லை என்றால் சிஸ்டம் சீராக இயங்காது. ஆக மொத்தத்தில் நமக்கு இயற்கையாகவே உடம்பில் உள்ள ஒடோ மெயின்டனென்ஸ் சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்யாமல் போவதும் நன்றாக வேலை செய்வதும் நமது கைகளிலே, சொரி வாய்களிலே தங்கி இருக்கிறது.

30 வயது துடங்கியதும்‌ நமக்கு உணவு கட்டுப்பாடு மிக அவசியம். நாம் எந்த எந்த உணவுகளை உண்கிறோம் என்பதை விட எதை எதை உண்ண கூடாது என்பதில் இனி தான் கவனமாக இருக்க வேண்டும். அப்படி தான் நமது முன்னோர்கள் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் 60, 70 வயது வரை ஹெல்த்தியாக இருந்தார்கள். பத்து பதினைந்து பிள்ளைகளை பெற்றார்கள். நாலைந்து கலியாணம் முடித்தார்கள்.

40 வயதை அடைந்ததும், செக் அப் சேர்விஸ் அவசியம். வருஷத்துக்கு ஒரு‌ முறையாவது கட்டாயம் உடல் தகுதியை (பொடி கண்டிசனை) பரிசோதித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், இப்போதுள்ள உணவு பழக்கத்திற்கு, 50 வயதிற்குள் டெட் பொடியாவது சுவர்சொட் (sure). அல்லது கராஜும் (ஹாஸ்பிடல்) வீடும் அல்லது குளிசையும் கையும் என்று அலைய வேண்டியது தான். அப்படி தான் இப்போது எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் மருத்துவ மாஃபியா என்று மருத்துவர்கள் மேல் பழியை போடுகிறார்கள்.

40 வயது கடந்ததும், சுகதேகியாக இருந்தாலும் குறைந்தது ஓரிரு வருடத்திற்கு ஒரு முறையாவது, உடற் திணிவு சுட்டி ( BMI), இடுப்பின் சுற்றளவு (Waist /Hip ratio ), பிபி(Blood pressure), சீனி (Blood Sugar), கொலஸ்ட்ரோல் (Lipid profile) கட்டாயம் செக் பண்ண பட வேண்டும்.

செக் பண்ணி மட்டும் காணாது. வாழ்வியல் முறை மாற்றங்கள் (Life style modification) கண்டிப்பாக செய்ய பட வேண்டும். அப்போது தான் 50, 60, 70 வயது வரை இந்த வண்டியை பிரச்சினை இல்லாமல் ஓட்ட முடியும். நல்ல பிக்கப் கிடைக்கும். பிராண்ட் நியூ கண்டிசனோடு இருக்கும்.

நாட்டில் உள்ள பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோய் செக்கப் கிளினிக்குகள் ஒவ்வொரு கிழமையும் மாதமும் நடைபெறுகின்றன. நாற்பது வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் அந்த கிளினிக்கில் பதிவு செய்து கொண்டால் இலவசமாக ஒவ்வொரு வருஷமும் செக்கப் செய்து கொள்ள முடியும். எங்கையாவது கார் பைக் ஃப்ரீ சேர்விஸ் என்றால் விழுந்தடித்து ஓடும் நாம் இந்த கிளினிக்குளை பயன்படுத்தாமல் இருப்பது நமது கவனயீனமே அன்றி வேறில்லை.

நான் நன்றாக தானே இருக்கிறேன், சாப்பிடுகிறேன், வேலைக்கு போகிறேன், நித்திரை கொளாகிறேன், எனக்கு எதுக்கு செக்கப் என்று நினைத்தால் வாழ வேண்டும் என்று ஆசை துளிர் விடும் போது உஷாராக வாழ முடியாமல் போய் விடும்‌.

எப்போதும் கராஜிலே (ஹாஸ்பிடலிலே) தான் கிடக்க வரும். வாழ்வே வெறுத்து விடும். வாழ வேண்டும் என்று ஆசை, ஆனால் வாழ முடியாது என்பது எவ்வளவு கொடுமையானது. அதை விட இளம் வயதிலேயே போய் சேர்ந்து விடுவது மேல்.

இறுதியாக எப்படி நல்ல கண்டிஷனாக வாகனத்தை வைத்திருப்பது முக்கியமோ, செக்கப் செய்வது, சேர்வீஸ் பண்ணுவது முக்கியமோ, அதை விட, நமது உடலை நல்ல கண்டிஷனாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். வாகனம் ஆடம்பரம். ஆனால் இந்த உடம்பு அத்தியாவசியம்‌.

ஒரு கார் போனால், ஒரு பைக் போனால், பழுதடைந்தால் காசு இருந்தால் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, லீசிங்கிலாவது இன்னும் ஒன்றை வாங்கி கொள்ளலாம்.

ஆனால் இருக்கின்ற ஒரே ஒரு உடல் போனால் அந்த உயிர் இருந்து என்ன பிரயோஜனம்? காசு இருந்தாலும் வாங்க முடியாது அல்லவா? பாவம் வாழ வேண்டிய மனிதன் இளம் வயதிலே பட்டென்று போட்டார் என்று எல்லோரும் வழமை போல கவலை படுவார்கள். அவ்வளவு தான். வரும் முன் காப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.

அது சரி இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு எத்தனை வயது வரை வாழ விருப்பம்?

பிற் குறிப்பு- உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும், வாழ்வியல் மாற்றங்கள் குறித்தும், போதுமான அளவை விட கூடுதாலாகவே, எழுதியும் கதைத்தும் ஆகீ விட்டது. இது குறித்து அறிய விரும்புபவர்களுக்கு நிறைய பதிவுகள் எனது இந்த AH Wellness Hub பக்கத்திலேயே உண்டு.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான திறவுகோல் என்ன, மருந்தா? இல்லை விருந்தா? இல்லை வேறு ஏதுமா?ஏன்‌ டொக்டர் உங்களுக்கு என்ன பெரிய உ...
01/08/2026

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான திறவுகோல் என்ன, மருந்தா? இல்லை விருந்தா? இல்லை வேறு ஏதுமா?

ஏன்‌ டொக்டர் உங்களுக்கு என்ன பெரிய உடம்பா? ஏன் நீங்கள் காலையில் நடக்குறீங்கள்?

என்ன டொக்டர் உங்களுக்கும் கொலஸ்ட்ரோலா?

ஏன் இந்த வயசுல ஜிம் போறீங்களா? பாரம் தூக்க வேணாம். அது உடம்புக்கு இந்த வயசுல கூடாது.

இப்படி கஷ்டப்பட்டு எக்ஸசைர்ஸ் செஞ்து என்ன நூறு வயசா வாழ போறீங்கள்?

இப்படி, இது போன்ற பல நூறு கேள்விகள் தினமும் பலராலும் கேட்க படுகின்றன. உண்மையில் சமூக ஊடகங்கள், மற்றும் பரபரப்பான வாழ்க்கை சூழலில், 'ஃபிட்னஸ்' என்பது ஒரு ஆடம்பரமான விஷயம் அல்லது இளம் வயதினருக்கானது. இது தேவையில்லாத ஆணி என்ற எண்ணமே படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பலருக்கும் உள்ளது. ஆனால்.

உண்மை என்ன என்றால், ஆரோக்கியமான வாழ்வுக்கு ஃபிட்னஸ் ஒன்று தான் அத்தியாவசியமான முதலீடு என்பதை பலரும் மறந்து விடுவார்கள். அல்லது காலம் தாழ்த்தியே விளங்கி கொள்கிறார்கள்.

உடற்பயிற்சி, வலிமை பயிற்சி (Strength Training), கார்டியோ (Cardio) மற்றும் உணவு கட்டுப்பாடு, போதுமான நித்திரை போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்பதை கேள்விகள்- பதில்கள் ஊடாக விளக்குவதற்காகவே இந்த பதிவு ( கொஞ்சம் நீளமான பதிவும் கூட)

கேள்வி 1: நான் மிகவும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன், நோய்கள் இல்லாமலும் இருக்கிறேன். நானும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

பதில்: ஓம். 'சுறுசுறுப்பு' என்பது நோய் இல்லை என்பதும் வேறு வேறு, 'உடற்பயிற்சி' என்பது வேறு. ஒவ்வொரு வேலைகளில் நாம் சுறுசுறுப்பாக இருந்தாலும், நோய் இல்லாமல் இப்போதைக்கு இருந்தாலும் அவை நமது இதயம், நுரையீரல், மற்றும் தசைகளுக்கு சவால் குடுக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்காது.

அதிலும் குறிப்பாக வயது போக போக
வரும் முதுமையை தாங்கும் நிலையில் நமது உடல் இருக்காது. 50, 60 வயதில் வயோதிபம் நம்மை ஆட்ட துடங்கி விடும். ஒழுங்காக நடக்க முடியாத நிலை வரும். இவற்றை தடுப்பதற்கு முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியானது பல்வேறு வழிகளில் உதவி செய்கிறது.

1. BP இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

2.கொடிய நீரிழிவு, இதய நோய்கள், மற்றும் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

3. மன அழுத்தத்தை குறைத்து, சந்தோஷ மனநிலையை மேம்படுத்துகிறது. (இந்த காலத்தில் மிகவும் தேவையான ஒன்று)

4. நித்திரையின் தரத்தை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு வகை அடிக்சன் கட்டாயம் தேவையாக இருக்கிறது. அந்த அடிகஷனே அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கிறது. மனிதர்களின் மூளையில் சுரக்கும் டோபமின் ஒரு தற்காலிக சந்தோஷ நிலையை நமக்கு ஏற்படுத்துகிறது.

அதை மீண்டும் மீண்டும் அடையத் தூண்டும் ஒரு கிரேவிங்கை கொண்டு வருகிறது. அதுவே, அடிக்ஷனாக பின்னர் மாறுகிறது.

கார்ப்ஸ்( carbohydrates), இனிப்பு பண்டங்கள், குடிபானம், செக்ஸ், போர்ன், சோஷியல் மீடியா, ட்ரக்ஸ், எக்ஸசைர்ஸ், போன்ற எல்லாமே இதில் அடங்கும். அதை அனுபவிப்பர்களுக்கு மாத்திரமே அதன் இன்பமும் சுவையும் தெரியும். அதனால் தான் அதை அனுபவிப்பவர்கள்
அனுபவி ராஜா அனுபவி என்று அதன் பின்னால் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

அனுபவிக்காதவர்களுக்கு அந்த டோபமின் கிடைக்காது. அதனால் அது குறித்து அவர்களுக்கு தெரியது‌.

தெரிய வேண்டும் என்றால் காலை எழுந்தவுடன் நடந்து பாருங்கள். ஓடி பாருங்கள். விடவே மனம் வராது. அது போல இங்கே ஒன்றை எத்தனை பேர் நோட் பண்ணியிருந்தீர்களோ தெரியாது.

எக்ஸசைர்ஸ் தவிர்ந்த மற்ற எல்லா அடிக்ஷனும் நாளடைவில் நம்மை இழைக்க செய்து விடும். நோயாளியாக்கி விடும். ஆனால் எக்ஸசைர்ஸ் மட்டுமே ஆரோக்கியமாக வாழ வைக்கும். அதனால் தான் புத்திசாலிகளின் அடிக்ஷன் எக்ஸசைர்ஸாக இருக்கிறது. நீங்களும் புத்திசாலியா?

கேள்வி 2: நடத்தல், ஓடுதல், ஆடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல் அடித்தல், பட்மிட்டன், ஃபுட் போல் போன்ற கார்டியோ பயிற்சியாளர்கள் மட்டும் காணுமே, வலிமை பயிற்சி Strength Training எதற்கு? அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் குடுக்க வேண்டும்?

பதில்: வலிமை பயிற்சி (Strength Training) என்பது நமது தசைகளுக்கு சவால் குடுத்து, அவற்றின் வலிமையையும், கட்டமைப்பையும் அதிகரிக்கும் ஒரு வகை உடற்பயிற்சியாகும்.

இதில் பளு தூக்குதல் (Weight Lifting), உடலின் எடையை பயன்படுத்தும் பயிற்சிகள் (புஷ்-அப்ஸ், ஸ்க்வாட்ஸ்), ரெசிஸ்டன்ஸ் பான்ட்டுகளை பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

நமக்கு நாற்பது வயது தாண்டும் போது நமது எலும்புகளும் தசைகளும் பலமிழந்து தேய்ந்து போகின்றன்றன. மெல்ல மெல்ல சோர்வடைந்து போகின்றன. எழும்பினால் இருக்க ஏலாது. இருந்தால் எழும்ப ஏலாது என்ற நிலை. அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றால், நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி அவற்றை பலப்படுத்துவது மாத்திரமே. அதற்கு இந்த ஸ்ரெந்த் ட்ரைனிங் உதவி செய்யும்.

Strength training எடுப்பதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.

1. எலும்பு ஆரோக்கியம்: வயதாகும் போது எலும்புகளின் அடர்த்தி குறைவதை தடுத்து அவற்றை வலுவாக்குகிறது. இலகுவாக உடையாமல் பாதுகாக்கிறது.

2. காயங்கள் குறைவு: தசைகள் வலுவாக இருந்தால், அன்றாட வேலைகள் மற்றும் தற்செயலான விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் அபாயம் குறைகிறது.

3. வளர்சிதை மாற்றம் (Metabolism): அதிக தசை இருந்தால், ஓய்வு நேரத்தில் கூட உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. இது எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும். சீனி பிறசர் போன்ற கொடிய நோய்கள் அண்டவே அண்டாது.

கேள்வி 3: Weight Lifting செய்தால், ஆண்களை போல நானும் அதிக தசையுடன் (Bulky) மாறிவிடுவேனா? பெண்கள் Weight Lifting செய்யலாமா? ஐம்பது அறுபது வயதில் உள்ளவர்களும் பாரம் தூக்க வேண்டுமா?

பதில்: ஆண், பெண், இளைஞன், இளைஞி, வயோதிபர் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எல்லோரும் கட்டாயம் வெயிட் லிஃப்டிங் - ஸ்ரெந்த் ட்ரைனிங் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக நாற்பது வயது தாண்டியவர்கள் இதில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இயற்கையாகவே ஆண்களை போல அதிக தசை வளர்ச்சியை தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹோர்மோன் மிக குறைவாகவே சுரக்கிறது. ஆகவே அவர்கள் வெயிட் லிஃப்டிங் செய்வதால் ஒரு போதும் ஆண்களை போல வர மாட்டார்கள்.

பெண்களுக்கு என்று பிரத்தியேக வெயிட் லிப்டிங் ரெசிடென்ட் ட்ரெயினிங் முறைகள் உண்டு. அவற்றை தாண்டி,
அதிக தசைக்காக (Bulky look) குறிப்பிட்ட உணவு, ஸ்டீரொய்ட், சப்ளிமென்ட் மற்றும் கடுமையான பயிற்சி திட்டத்தை பின் பற்றும் பெண்கள் ஆண்களுக்கு மாத்திரமே Body Building உடல்வாகு வரும்.

ஏனைய சாதாரணமாக Weight Lifting செய்யும் பெண்கள், ஆண்களுக்கு வலுவான, ஒல்லியான (Lean) ஆரோக்கியமான உடலமைப்பை உருவாகும். சிறந்த ஆரோக்கியமான Muscle Massஐ அவர்கள் பெறுவதால் இது அவர்களின் Metabolismற்கு மிக சிறந்த அளவில் பங்களிப்பு செய்து, தேவை இல்லாத கொழுப்பு, ஊளைச்சதைகளை அகற்றி அழகான ஸிலிம்மான வயது குறைந்த உடலமைப்பை அவர்களுக்கு குடுக்கும்.

கேள்வி 4: Weight Lifting என்பது இளம் வயதினருக்கு மட்டும் உரியதா? மூத்தவர்கள் செய்யலாமா?

பதில்: வலிமை பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை. மூத்த குடிமக்கள் மிதமான எடையுடன் அல்லது உடலின் எடையை கொண்டே பயிற்சி செய்வது அவசியம்.

இது அவர்களின் சமநிலை (Balance), எலும்பு அடர்த்தி மற்றும் சுயசார்பு தன்மையை மேம்படுத்தும்.‌ வயோதிப காலத்தில் கீழே விழுந்து காயம் ஏற்படுவதை தடுக்கும். Erectile dysfunction போன்ற ஆண்குறி விறைப்பு தன்மை இல்லாமல் போவதை தடுத்து கடைசி சொட்டு வரை உறுதியாக வைத்திருக்கும்.

வாழ்க்கையை அர்த்த படுத்தும். (இப்போது பலருக்கு நாற்பது வயது தாண்டும் போதே சீனி பிறசர் கொலொஸ்டிரால் வருவதால் *இந்த பிரச்சினை* துடங்கி விடுகிறது. மருந்து மாத்திரைகளுடன் அவர்கள் காலம் தள்ளுகிறார்கள் என்பது ரகசியம்)

Weight Lifting செய்வதால் உடலின் வடிவம் மேம்படும். தசை பிடிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் அழகு பெறும். எந்த ஆடைகளும் உடலுக்கு அழகாக பொருந்தி வரும். ஆகவே பளு தூக்குதல் என்பது பாலின பேதமில்லாத, வயது வித்தியாசம் இல்லாத எல்லோருக்கும் தேவையான ஒரு பயிற்சியாகும்.

கேள்வி 5: Strength Training-ஐ விட ஓட்டம் (Running) அல்லது நடைப்பயிற்சி , Cycling (Cardio) போதுமானது அல்லவா?

பதில்: ஓட்டம், நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardiovascular) பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியம். ஆனால், இவை மட்டும் தசை வலிமை மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க போதாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, இந்த இரண்டையும் இணைப்பது மிக அவசியம்.

கார்டியோ: இதய ஆரோக்கியம், சகிப்பு தன்மை. நீண்ட நேரம் நிலை திருத்தல் (Endurance) போன்றவற்றிற்கு மிகவும் அவசியம். அது போல வலிமை பயிற்சி Strength Training, தசை மற்றும் எலும்பின் வலிமைக்கு மிகவும் அவசியம்.

கேள்வி 6: நான் கடினமாக பயிற்சி செய்கிறேன். அதனால் நான் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாமா?

பதில்: ஓம். ஆனால் அளவாக‌. உடற்பயிற்சி என்பது ஒரு சிகரம் என்றால், உணவு கட்டுப்பாடு (Nutrition) என்பது அதன் அடித்தளம். 80% ஆரோக்கியம் உணவை பொறுத்தது. 20% உடற்பயிற்சியை பொறுத்தது என்று ஒரு பொதுவான கருத்து உண்டு.

உணவு தான் உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது, பயிற்சியில் சேதமடைந்த தசைகளை சரி செய்கிறது. ஆகவே போதுமான புரதம் (Protein) தசைகளின் வளர்ச்சிக்கும், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் (Complex Carbs) நீடித்த சக்திக்கும், ஆரோக்கியமான கொழுப்புகள் (Healthy Fats) ஹோர்மோன் சம நிலைக்கும் அத்தியாவசியமாகும். உடற்பயிற்சி செய்து வரும் போது உணவு கட்டுப்பாடு மெதுவாக வந்து சேர்ந்து கொள்ளும். எதை உண்பது எதை உண்ணக்கூடாது என்பது தெரிந்து விடும்.

கேள்வி 7: நித்திரையை தியாகம் செய்து இரவில் அதிக நேரம் பயிற்சி செய்வது சிறந்தது அல்லவா?

பதில்: இது ஒரு மிக பெரிய தவறு! உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை போலவே, போதுமான நித்திரை (6 - 8மணி நேரம்) மிகவும் அவசியம். அதுவும் இரவு நேர நிதாதிரை மிக அவசியம். இரவு 10 - 11மணிக்கே நித்திரை கொண்டு 4 - 5 மணிகாகு எழும்பி விட வேண்டும். ஏனெனில், நாம் நித்திரை போது தான், உடற்பயிற்சியால் சேதமடைந்த தசைகள், உடல் அங்கங்கள் சரி செய்யப்படுகின்றன (Repair), வளர்ச்சி அடைகின்றன. நித்திரை இல்லை என்றால், எவ்வளவு கடின உழைப்பு செய்தாலும், டயட் இருந்தாலும் அது வீண் வேலையாக மாறி விடும். தசைகளின் புத்துணர்ச்சி உடலின் புத்துணர்ச்சி நித்திரையிலேயே தங்கி உள்ளது.

ஒழுங்கான நித்திரையின்மை, பசியை கூட்டும் கிரெலின் (Ghrelin) ஹோர்மோனையும், பசியை குறைக்கும் லெப்டின் (Leptin) ஹோர்மோனையும் பாதிக்கிறது. இதனால், அதிகமாக சாப்பிட தூண்டப்பட்டு உடல் எடை கூடுகிறது. அது போல போதுமான நித்திரை மாத்திரமே நமது கவனம், முடிவெடுக்கும் திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.

சுருங்க சொன்னால், Strength Training மற்றும் Weight Lifting என்பது கட்டுமஸ்தான தோற்றத்திற்கானது மட்டுமானது அல்ல. அது வலுவான எலும்புகள், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் (Metabolism), மற்றும் வயதாகும் போது சுறுசுறுப்புடன் இருப்பதற்கான ஒரு செயல்பாடாகும்.

நீங்கள் 20 வயதினராக இருந்தாலும், 60 வயதினராக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை பயணத்தை இப்போதே துடங்க Strength Training, Cardio, மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகிய மூன்றும் அத்தியாவசியம். அதோடு சேர்த்து தினமும் 6 - 7 மணி நேர போதுமான நிதாதிரை மிகவும் அவசியம். இந்த நான்கும் இணைந்தால் மட்டுமே நீங்கள் ஆரோக்கியமான, ஆற்றல் மிக்க, மற்றும் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

உங்கள் ஆரோக்கிய பயணத்தில் இந்த நான்கு தூண்களில் நீங்கள் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

பிற் குறிப்பு :- வளர்ந்து வரும் விஞ்ஞான மருத்துவ உலகில் இன்னும் கொஞ்ச காலத்தில் 200 - 300 வருடங்கள் நாங்கள் எல்லாம் அசால்டாக உயிர் வாழலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி நடந்தால் அதற்குரிய உடல் வலிமை உங்களிடம் இப்போது இருக்கிறதா?

Address

36, Sellar Veethy
Nallur
00210

Opening Hours

Monday 07:00 - 13:00
16:00 - 20:00
Tuesday 07:00 - 13:00
16:00 - 20:00
Wednesday 07:00 - 13:00
16:00 - 20:00
Thursday 07:00 - 13:00
16:00 - 20:00
Friday 07:00 - 13:00
16:00 - 20:00
Saturday 07:00 - 13:00
16:00 - 20:00
Sunday 07:00 - 13:00
16:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when AH Wellness Hub & Asiri Laboratories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share