ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம்

  • Home
  • ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம்

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம், Medical and health, ., .

நோயற்று வாழ இயற்கை உணவு முறைகள், இயற்கை சித்த, ஆயுள்வேத🌿 மருத்துவ முறைகள் மற்றும் உடலையும் உள்ளத்தையும் 🧬ஆரோக்கியமாக பேணும் பயனுள்ள தகவல்களை தினமும் அறிவோம் 🧬🩺

15/07/2026

"சிவப்பு தங்கம்" என்று போற்றப்படும் குங்குமப்பூ வெறும் சமையலுக்கு மட்டும் இல்ல. 🌺🌸🌺
இது நம் உடலின் இயற்கை மருந்து.

தினமும் 2-3 இழை குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிச்சா, நோய் எதிர்ப்பு சக்தி இரட்டிப்பாகும். மன அழுத்தம் குறைஞ்சு நிம்மதியான தூக்கம் வரும். இதயத்தை பலப்படுத்தும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

சருமத்துல Glow வேணுமா? குங்குமப்பூ + தேன் + பால் Face Pack போதும். கரும்புள்ளி, பருக்கள் மறைஞ்சு முகம் பளபளனு மாறும். ஜீரண பிரச்சனை, கண் பார்வை குறைவு, பெண்களின் ஹார்மோன் பிரச்சனைக்கும் இது அருமையான தீர்வு.

விலை அதிகமா இருந்தாலும் பலன் அதைவிட அதிகம். ஒரு சிட்டிகை போதும், உடல் முழுக்க புத்துணர்சி கிடைக்கும்.
இயற்கைய கைவிடாதீங்க, ஆரோக்கியமா வாழுங்க 💛

13/07/2026

*ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம்* 🌿

நோய் வந்த பிறகு மாத்திரை தேடுவதை விட, நோயே வராமல் தடுக்கும் வாழ்கை முறையை கற்றுக்கொள்வோம். சர்கரை, BP, Thyroid, மூட்டு வலி, மன அழுத்தம் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத நிரந்தர தீர்வு இயற்கையில் உள்ளது. உணவு, யோகா, தியானம் மற்றும் மூலிகைகள் மூலம் உடல் மனம் ஆன்மா மூன்றையும் சமன் செய்யும் பாரம்பரிய அறிவியலை தினமும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியம் தரும் ஆயள்வேத சித்த மருத்துவம் Facebook chenal *-_follow_* செய்யுங்கள் 🙏

*YouTube: MR. NAYANAM YouTube channel Subscribe* 🔔

ஒவ்வொரு வாரமும் புதிய ஆரோக்கிய குறிப்புகள் உங்களுக்காக!

#ஆயுர்வேதம் #சித்தமருத்துவம் #ஆரோக்கியம் #இயற்கைவாழ்வு

-

ஒவ்வொரு நிற உணவுகளில் உள்ள போசனை சத்துக்கள்இவ்வாறன விடயங்களை அறிந்து கொள்ள Follow ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்த...
12/06/2026

ஒவ்வொரு நிற உணவுகளில் உள்ள போசனை சத்துக்கள்

இவ்வாறன விடயங்களை அறிந்து கொள்ள Follow ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம் செய்யுங்கள்

🌸 உடலும் மனமும் சமநிலையா இருக்க வேண்டுமா?🧘‍♀️ 7 சக்ராக்களுக்கு 7 யோகா ஆசனங்கள் போதுமே!💖 தினமும் சில நிமிடங்கள் செய்தாலே ...
27/05/2026

🌸 உடலும் மனமும் சமநிலையா இருக்க வேண்டுமா?
🧘‍♀️ 7 சக்ராக்களுக்கு 7 யோகா ஆசனங்கள் போதுமே!
💖 தினமும் சில நிமிடங்கள் செய்தாலே அமைதி, கவனம், புத்துணர்ச்சி கிடைக்கும்!

நம் உடலில் இருக்கும் 7 முக்கிய சக்தி மையங்களே “சக்ரா”க்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு சக்ராவும் நம் உடல், மனம், உணர்வுகளுடன் தொடர்புடையது.

இந்த எளிய யோகா பயிற்சியில், ஒவ்வொரு சக்ராவுக்கும் ஒரு யோகா ஆசனம் இணைக்கப்பட்டுள்ளது.
மெதுவாக சுவாசித்து, அமைதியாக பயிற்சி செய்தால் உடல் மற்றும் மன சமநிலை மேம்பட உதவும். ✨

🌿 தினமும் சில நிமிடங்கள் செய்தாலே: • மனஅழுத்தம் குறைய உதவும்
• கவனம் அதிகரிக்க உதவும்
• உடல் நெகிழ்வுத்தன்மை மேம்பட உதவும்
• உள்ளார்ந்த அமைதி கிடைக்க உதவும் 💖

📌 உங்கள் அடுத்த யோகா பயிற்சிக்காக இதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்!

#யோகா #சக்ரா #உடல்நலம் #மனஅமைதி #யோகாபயிற்சி #ஆரோக்கியம் #தினமும்யோகா #வாழ்க்கைமுறை

*தோப்புக்கரணம் (Super Brain Yoga)* *1. செய்யும் முறை:*- வலது கையால் இடது காதைப் பிடிக்கவும்- இடது கையால் வலது காதைப் பிட...
27/05/2026

*தோப்புக்கரணம் (Super Brain Yoga)*

*1. செய்யும் முறை:*
- வலது கையால் இடது காதைப் பிடிக்கவும்
- இடது கையால் வலது காதைப் பிடிக்கவும்
- உட்கார்ந்து எழவும்
- நாக்கை மேல் அண்ணத்தில் வைக்கணும்
- உட்காரும்போது மூச்சை வெளியிட்டு, எழும்போது உள்ளிழுக்கணும்

*2. நன்மைகள்:*
- நினைவாற்றல் அதிகரிக்கும் 🧠
- கவனம் & ஒருமைப்பாடு கூடும் 🎯
- படைப்பாற்றல் வளரும் 💡
- மன அழுத்தம் குறையும்
- உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்

*3. அறிவியல்:*
காது மடல்களைப் பிடிக்கும்போது _closed circuit_ உருவாகி, மூளையின் இடது - தர்க்கம், வலது - படைப்பாற்றல் ரெண்டையும் ஒருங்கிணைக்கும். காதுல இருக்குற acupressure points மூளையைத் தூண்டும்.

*4. யாருக்கு பயன்:*
மாணவர்கள், நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்கள், முதியவர்கள், அனைவரும் தினமும் 3-5 நிமிடம் செய்யலாம்.

---@

23/05/2026

முடி உதிர்வதை தடுக்கும் உணவு வகைகள் தெரிந்து கொள்ளுங்கள்

பெறுமதி மிக்க பதிவு ✨👏
23/05/2026

பெறுமதி மிக்க பதிவு ✨👏

சங்குப்பூ தேநீர் (Clitoria ternatea)100% Butterfly Pea Flower tea ☕️ 🦋🦋🦋ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த இத்தேநீர்உடலுக்குத் தீங்கு...
14/05/2026

சங்குப்பூ தேநீர்
(Clitoria ternatea)

100% Butterfly Pea Flower tea ☕️ 🦋🦋🦋

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த இத்தேநீர்
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மோசமான மூலக்கூறுகளை எதிர்த்து போராடுகிறது. 👌

நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. மன அமைதி அளித்து, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதுடன்,
செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை சமநிலைப்படுத்துகிறது. புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

கோப்பையில் இட்டு 1-2 விநாடிகள் மட்டில் அவிய விடவும். சுவையூட்டுவதற்கு தேவையாயின் சீனி சேர்த்துக் கொள்ளவும். (சிறிதளவு)

🌟 உடல் எடை மற்றும் தொப்பையை (𝐁𝐞𝐥𝐥𝐲 𝐅𝐚𝐭) இயற்கையாகக் குறைக்க உதவும் அற்புதமான எளிய வழிகள்! 🌟​இன்றைய மாறிவரும் வாழ்க்கை ம...
14/05/2026

🌟 உடல் எடை மற்றும் தொப்பையை (𝐁𝐞𝐥𝐥𝐲 𝐅𝐚𝐭) இயற்கையாகக் குறைக்க உதவும் அற்புதமான எளிய வழிகள்! 🌟

​இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை, உட்கார்ந்தபடியே செய்யும் வேலை மற்றும் துரித உணவுகளால் பலரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை உடல் பருமன் மற்றும் தொப்பை. பட்டினி கிடந்து எடையைக் குறைப்பதை விட, சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாகக் குறைப்பதே நிரந்தரத் தீர்வைத் தரும்.

​உடல் எடையையும், தொப்பையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் சில எளிய மற்றும் நடைமுறை வழிகள் இதோ:

​𝟏. காலை பானம் (𝐌𝐨𝐫𝐧𝐢𝐧𝐠 𝐃𝐞𝐭𝐨𝐱):
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிப்பது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (𝐌𝐞𝐭𝐚𝐛𝐨𝐥𝐢𝐬𝐦) தூண்டுகிறது. இது நாள் முழுவதும் உங்கள் உடல் தேவையற்ற கொழுப்புகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

​𝟐. நார்ச்சத்து மிகுந்த உணவுகள் (𝐅𝐢𝐛𝐞𝐫-𝐫𝐢𝐜𝐡 𝐅𝐨𝐨𝐝𝐬):
உணவில் அதிகளவு நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நீண்ட நேரம் பசியைத் தாங்குவதோடு, செரிமானத்தை சீராக்கி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

​𝟑. உணவை மென்று சாப்பிடுங்கள்:
"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்பது பழமொழி. உணவை அவசரமாக விழுங்காமல், நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிடும்போது, மூளைக்கு வயிறு நிறைந்துவிட்ட சிக்னல் சீக்கிரம் சென்றுவிடும். இதனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது (𝐎𝐯𝐞𝐫𝐞𝐚𝐭𝐢𝐧𝐠) தவிர்க்கப்படும்.

​𝟒. இரவு உணவில் கட்டுப்பாடு (𝐄𝐚𝐫𝐥𝐲 𝐃𝐢𝐧𝐧𝐞𝐫):
இரவு நேரத்தில் நமது உடலின் செரிமானத் திறன் குறைவாக இருக்கும். எனவே, இரவு 𝟖 மணிக்குள் உணவை முடித்துக்கொள்வது மிகவும் நல்லது. இரவு உணவாக சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், பப்பாளி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுப்பது தொப்பையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.

​𝟓. போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர்:
போதிய தூக்கமின்மை உடலில் 'கார்டிசோல்' (𝐂𝐨𝐫𝐭𝐢𝐬𝐨𝐥) என்ற மன அழுத்த ஹார்மோனை அதிகரித்து, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர வழிவகுக்கும். தினமும் 𝟕-𝟖 மணி நேர ஆழ்ந்த தூக்கமும், குறைந்தது 𝟑 லிட்டர் தண்ணீர் குடிப்பதும் எடை குறைப்பிற்கு மிக அவசியம்.

​கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை:

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் தங்கள் உணவிலிருந்து மைதா, வெள்ளைச் சர்க்கரை (𝐖𝐡𝐢𝐭𝐞 𝐒𝐮𝐠𝐚𝐫), குளிர்பானங்கள் மற்றும் பேக்கரி பண்டங்களை முற்றிலும் தவிர்ப்பது எடை குறைப்புப் பயணத்தை வேகமாக்கும்.
​உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரே இரவில் நடக்கும் மாயமல்ல.

தொடர்ச்சியான முயற்சியும், சரியான உணவுப் பழக்கமும், தினமும் 𝟑𝟎 நிமிட உடற்பயிற்சியும் இருந்தால் நிச்சயமாக ஆரோக்கியமான உடலமைப்பைப் பெறலாம்! 🌿

​👇 உடல் எடையைக் குறைக்க நினைக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவல் மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அவர்களுக்கு உதவ இப்போதே இந்த போஸ்ட்டை 𝐒𝐇𝐀𝐑𝐄 செய்து பகிருங்கள்! 🙏

#𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐢𝐱𝐓𝐚𝐦𝐢𝐥 #𝐖𝐞𝐢𝐠𝐡𝐭𝐋𝐨𝐬𝐬𝐓𝐢𝐩𝐬𝐓𝐚𝐦𝐢𝐥 #𝐁𝐞𝐥𝐥𝐲𝐅𝐚𝐭𝐋𝐨𝐬𝐬 #𝐓𝐚𝐦𝐢𝐥𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐓𝐢𝐩𝐬 #𝐅𝐢𝐭𝐧𝐞𝐬𝐬𝐓𝐚𝐦𝐢𝐥 #𝐍𝐚𝐭𝐮𝐫𝐚𝐥𝐖𝐞𝐢𝐠𝐡𝐭𝐋𝐨𝐬𝐬 #𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐲𝐃𝐢𝐞𝐭 #𝐓𝐚𝐦𝐢𝐥𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 #𝐅𝐚𝐭𝐋

05/05/2026

Address

.

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத சித்த மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share