Dysmenorrhea/Endometriosis/period pain - A to Z

Dysmenorrhea/Endometriosis/period pain - A to Z Make men and women to understand Dysmenorrhea
To create awareness about endometriosis

28/03/2026

கருவிதைப்பையின் வெற்றிப் பயணம்—-2

இடம் மாறிய உதிர திசுக்கள் கருவிதைப்பை உள்ளே::
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஆடி மாதம் இனியகாலைப் பொழுது
வாரத்தின் முதல் நாள் ஒருவித சோம்பலான நிலையில் வெளிப்புற நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தேன்.
பழகிய முகம் சிறு தயக்கத்தோடு இன்னும் இருவரோடு நுழைகிறார். வந்தவர்களை இருக்கையில் அமரச்செய்து வந்த காரணமறிய முற்பட்டேன்.

பழகிய முகம் ஆரம்பித்தது என் மகனுக்கு கல்யாணம் நிச்சயித்து உள்ளோம் என்று.
மகிழ்வோடு நான் வாழ்த்துக்களை பகிர்ந்தேன்.

ஆனால் ஒரு சிறிய சங்கடம் என்றார். இப்பெண் தான் என்று அருகிலமர்ந்த மங்கையை காண்பித்தார்.
துடிப்பான நிறைந்த அழகோடு அப்பெண் பதுமையாய்
பயமோடு எனனை நோக்கினார்.

கையில் நுண்ணொலி பரிசோதனையின் முடிவுகள்.
பரிதவிப்போடு என்னிடம் கொடுத்தார்
வாங்கி பார்த்து ஆராய்ந்ததில் இடமாறிய உதிர திசுக்கள் கருவிதைப்பையில் கட்டியாக ( 15X10 Cm) உருமாறி இருக்கிறது என அறிந்தேன்.
அடுக்கடுக்காய் வினா எழுப்பினர்
குழந்தை பிறக்குமா? கருப்பை வலுவாக இருக்கிறதா? கரு முட்டை வளர்ச்சி இயல்பாக இருக்குமா?
என்னிடம் புன்னகை மட்டுமே பதிலாக.

பொறுமையாக இருங்கள் எனக்கூறி
அடுத்த கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டி இடமாறிய உதிரகட்டி என உறுதி செய்து கொண்டேன்.

தகுந்த ஆலோசனைகளை அளித்து துவாரவழி அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி மட்டும் அகற்றப்பட்டது.வெற்றிகரமான அறுவை சிகிச்சை. ஆனால் அந்த கட்டியின் தன்மையோ தொடர்ந்து வளரக்கூடிய ஒன்று.

இயற்கையாக கிடைக்கும் நிவாரணம் கர்ப்பம் தரிப்பதாலும் மற்றும் மாதவிலக்கு முற்றிலும் நிற்பதாலும் மட்டுமே கிடைக்கும்.

வருங்கால மாமியார் மற்றும் கணவர் இருவருக்கும் மன ஊக்கமடையும் வார்த்தைகளை பேசி நம்பிக்கை அளித்தேன்.

கல்யாணம் முடிந்து மூன்றாவது மாதம் மங்கை வந்தார் சிறுநீரக பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானது.
மகிழ்வான தருணம் எனக்கும் மங்கையின் குடும்பத்தினர்க்கும்.குதூகலமான கர்ப்பகாலம்

நிறை மாதமும் வந்தது பனிக்குடம் உடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இளங்காலைப் பொழுதில் வந்தாள்.
பிரசவ வலியும் வந்தது.நண்பகலில் அழகான பெண்குழந்தைக்கு தாயானாள்.

உயரமோ குறைவு ஆனால் சுக பிரசவம்.
காரணம் கர்ப்பகாலத்தில் மங்கை மாண்போடு செய்த உடற்பயிற்சிகள் மற்றும் மனநிறைவோட பின்பற்றிய உணவுமுறை அறிவுரைகள்

என்னுள்ளே பின்னோக்கி எண்ண அலைகள்.இடமாறிய உதிரக்கட்டி இருப்பவர்களுக்கு இயல்பாக குழந்தை நிற்பது அறிது.மங்கை விதிவிலக்கு.

இங்கு மங்கை மற்றும் குடும்பத்தினரின் நேர்மறை எண்ணங்களும் நம்பிக்கையுமே வெற்றியை தந்தது.

மருத்துவர்.இந்திரா நெடுமாறன்
23.04.20

28/03/2026

பூப்பெய்தல்-5

Teenage/பதின் பருவம்

13 வயதிலிருந்து 19 வயது வரை பதின் பருவம் என்றழைக்கிறோம்

இக்கால கட்டம் ஒவ்வொரு மனிதனின் வாழ்வை எதிர்காலத்தை நிர்ணயிக்கும்

இப்பருவம் தனிமனித ஒழுக்கம், ஆளுமையை வடிவமைக்கக் கூடியது.நம் சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பின் உயிர்நாடி.

பதின் பருவத்தில் ஏற்படும் உடலளவிலான மாற்றம் , உளவியல் மாற்றம் மற்றும் நடத்தை மாற்றங்களுடன் கூடிய சவாலான காலம்.

தற்போதைய கால பதின்பருவர்கள் சந்திக்க கூடிய சவால்கள் சிக்கலானவை.

ஒவ்வருவரும் கடந்து வந்த பாதை.
பெற்றோர் பெரியோர்கள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தினால் வெகு சுலபமாக சமாளிக்கலாம்.

நம் ஒவ்வோருவரும் இதற்கான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்
பின்வரும் பதிவுகளில் ஒவ்வொரு சிக்கலாக ஆராய்வோம்

உங்கள் ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன

28/03/2026

பூப்பெய்தல்-4

உங்கள் மகளின் உயரம் 8-15 வயதுக்குள் தீர்மானிக்கப்படும் நீங்கள் அறிவீர்களா?

உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் கவனிக்க வேண்டியவை

அதிக சக்தி கொடுக் கூடிய உணவுகள் சோர்வடையாமல் பாதுகாக்க

புரத சத்துள்ள உணவுகள் தசை வளர்ச்சி மற்று வலுவான எலும்பு வளர்ச்சி

கால்சியம் சத்து எலும்பு உறுதிக்கு

இரும்பு சத்து சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகபடுத்தி இரத்தப்போக்கை சமாளித்து இரத்த சோகை இல்லாமல் பார்த்து கொள்ள உதவும்

தூக்கம் வளர்ச்சி விகித்த்தை ஊக்கபடுத்தும் 8-9 மணி்நேர தூக்கம் உள்ளுறப்புகள் மற்றும் நாலமில்லா சுரப்பிகளின வேலைகளை சீராக்கு்ம

சமச்சீரற்ற உணவு,ஒழுங்குமுறையற்ற தூக்கம் மற்றும் உடற் பயிற்சியினமை வளர்ச்சி குற்றைபாடுகள் மற்றும் குறைந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட முக்கிய காரணம்

28/03/2026

பூப்பெய்தல் —1.

1. பூப்பெய்தலுக்கான வயது, அறிகுறிகள் என்ன?

இந்திய பெண்குழந்தைகளின் சராசரி பூப்பெய்தும் வயது 12.5 வருடங்கள்

முதன் முதலில் வரக்கூடிய இரத்த கசிவையே பூப்பெய்தல் என்கிறோம்

பூப்பெய்துவதற்கான அறிகுறிகள்

1) மார்பக வளர்ச்சி 8 - 10 வயதில் தெரிய ஆரம்பிக்கும்

2) பெண்ணுறுப்பு மற்றும் தோற்பட்டையின் அடிபகுதியில் முடி வளர்தல் 9 - 11 வயதில் ஏற்படும்

3) துரிதமான வளர்ச்சி விகிதம் 10 -12 வயதுவரை நடக்கும்

மேலும் அறிந்து கொள்ள உங்கள் கேள்விகளை பதிவிடுங்கள் உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உதவக்கூடும்

Address

A To Z Pregnancy Care, P 39, Third Main Road, P Block, 6 Th Avenue Road, Anna Nagar
Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when Dysmenorrhea/Endometriosis/period pain - A to Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dysmenorrhea/Endometriosis/period pain - A to Z:

Shortcuts

Share