09/09/2026
“புதுசா ஏதாவது வந்தால்தான் எனக்கு ஆர்வம் வரும்…” (Adult ADHD - Novelty Seeking Behaviour) ✨
இப்படி உங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறதா? 🤔
🚀 ஒரு புதிய வேலை கிடைத்தால் செம excitement.
🔹 புது project என்றால் முழு வேகத்தில் ஆரம்பிப்போம்.
💡 புது hobby, புது idea, புது experience என்றால் உடனே try பண்ணணும் என்று தோன்றும்.
ஆனால்… 😶🌫️
கொஞ்ச நாட்கள் போனதும் அந்த ஆர்வம் குறைந்து விடும். ஆரம்பித்ததை முடிப்பதற்குள் அடுத்த புதுசான விஷயத்தின் மீது கவனம் போய்விடும். “என்னால எதிலயும் தொடர்ந்து இருக்க முடியலையே…” என்று உங்களுக்குள்ளேயே வருத்தப்பட்டிருக்கலாம். 😔
🧠 Adult ADHD-யில் சிலருக்கு இப்படிப்பட்ட novelty-seeking behaviour இருக்கலாம்.
இது வெறும் boredom-ம் இல்லை. Willpower இல்லாததால மட்டும் நடப்பதும் இல்லை.
ADHD-யில் brain-ன் reward system மற்றும் dopamine தொடர்பான செயல்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் புதிதாகவும், interesting-ஆகவும், urgent-ஆகவும் இருக்கும் விஷயங்கள் அதிக interest-ஐ கொடுக்கலாம். ⚡
அதனால்தான் சிலருக்கு:
🔸 ஒரு project-ஐ ஆர்வமாக ஆரம்பித்து, பாதியில் விட்டுவிடுவது
🔸 அடிக்கடி புதிய hobby அல்லது புதிய interest தேடுவது
🔸 வேலை அல்லது career-ல் மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றுவது
🔸 முடிக்கப்படாத வேலைகள் அதிகமாகிக் கொண்டே போவது
🔸 புதிய experiences-ஐ தொடர்ந்து தேடுவது
போன்ற விஷயங்கள் நடக்கலாம். இது தொடர்ந்து இருந்தால் வேலை, relationships, பண விஷயங்கள் என வாழ்க்கையின் பல பகுதிகளிலும் சிக்கல்களை உருவாக்கலாம். முடிக்கப்படாத வேலைகளும், அடிக்கடி மாறிக்கொண்டிருப்பதும் mental fatigue மற்றும் guilt-ஐ அதிகரிக்கலாம். ஆனால், ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. 💭 இந்த novelty-seeking tendency-ஐ முழுமையாக “ஒழிக்க வேண்டும்” என்பதுதான் தீர்வு இல்லை. அதை சரியான வழியில் channel செய்ய கற்றுக்கொள்வதுதான் முக்கியம். 🌱
🔹 Routine-க்குள்ளேயே கொஞ்சம் variety வைத்துக்கொள்வது,
🔹 நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய creative work அல்லது skill-building activities-ல் கவனம் செலுத்துவது,
🔹 நமக்கு ஏன் புதுசான விஷயம் வேண்டும் என்று புரிந்துகொள்வது,
🔹 தேவையான support-ஐ எடுத்துக்கொள்வது போன்றவை உதவலாம்.
💚 Novelyt Seeking - புதுசான விஷயங்களைத் தேடும் இந்த drive ஒரு குறை மட்டும் அல்ல. சரியான புரிதலும், structure-ம், support-ம் இருந்தால், அதே drive creativity-க்கும் personal growth-க்கும் ஒரு strength-ஆக மாறலாம். ✨
👉 Adult ADHD மற்றும் Novelty-Seeking Behaviour பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள- https://chennaiminds.com/adult-adhd-and-novelty-seeking-behaviour/