RJM Herbal Care

RJM Herbal Care Best for Siddha & Ayurveda medicine.Thanks to people from more supports.

13/12/2022
Suffering from Dandruff? RJM Herbal Care gives you the perfect herbal solution that treats your dandruff permanently.Con...
18/10/2021

Suffering from Dandruff? RJM Herbal Care gives you the perfect herbal solution that treats your dandruff permanently.

Contact Dr. Mangaleswaran Directly @ +91 81222 94464

மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை2....
27/08/2021

மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

இளநீர் போன்றவை மிக நல்லது

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

உங்கள் குழந்தைகள் போல பிற உயிர்கள் மீதும் அன்பு செலுத்தி அன்னதானமும் ஜீவகாருண்யமும் கடைபிடியுங்கள், அப்படி செய்தால் கடவுள் இன்பத்தை உங்களுக்குள் உணரலாம்

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வோம்.

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்1. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தா...
18/12/2019

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்
1. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
2. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளைபும் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
3. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் (syrup) போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
4. ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4 பல்), நான்கு சிட்டிகை மஞ்கள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால், இதய நோய்கள் குணமாகும்.
5. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

சுகர்னு docter கிட்ட போராங்க ..அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார்.ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 ...
21/05/2019

சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார்.

அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது.

*இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.*

1.
*தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*.

2.
*மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல*.

3.
*ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.

4.
*வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*.

*TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை*. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும்
* இயற்கை மருத்துவம், சித்தா, இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,

முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..

*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

31/12/2018

Address

NO. 144 , J Block, Vinayagapuram Main Road, MMDA Colony, Arumbakkam
Chennai
600106

Opening Hours

Monday 4pm - 9:30pm
Tuesday 4pm - 9:30pm
Wednesday 4pm - 9:30pm
Thursday 4pm - 9:30pm
Friday 4pm - 9:30pm
Saturday 10am - 1:30pm
4pm - 9:30pm
Sunday 10am - 1:30pm
4pm - 9:30pm

Telephone

00918122294464

Alerts

Be the first to know and let us send you an email when RJM Herbal Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJM Herbal Care:

Share