Tamilnadu Physiotherapy Doctors Association

Tamilnadu Physiotherapy Doctors Association PHYSIO FRIENDS

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) – ஆழ்ந்த இரங்கல்மிகுந்த துயரத்துடனும் மனவேதனையுடனும், தமிழ்நாடு பிசியோ...
07/06/2026

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) – ஆழ்ந்த இரங்கல்

மிகுந்த துயரத்துடனும் மனவேதனையுடனும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் (TPDA) மதிப்பிற்குரிய உறுப்பினரான டாக்டர் அழகப்பன் தியாகராஜன் (PT), MPT (Sports), PhD அவர்கள் மாரடைப்பால் மலேஷியாவில் காலமான செய்தியை அறிந்தோம்.

டாக்டர் அழகப்பன் அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளர் (Academician), பிசியோதெரபி மருத்துவர் (Clinician), ஆராய்ச்சியாளர் (Researcher) மற்றும் விளையாட்டு பிசியோதெரபி துறையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முன்னோடியான பிசியோதெரபி மருத்துவர் ஆவார். தொழில்முறை மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் பிசியோதெரபி துறையின் முன்னேற்றம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

TPDA அமைப்பின் பல்வேறு பிசியோதெரபி வளர்ச்சி நிகழ்ச்சிகள், அறிவியல் கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று, தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து பலருக்கு ஊக்கமளித்தார். குறிப்பாக Sports Physiotherapy துறையில் அவரது அர்ப்பணிப்பும் சாதனைகளும் என்றும் நினைவுகூரப்படும்.

அவரது மறைவு பிசியோதெரபி கல்வி, மருத்துவப் பணி மற்றும் ஆராய்ச்சி உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற அறிவுசார் மரபும், தொழில்முறை சேவைகளும் வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பில் "கருப்பு தினம்" (Black Day) அனுசரிக்கப்படுகிறது. எனவே, அனைத்து TPDA உறுப்பினர்களும் தங்களது பணியிடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கருப்பு பட்டை அணிந்து, நமது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும், சக பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

🕯️ ஆழ்ந்த இரங்கலுடன்,

டாக்டர்.R.ராஜேஷ் கண்ணா (PT)
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

"உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் விதைத்த அறிவும், ஆற்றிய சேவையும், உருவாக்கிய தாக்கமும் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்."

TPDA - Suggestions on “Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026” - 29.05...
30/05/2026

TPDA - Suggestions on “Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026” - 29.05.2026

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பில் வெளியிடப்பட்ட
“Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026”* தொடர்பான விழிப்புணர்வு சுற்றறிக்கைக்கு ஆதரவு அளித்து, தங்களது மதிப்புமிக்க கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்த Draft Representation தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் ஈடுபட்ட தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க சிறப்பு குழு உறுப்பினர்களுக்கும் எங்களது பாராட்டுகளும் நன்றிகளும்.

உங்கள் ஒற்றுமை, பங்களிப்பு மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வே தமிழ்நாட்டில் பிசியோதெரபி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் உரிமை பாதுகாப்பிற்கும் வலுவான அடித்தளமாக அமையும்.

பரிந்துரைகளை தெரிந்து கொள்ள 👇
https://drive.google.com/file/d/1ANDLU01UPMV0aAftiwD0LvVfNB7qAfTK/view?usp=drivesdk

ஒற்றுமையே வலிமை

Dr.ரா.ராஜேஸ் கண்ணா.(PT)
பொது செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

மாண்புமிகு டாக்டர். கே.ஜி. அருண்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்தமிழ்நாடு அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்...
17/05/2026

மாண்புமிகு டாக்டர். கே.ஜி. அருண்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பாக இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் தலைமையில் தமிழகத்தின் சுகாதாரத் துறை மேலும் வலுப்பெற்று, தரமான மற்றும் சமத்துவமான மருத்துவ சேவைகள் மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் என நம்புகிறோம்.

குறிப்பாக, தடுப்பு சுகாதாரம் (Preventive Healthcare), மறுவாழ்வு மருத்துவம் (Rehabilitation Care), முதியோர் நலன், விளையாட்டு மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள் ஆகிய துறைகளில் பிசியோதெரபியின் பங்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும்,பிசியோதெரபி மருத்துவர்களின் நலன் மற்றும் தொழில்முறை உரிமைகள்,தரமான மருத்துவக் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள்,அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி சேவைகள் விரிவாக்கம்,கிராமப்புற மக்களுக்கும் எளிதில் மறுவாழ்வு சிகிச்சை கிடைக்கும் திட்டங்கள்,“அனைவருக்கும் பிசியோதெரபி” என்ற உயரிய இலக்கை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் தங்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைக்கும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

மக்கள் நலனையும், ஆரோக்கியமான தமிழகத்தையும் உருவாக்கும் தங்களின் பணிகள் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டாக்டர்.ராஜேஷ் கண்ணா.(பி.ம)
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதிரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர...
10/05/2026

இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள
திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள்
சார்பாக
மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தாங்கள் ஏற்றுள்ள இந்த உயரிய பொறுப்பில், தமிழ்நாடு சமூக நீதி, நல்லாட்சி, இளைஞர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றப் பாதையை அடையும் என நம்புகிறோம்.

குறிப்பாக, மருத்துவ துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவம்,பிசியோதெரபி மருத்துவர்களின் நலன், தொழில்முறை உரிமைகள், தரமான மருத்துவ சேவைகள் மற்றும் “அனைவருக்கும் பிசியோதெரபி” என்ற உயரிய இலக்கை செயல்படுத்துவதற்கான அரசின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழக மக்களின் ஆரோக்கியமான மற்றும் செயல்திறன் மிக்க வாழ்க்கைக்காக தங்களின் தலைமையில் சுகாதாரத் துறை மேலும் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Dr.ரா.ராஜேஸ் கண்ணா.(PT)
பொது செயலாளர்,
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் - TPDA

📢 TPDA -தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்களுக்கான முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு🏛️ Allied & Healthcare Professionals (Pr...
28/04/2026

📢 TPDA -தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்களுக்கான முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு

🏛️ Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026

பிசியோதெரபி மருத்துவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

1️⃣ பதிவு அவசியம் ✅
NCAHP / மாநில பதிவில் உள்ளவர்களே சட்டபூர்வமாக பணியாற்றலாம்.

2️⃣ தொடர்ச்சியான திறன் மேம்பாடு 📚
CPD, புதிய அறிவு, Evidence Based Practice, ஆராய்ச்சி போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

3️⃣ நோயாளி உரிமைகள் 🤝
மரியாதையுடன் அணுகுதல்
தனியுரிமை பாதுகாப்பு
தெளிவான தகவல் வழங்குதல்
நோயாளியின் சம்மதம் பெறுதல்
எந்தவித பாகுபாடும் இல்லாமல் சேவை வழங்குதல்

4️⃣ கட்டணத் தெளிவு💰
Consultation fee, treatment charges, procedures ஆகியவை முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.

5️⃣ தடை செய்யப்பட்ட செயல்கள் 🚫
நோயாளி பிடித்தல் / Direct solicitation
Referral commission / Fee splitting
தவறான விளம்பரம்
பொய்யான குணமடைவு உறுதி

6️⃣ விளம்பர நெறிமுறைகள் 📢
அனுமதி: முகவரி, நேரம், சேவை, qualification, health awareness.
தடை: Self promotion, guaranteed cure claims.

7️⃣ மருத்துவ பதிவுகள் 📁
சரியான clinical records பராமரிக்க வேண்டும். சட்டரீதியாக தேவைப்பட்டால் வழங்க வேண்டும்.

8️⃣ தகவல் அறிந்து சிகிச்சைக்கு சம்மதம் ✍️
சிகிச்சைக்கு முன் நோயாளியின் informed consent அவசியம்.

9️⃣ தொழில்முறை ஒற்றுமை 👨‍⚕️👩‍⚕️
மற்ற மருத்துவர்களுடன் மரியாதையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

🔟 சமூக பொறுப்பு 🌍
Public health awareness, emergencies, epidemics காலங்களில் பங்கு பெற வேண்டும்.

1️⃣1️⃣ புகார் & ஒழுக்க நடவடிக்கை ⚖️
தவறுகள் இருந்தால் Commission / State Council-ல் புகார் அளிக்கலாம்.

1️⃣2️⃣ சமூக ஊடக ஒழுக்கம் 📱
நோயாளி புகைப்படம் / வீடியோ அனுமதி இல்லாமல் பகிர வேண்டாம்
தவறான testimonial வெளியிட வேண்டாம்
நோயாளி அழைப்பு / solicitation கூடாது

💪 ஏன் இது பிசியோதெரபி மருத்துவர்களுக்கு முக்கியம்?
✅ தொழில் மரியாதை பாதுகாப்பு
✅ சட்டபூர்வ பாதுகாப்பு
✅ நோயாளி நம்பிக்கை அதிகரிப்பு
✅ தொழில் தரநிலை உயர்வு
📩 உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்
📧 TPDA Official Email ID: [email protected]
🗓️ 15.05.2026 க்குள் அனுப்பவும்
📌 அனைத்து கருத்துகளையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்களின் வலுவான பிரதிநிதித்துவமாக சமர்ப்பிக்கப்படும்.

🤝 TPDA சார்பில் 12 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Draft Regulations தொடர்பான ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் பிரதிநிதித்துவ அறிக்கையை தயாரிக்க இந்த குழு செயல்படும்.
ஒன்றுபட்டால் உயர்வு! 💪

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம்

Dr. ராஜா செல்வகுமார் (PT) – தலைவர்
Dr. ராஜேஷ் கண்ணா (PT) – பொது செயலாளர்
Dr. அம்சவள்ளி (PT) – பொருளாளர்
Dr. சுகன்யா தேவி (PT) – தலைமை பதிவாளர்
Dr. சுரேஷ் குமார் (PT) – துணை பொது செயலாளர்
Dr. வினோதினி (PT) – தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
Dr. ஆனந்த் (PT) – வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
Dr. தினேஷ் ஆனந்தன் (PT) – வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
Dr. பிரகாஷ் (PT) – கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
Dr. செந்தில் குமார் (PT) – மாநில செயற்குழு உறுப்பினர்
Dr. செல்வகுமார் (PT) – மாநில செயற்குழு உறுப்பினர்
Dr. மஞ்சுளா (PT) – தலைவர், போலி பிசியோதெரபி மருத்துவ ஒழிப்பு பிரிவு

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் - TPDA

It's Today!!Come and Make your vote count!! Be there!! Be counted!!தேர்தல் திருவிழா!! தமிழ்நாட்டின் பெருவிழா!!Tamilnadu ...
23/04/2026

It's Today!!

Come and Make your vote count!!

Be there!! Be counted!!

தேர்தல் திருவிழா!! தமிழ்நாட்டின் பெருவிழா!!

Tamilnadu Physiotherapy Doctors Association

🗳️ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026100% வாக்குப்பதிவு – நமது பொறுப்பு!👨‍⚕️👩‍⚕️ பிசியோதெரபி மருத்துவர்களே,நாம் உடல்நலத்த...
22/04/2026

🗳️ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

100% வாக்குப்பதிவு – நமது பொறுப்பு!
👨‍⚕️👩‍⚕️ பிசியோதெரபி மருத்துவர்களே,
நாம் உடல்நலத்தை பாதுகாக்கும் பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமல்ல,
நாட்டு நலனையும் காக்கும் பொறுப்புள்ள குடிமக்களும்! 🇮🇳

✋ உறுதி மொழி எடுப்போம்:
👉 “நான் வாக்களிப்பேன் – மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பேன்”

🎯 நமது இலக்கு: 100% வாக்குப்பதிவு

✔️ ஒவ்வொரு வாக்கும் சக்திவாய்ந்தது 💪
✔️ ஒவ்வொரு வாக்கும் எதிர்காலத்தை உருவாக்குகிறது

📢 நீங்கள் செய்ய வேண்டியது:
🗳️ உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்

👨‍👩‍👧 குடும்பத்தையும், நோயாளிகளையும் ஊக்குவியுங்கள்

🏥 உங்கள் கிளினிக் / மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

🇮🇳 ஆரோக்கியமான நாடு = பொறுப்பான குடிமக்கள்

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் - TPDA

🧠 உலக பார்க்கின்சன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி – TPDAஉலக பார்க்கின்சன் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பிசியோத...
16/04/2026

🧠 உலக பார்க்கின்சன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி – TPDA

உலக பார்க்கின்சன் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA), நியூரோடைவர்ஸ் ஃபிசியோ மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ரீஹாபிலிட்டேஷன் சென்டர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகம் இணைந்து கோவில்பட்டியில் பார்கின்சன் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்த பேரணியின் மூலம் பொதுமக்களிடையே பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு சமூகத்தில் விழிப்புணர்வு பரப்பும் பணியில் சிறப்பாக ஈடுபட்டனர் 👏

👩‍⚕️ கலந்து கொண்ட பிசியோதெரபி மருத்துவர்கள்:
• டாக்டர் வினோதினி.(PT) MPT (Neuro) – தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர், TPDA
• டாக்டர் .லீலா.(PT)
• டாக்டர் ஜெனிஃபர்,(PT)MPT(Neuro)
• டாக்டர் முத்துகிருஷ்ணன்.(PT) MPT (Ortho)
மேலும்,
• திரு. சிவராஜ் (மேனேஜர், நியூரோடைவர்ஸ் ஃபிசியோ & மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ரீஹாப் சென்டர்)
அவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

💡 முக்கிய தகவல்:
✔ ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிக அவசியம்
✔ சரியான பிசியோதெரபி சிகிச்சை மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்

இந்த நிகழ்ச்சி சமூகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தகைய சமூகப் பொறுப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுகிறேன்.

Dr.R.ராஜேஸ் கண்ணா.(PT)
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

📢 Important Announcement – Attention Physiotherapy Doctors of Tamil NaduAll Physiotherapy Doctors across Tamil Nadu are ...
15/04/2026

📢 Important Announcement – Attention Physiotherapy Doctors of Tamil Nadu

All Physiotherapy Doctors across Tamil Nadu are requested to take note.

The official website of the Tamil Nadu State Allied and Healthcare Council is now active.

Website: https://tnsahc.org

All physiotherapy doctors are advised to visit the website and stay updated for upcoming procedures.

Thank you.
Warm regards,

Dr. R. Rajesh Kanna (PT)
General Secretary
Tamil Nadu Physiotherapy Doctors Association (TPDA)

Address

No. B 39 Hudco Colony, Gandhimanagar, Peelamedu
Coimbatore
641018

Telephone

+919043796777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Physiotherapy Doctors Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Physiotherapy Doctors Association:

Share