தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு

  • Home
  • India
  • Madurai
  • தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
Directions

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான

மாலை முரசு, மாலைமலர் பத்திரிக்கை செய்தித்தாளில்
09/08/2026

மாலை முரசு, மாலைமலர் பத்திரிக்கை செய்தித்தாளில்

இன்று 8.8.2026 சனிக்கிழமை நமது மாநில தலைவர் கே. ஜி.டி .புஷ்பராஜ் அண்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார...
09/08/2026

இன்று 8.8.2026 சனிக்கிழமை
நமது மாநில தலைவர் கே. ஜி.டி .புஷ்பராஜ் அண்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார் அவர்களின் தலைமையில்.

நமது சட்ட ஆலோசகர் மதிப்பிற்குரிய முத்துக்குமார் அட்வகேட் அண்ணன் அவர்களின் பெரும் முயற்சியில்

நமது அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன்
மீனாட்சி அம்மன் தாயாரையும் சொக்கர் அப்பன் அவர்களையும் சிறப்பு தரிசனம் செய்ய
இந்து அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இறைவனை மிக அருகில் இருந்து தரிசனம் செய்ய நல்ல வாய்ப்பு ஆக அமைந்தது
இதனை அருமையாக ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் மேடம் அவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர் ஆர் சுரேஷ் பாண்டியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு
ஆர் சுரேஷ் பாண்டியன்
மதுரை மாவட்ட தலைவர்

19/07/2026
இன்று 19/7/2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை பசுமலை பைபிள் காலேஜில் நமது மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார் அவர்களின் தல...
19/07/2026

இன்று 19/7/2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை பசுமலை பைபிள் காலேஜில்

நமது மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார் அவர்களின் தலைமையில்..

மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்
மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது அமைப்பின்
எதிர்கால செயல்திட்டங்கள் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
மேலும் இந்த ஆண்டுக்கான தீபாவளி விழாவை எவ்வாறு நடத்துவது மற்றும் அதற்கான வழிகாட்டு தலை நமது மாநில பொதுச் செயலாளர் சிறப்பாக வழிகாட்டினார்..
மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசிற்கு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் அரசிடம் இருந்து எவ்வாறு நமக்குத் தேவையான சலுகைகளை பெறுவது பற்றிய வழிகாட்டுதலும் செய்யப்பட்டது..
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு
மதுரை மாவட்ட தலைவர் ஆர் சுரேஷ் பாண்டியன், மாவட்டச் செயலாளர் ராவியத் பேகம் மேடம் மற்றும் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி அவர்கள் மாவட்டத் துணைத் தலைவி உமா மகேஸ்வரி மேடம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆனையூர் கணேசன் அவர்கள், மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஊன்று கோல் அணி நிர்வாகிகள்
சிறப்பாக ஒருங்கிணைத்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு நமது அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்..

இப்படிக்கு
ஆர் சுரேஷ் பாண்டியன்
மதுரை மாவட்ட தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளி கள் கூட்டமைப்பு

இன்று நமது மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்..நமது மாவட்ட செயலாளர் ராவியத் பேகம்...
22/05/2026

இன்று நமது மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா சார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்..
நமது மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் அவர்களின் பெரும் முயற்சியினாலும்

நமது அமைப்பைச் சார்ந்த 50 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான பேக், நோட்புக், பேனா பென்சில், மற்றும் வாட்டர் கேன் கூடிய பொருட்கள்
யு கேன் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் அகிபா மேடம் அவர்களால் வழங்கப்பட்டது என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. மேலும் இவ்விழாவில் நமக்கு ஊன்றுகோலாக உதவிய
மாவட்ட ஊன்று அணி செயலாளர் முகமது தையுப் அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு உதவும்
டாக்டர் அகிபா மேடம் அவர்களுக்கு
தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின்
அனைவரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
ஆர். சுரேஷ் பாண்டியன்
மதுரை மாவட்ட தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட மாமன்னனை! பெற்றுத் தந்த தாய்க்கு தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பாக ...
18/02/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட மாமன்னனை! பெற்றுத் தந்த தாய்க்கு தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பாக நினைவஞ்சலி செலுத்துகிறோம்..

ஆர் .சுரேஷ் பாண்டியன்
மதுரை மாவட்ட தலைவர்

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share