கிராமத்து மருத்துவம்

கிராமத்து மருத்துவம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கிராமத்து மருத்துவம், Madurai.

06/04/2026

மிளகாயால் வரும் கேன்சர் நோய் .

30/03/2026

20ம் நூற்றாண்டில் எண்ணெய் தோய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது ...

ஆண்களுக்கு பலன் பின்வருமாறு

ஞாயிறு எண்ணைய் குளியல் ;-
இருதயத்தில் தாபம் ...

திங்கள் எண்ணெய் குளியல் ;-
பொழிவு தரும் மேனி

செவ்வாய் எண்ணெய் குளியல் ;-
அற்பாயுள்

புதன் எண்ணெய் குளியல் ;-
செல்வநிலை மேலோங்கும்

வியாழன் எண்ணெய் குளியல் ;-
தரித்திரம் தாண்டவம் ஆடும்....

வெள்ளி எண்ணெய் குளியல் ;-
ஆண்களுக்கு ஆபத்தை தரும்

சனி எண்ணெய் குளியல் ;-
தீர்க்காயுள் தரும்
(சனி நீராடு என்று சொல்லி விட்டு போயுள்ளது ஒளவையார் )

சரி அதேபோல
பெண்களுக்கு ??****

செவ்வாய் எண்ணெய் குளியல் ;-
பாக்ய விருத்தி தரும்

வெள்ளி எண்ணெய் குளியல் ;-
செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள்
இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!!!

"தசமி,பஞ்சமி ,திருதியை ,சப்தமி ,துவிதியை ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது ...
உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள் )எண்ணெய் குளியல் செய்ய ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவர்த்தி உண்டாகும் ,,,
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல்
பிரதமை திதி
சதுர்த்தி திதி (4)
சஷ்டி திதி
நவமி திதி
சதுர்த்தசி திதி (14)
அமாவாசை திதி
ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்யின்
ஆயுள் குறைவு ஏற்படும்
புக்தி குறையும்
உடல் வலிமை இழக்கும்
செல்வநிலை நாசத்தை அடையும்

தவிர்க்க முடியாமல் சாதகமான நாட்களில் இந்த திதிகள் கலந்து வந்தால் சிறிதளவு நெய் (தலையில் நரைமுடி விழும் என்கிறார்கள் )அல்லது தண்ணீர் கலந்து எண்ணெய் உடன் கலந்து தேய்க்கலாம் ......

ஜென்ம ,அனுஜென்ம ,திரி ஜென்ம நட்சத்திரம் அமைந்த நாட்களில் மற்றும்

தமிழ்மாத முதல் தேதி மற்றும்
கேட்டை ,உத்தர ,திருவோணம் ,திருவாதிரை ,போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க செல்வநிலை நாசமும் ஆயுள் குறைவும் அமையும் ஆகவே இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் ....

இதிலும் ஆண்கள் வியாழக்கிழமை எண்ணெய் குளியல் ஆகாது என்று சொன்னாலும் அந்த வியாழக்கிழமை ஆனது

சுவாதி நட்சத்திரம் கூடிய வியாழன்
திருதியை திதி கூடிய வியாழன்
பஞ்சமி திதி கூடிய வியாழன்
எண்ணெய் தேய்த்து குளிக்க
ஆரோக்கியமான உடல்நலம்
செல்வநிலை மேன்மைகள்
ஆயுள் தீர்க்கம் உருவாகும் என்பது குறிப்பிட தக்கது ......
இதில் பெண்களுக்கு மிகமிக முக்கியமாக சொல்ல வேண்டியது
தாய்குலங்களே தயவுசெய்து நீங்கள்
செவ்வாய்க்கிழமை
வெள்ளிக்கிழமை தவிர வேறு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிருங்கள் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம்
உங்கள் மனதில் நிம்மதி
தீர்க்க சுமங்கலி யோகத்தை இவைகள் தரும்.

28/02/2026

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

26/02/2026

வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சா*க வேண்டியதுதான்” என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.

மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.

மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர்.

இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.

மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.

அது உணவுப் பொருள் வேகும்போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது.

துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.

பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.

கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

காலையில் நீராகாரத்தை உண்டனர்.

தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.

மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது.

பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.

உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.

இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.

நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.

அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.

இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.

மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.

இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.

அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.

பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம்.

இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.

அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.

பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

நாமும் இயன்றவரை முன்னோர் உணவுப் பழக்கங்களை கையாள முயற்ச்சிப்போம்.

“ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்”

24/02/2026

*ஒருவர் இறந்தார் என்பதை*
*ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள்.* *அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத்*தெரிந்து*
*கொள்ள முடியாது.*

*தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால்* *எழுதினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.*

1) காலமானார் - வயதாகி இறப்பது
2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது
3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது
4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது
5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது
6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்
7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம் - விமானம் , ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது .

*இதுதான் தமிழ் மொழியின் பெருமை.*

Address

Madurai

Telephone

9751658785

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிராமத்து மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share