09/09/2026
மூட்டு அழற்சிக்கு முற்றுப்புள்ளி:-
உடல் எதிர்ப்பாற்றல் புரதங்களால் மூட்டு பாதிக்கப்படுவதால் இத்தகைய வாதம் ஏற்படுகிறது. இந்த நோய் மூட்டுகளை மட்டும் பாதிப்பதில்லை. நுரையீரல், கண், சருமம், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு என உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கும். வலது, இடது என இரண்டு கை, மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் ஒரே நேரத்தில் இதனால் பாதிக்கப்படலாம். வலி குறிப்பாக, காலை வேளைகளில் அதிகமாக இருக்கும். மூட்டிலுள்ள சவ்வும் பாதிக்கப்படும்.
தேவையான பொருட்கள்..
முடக்கத்தான் - 50 கிராம்
வாதநாராயணா - 50 கிராம்
அருகம்புல் - 50 கிராம்
குப்பைமேனி - 50 கிராம்
பிரண்டை - 50 கிராம்
சித்தரத்தை - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
கறிவேப்பிலை - 50 கிராம்
தேத்தான்கொட்டை - 35 கிராம்
நிலாவரை - 25 கிராம்
சுக்கு - 25 கிராம்
நொச்சி - 25 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
அமுக்கரா கிழங்கு - 20 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
ஓமம் - 20 கிராம்
வாய்விளங்கம் - 20 கிராம்
பறங்கிச் சக்கை - 20 கிராம்
கடுகுரோகிணி - 20 கிராம்
தாளிசபத்தரி - 20 கிராம்
சாரணைவேர் - 20 கிராம் சித்திரமூலவேர்ப்பட்டை - 20 கிராம்
வெள்ளைக் கடுகு - 20 கிராம்
சதகுப்பை - 20 கிராம்
கருஞ்சீரகம் - 20 கிராம்
மேலே சொன்ன அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் அதிகாலை, மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்கு தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி, மூட்டு அழற்சி, மூட்டுச் சிதைவு, மூட்டு வாதம், கீழ் வாதம், எலும்பு மெலிதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.
குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் பயன்படுத்த கூடாது.