Cithiramaezhi

Cithiramaezhi Home needs and Health needs

இயற்கை இரு விதமாகவும் செயல்படும் அற்புதம் எனலாம்.சூரியனின் மூலம் கோடை காலத்தையும்,வெப்பத்தையும் உருவாக்கும் அதே இயற்கை அ...
28/04/2022

இயற்கை இரு விதமாகவும் செயல்படும் அற்புதம் எனலாம்.சூரியனின் மூலம் கோடை காலத்தையும்,வெப்பத்தையும் உருவாக்கும் அதே இயற்கை அதை தணிக்கும் கொடையையும் வழங்குகிறது.வெள்ளரி,இள நீர்,பனை நுங்கு,நன்னாரி சர்பத்,என பல இருப்பினும் அவற்றுடன் நீங்கள் இனி இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விலாமிச்சு வேர் – நல்ல சுகந்தமான வேர் இது.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.வாங்கி வந்து சுத்தான மெல்லிய ( பருத்தி வேட்டி நன்று) துணியில் கட்டி குடி நீர் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து அந்த தண்ணீரை அருந்தி வரலாம்.உடல் சூட்டை தணிக்கும்.வயிற்று அழற்சியை போக்கும்.வேனல் கட்டி,வேர்க்குரு வராமல் தடுக்கும்.பயன் படுத்தி பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை ,கருத்தை பதிவிடுங்களேன்.

#விலாமிச்சுவேர் #மரபுவாழ்வியல்

நமக்கு வெற்று விளம்பரங்களின் மீது பற்று உள்ள அளவிற்கு நாம் பல்லாண்டு காலமாய் பயன்படுத்தி வந்தவற்றின் மீது நம்பிக்கை இல்ல...
25/04/2022

நமக்கு வெற்று விளம்பரங்களின் மீது பற்று உள்ள அளவிற்கு நாம் பல்லாண்டு காலமாய் பயன்படுத்தி வந்தவற்றின் மீது நம்பிக்கை இல்லை.ஒரு நடிகரோ நடிகையோ செய்யும் விளம்பரத்தை பார்த்து அதை நம்பி வாங்க துடிக்கிறோம்.அவர்கள் அந்த விலம்பரப்படங்களிலும் பணம் வாங்கிக்கொண்டே நடிக்கிறார்கள் என்ற அறிந்திருந்தாலும் நாம் அந்த பொருளையே முதன்மையாக நினைக்கிறோம்.

ஒரு சாதாரண பாத்திரம் விளக்கும் பஞ்சை படாடோபபான விளம்பரம் மூலம் நமது தலையில் கட்டிவிட முடியும்.இந்த ஸ்க்ரப்பர் நீண்ட நாள் உழைக்கும்.ஆனால் அது வேதிப்பஞ்சினால் ஆனது.உணவுப்பாத்திரங்களை வேதிப்பொருள்களை கொண்டு தொடர்ச்சியாக கழுவி வருவதும் வயிற்று ஒவ்வாமை,செரியாமை,நெஞ்செரிச்சலுக்கு காரணமாகலாம்.

பாத்திரம் துலக்க எண்ணெய் பிசுக்கை எடுக்க என நம் வாழ்வியலில் உசிலம் பொடியும்,சீயக்காயும் தொட்டு துலக்க பீர்க்கங்கூடும் உண்டு.உடல் தேய்த்து குளிக்கவும் பீர்க்கங்கூடே பயன்பாட்டில் இருந்தது.நீரில் ஊறவைத்து விட்டால் மிருதுவாகிவிடும்.சீயக்காய் தூளோ ,சோப்போ போட்டு தேய்க்கலாம்.வெறுமே நீரில் குளித்து பீர்க்கங்கூடை வைத்து தேய்த்தால் சில தோல் நோய்களுக்கும் மருந்தாகும்.

இயற்கையின் அழகான வடிவமைப்பில் ஒன்று பீர்க்கங்கூடு.சூழலுக்கு உகந்தது.எந்த கேடும் அற்றது.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.முயற்சித்து பாருங்கள்.
#பீர்க்கங்கூடு #மரபுவாழ்வியல்

சித்தவைத்தியம் – இந்த சொல் இன்று நகைப்புக்கிடமான ஒன்று. நகைப்பதற்கு முன் ஆங்கிலமருத்துவத்தின் துவக்கம் எப்போதிருந்து ? அ...
21/04/2022

சித்தவைத்தியம் – இந்த சொல் இன்று நகைப்புக்கிடமான ஒன்று. நகைப்பதற்கு முன் ஆங்கிலமருத்துவத்தின் துவக்கம் எப்போதிருந்து ? அதற்கு முன்பு மனிதர்கள் வாழவில்லையா ? கொள்ளை நோயே இல்லையா ? கொஞ்சம் யோசிக்கலாம்.எந்த மருத்துவம் சிறந்தது என எந்த போட்டியும் இல்லை.எது நோய் தீர்க்கிறதோ அதை நாடலாம்.

இன்றைக்கு நம்மை பீதியில் ஆழ்த்தியிருக்கும் நோயான கொரானா தாக்குவது நுரையீரலை அதன் மூலம் சளி ,இருமல் ,தும்மல் இன்ன பிற .நுரையீரலை வலுப்படுத்துவதன் மூலம் அதனை எதிர்கொள்ளமுடியும்.இன்றைக்கும் குழந்தை பிறக்க,வளர,நோய் வராது தடுக்க ,வந்தால் போக்க என வாழ்வே முழுக்க மருந்துகளின் பிடியில் போய்விட்டது.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் கட்டாது இருக்க,கோழை சேராது இருக்க பச்சிளம் குழந்தைகளாக இருப்பின் பாலூட்டும் தாய்க்கு கல்யாணமுருங்கை இலை பறித்து அரிசி மாவில் அடைதட்டி சாப்பிடுவர்.தானாக உண்ணும் குழந்தைகளுக்கு அடையை சாப்பிட செய்வார்கள்.நுரையீரலின் உள்ள சளி வெளியேறிவிடும்.இவையெல்லாம் எந்த மருந்துக்கடையிலும் இல்லை.நமது வாழ்வின் பகுதியாக அன்றாடபயன்பாட்டில் இருந்தவை.சந்ததி மீது அக்கறை உள்ளோர் முயற்சிக்கலாம்.

#கல்யாணமுருங்கை #மரபுவாழ்வியல்

தொம்பை என்பது இதன் பெயர் .தர்மபுரி மாவட்டத்தில் கிராமங்களில் கிட்டத்தட்ட தரையிலிருந்து ஒரு அடிக்கு மேல் கருங்கற்களின் மே...
20/04/2022

தொம்பை என்பது இதன் பெயர் .தர்மபுரி மாவட்டத்தில் கிராமங்களில் கிட்டத்தட்ட தரையிலிருந்து ஒரு அடிக்கு மேல் கருங்கற்களின் மேலே வரிசையாக மூங்கில்களை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி அதன் மேல் மூங்கிலை பிளந்து தட்டியாக பின்னி வளைத்து குடுவை போலாக்கி அதன் மேல் களிமண் பூச்சு . மேலே கூரை .இது தான் தானியகிடங்கு .

வரகு ,சாமை ,திணை ,குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை கொஞ்சம் மிளகையும் ,வேப்ப இலையும் கலந்து இதனுள்ளே வைத்து தான் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை பாதுகாக்கிறார்கள் .பூச்சிகள் ,எலி தொந்தரவு எதுவும் இல்லை .இயற்கையோடு இணைந்து ,இயற்கையை சேதப்படுத்தாது ,அதன் வழி வாழக்கற்றவர்கள் நம் முன்னோர்கள் .

சூழலுக்கு எந்த கேடும் அற்ற இதை போன்று ஒரு ஆச்சர்யப்படுத்தும் வடிவமைப்பை ஒவ்வொரு பகுதியிலும் வைத்திருக்கிறார்கள் . நமது பண்பாடும் பழக்க வழக்கங்களும் எவ்வளவு உள்ளர்த்தம் மிக்கவை .ஒரு போதும் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காதவை என்பதை பல்வேறு பகுதிகளில் பயணிக்கும் பயணங்களே நமக்கு உணர்த்துகின்றன .

#தொம்பை #மரபுவாழ்வியல்

ஈஸ்வர முள்ளி, ஈஸ்வர மூலி, பெருங்கொடி, பெருமருந்து என்ற வழக்க பெயர்களால் அறியப்படும் இந்த ஏறுக்கொடியை Englishல் Indieum b...
13/04/2022

ஈஸ்வர முள்ளி, ஈஸ்வர மூலி, பெருங்கொடி, பெருமருந்து என்ற வழக்க பெயர்களால் அறியப்படும் இந்த ஏறுக்கொடியை Englishல் Indieum birthwort என்பார்கள். என்ற தாவரவியல் பெயர்கொண்ட இதன் பூக்கள் கொக்கை போன்று இருப்பதால் கொக்குப்பூ என்றும் சொல்வார்கள்.

மாந்ரீகத்தில் ஜனவசியத்திற்காக பயன்படுத்தும் இதை வேட்டைகாரர்கள் விலங்குகளை தன்வசப்படுத்த இடுப்பில் சுற்றிக்கொண்டு வேட்டைக்கு செல்லும் பழக்கமிருக்கிறது.

இலை தோல் நோய்களுக்கு மருந்தாகவும் கொடி கால்நடைகளுக்கு மருந்தாகவும் பயன்படும்.

இலைச்சாறு விரியன் வகை பாம்பு கடிக்கு முதலுதவியாக பயன்படும் முதன்மை மருந்து.

முன்பு வீடுகளில் பயன்படுத்திய உறி போன்ற வடிவ காய்களை கொண்டதால் உறிக்கொடி என்று பெயர்.

#ஈஸ்வரமூலி #உறிக்கொடி...

படமும் பதிவும்.. Saravanakumar Ramachandran

"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் "என்பார்கள் .அதாவது நமது கையால் முகத்திலிருந்து பாதம் வரை சரியாக எட்டு சாண் தான் நமது ...
10/04/2022

"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் "என்பார்கள் .
அதாவது நமது கையால் முகத்திலிருந்து பாதம் வரை சரியாக எட்டு சாண் தான் நமது உயரம் .உடலின் கட்டுப்பாட்டு மையம் தலை .

உடலின் எந்த பகுதியில் வலி ஏற்படினும் பொறுத்துக்கொண்டு நாம் நடமாடலாம் .வேலை செய்யலாம்.ஆனால் சிறிதாக ஏற்படும் தலைவலியை பொறுக்க முடிவதில்லை .சரியான தூக்கம் இல்லாததால் தலையில் ஏற்படும் இறுக்கமான உணர்வு .சளி ,பனியில் அலைவதால் ஏற்படும் தலைப்பாரம் போன்றவற்றுக்கு நொச்சி அருமையான தீர்வு .

நொச்சி சாதாரணமாக வேலியோரங்களில் வளரும் குத்துச்செடி.நெடி ஏறக்கூடிய வாசனையுள்ள இவற்றை பறித்து வந்து வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் தலையில் இருந்து கால்வரை மிக நிதானமாக ஊற்றி குளிக்க தலைவலி,உடல்வலி ,மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலி இவற்றை போக்கும்

இலையை பறித்து துணிப்பையிலடைத்து இரவு தலையணை போல் வைத்து உறங்க தலை நீரேற்றம் ,தலைவலி ,மூக்கின் வழியாக நீர் வடிதல் இவை சிறிது சிறிதாக நீங்கிவிடும் .தலையில் உள்ள பேன்களும் போய்விடும்
உழவர்கள் இதனை வயல்களில் பூச்சிவிரட்டியாக பயன்படுத்துவது உண்டு .நம்மை சுற்றி நமது அருகிலேயே இருக்கும் பலவற்றின் மதிப்பு நமக்கு புரிவதே இல்லை .

#நொச்சி #மரபுவாழ்வியல்

நவீனம் என்று நாம் தொலைத்த பழக்கங்களில் ஒன்று எண்ணை தேய்த்து குளிப்பது . எண்ணை தேய்த்து குளிப்பதால் ஒரு பயனும் இல்லைன்னு ...
08/04/2022

நவீனம் என்று நாம் தொலைத்த பழக்கங்களில் ஒன்று எண்ணை தேய்த்து குளிப்பது . எண்ணை தேய்த்து குளிப்பதால் ஒரு பயனும் இல்லைன்னு ஆங்கில மருத்துவம் சொன்னதால அதை வேதமா கேட்டுக் கெட்டோம் !

வண்ணத்து பூச்சி தேன் குடிக்கற பூ, தும்பை பூ வண்ணத்து பூச்சி புடிச்ச எல்லோருக்கும் தெரியும் .அதுல ஒரு இருபது பூ எடுத்துட்டு வந்து நல்லெண்ணெயில் போட்டு ஒரு மணி நேரம் வச்சிருந்து அந்த நல்லெண்ணைய எடுத்து தலை உச்சியில் சூடு பரக்க தேச்சு, உடம்பு முழுக்க தடவி ,ஒரு அரைமணிநேரம் கழிச்சு ரொம்ப குளிர்ச்சியா இல்லாம கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணியில குளிக்கணும் இதெல்லாம் காலைல ஒரு ஒன்பது மணிக்குள்ள பணணனும் ..சனிக்கிழமை ஆண்களுக்கும் ,வெள்ளி பெண்களுக்கும் உகந்தது. இதுல ஒரே ஒரு நிபந்தனை தான் ,எண்ணை தேச்சு குளிக்கற அன்னைக்கு பகல்ல தூங்கக் கூடாது .கலவி கூடாது .எந்தவிதமான போதை வஸ்துக்களும் எடுத்து கொள்ளக்கூடாது.

இன்னைக்கு பொழுதுக்கும் கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து உடம்பு சூடாகி ,கண் சிவந்து எரிச்சல் வந்து ,தலை முழுக்க நரைத்து ,இராத்திரியில தூக்கம் வராம தவிக்கிற எல்லோருக்கும் தும்பையும் நல்லெண்ணையும் ஒரு வரம்.குளிச்சு பார்த்துட்டு சொல்லுங்க .

#தும்பை #பாரம்பர்யவாழ்வியல்

இலுப்பை இன்று வெகு பயன்பாட்டில் இருந்து பெருமளவு மறைந்து போன பெயர் .கோவில் கதவுகள் ,அரண்மனை கதவுகள் எல்லாம் இலுப்பை மரத்...
06/04/2022

இலுப்பை இன்று வெகு பயன்பாட்டில் இருந்து பெருமளவு மறைந்து போன பெயர் .கோவில் கதவுகள் ,அரண்மனை கதவுகள் எல்லாம் இலுப்பை மரத்தினால் செய்யப்பட்டவை .நல்ல திறன் வாய்ந்த தச்சர்களால் செய்யப்பட்ட கதவுகள் மூடப்பட்ட பின் தண்ணீர் கசிவை கூட வெளியே விடாத அளவுக்கு பலம் வாய்ந்தவை .ஒரு கோட்டையின் கதவுகளாக இரும்பு பூண் போட்டு நிறுத்தப்படும்போது யானைகளால் கூட மோதி உடைக்க முடியாதவை .

இலுப்பை வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணையே கோவில்களில் பெரும்பாலும் அன்றாட பயன்பாட்டில் இருந்தது .இலுப்பை நெய் என்றே சொற்பிரயோகம் .கொஞ்சம் சூடு படுத்தியே பயன்படுத்தமுடியும் .குளிர்காலங்களில் வீட்டினுள் இலுப்பை எண்ணை ஊற்றி விளக்கு ஏற்ற வீட்டினுள் இதமான சூடு பரவும் .விளக்கில் சூடேறும் எண்ணையை மூட்டுகளில் கை கால்களில் வலி உள்ளோர் எடுத்து தொடர்ந்து தேய்த்து வர குணமேற்படுவதை காணலாம் .
சொறி ,சிரங்கு ,தேமல் உள்ளோர் இலுப்பை பிண்ணாக்கை குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து ஊற,சிறிது நேரம் கழித்து குளித்து வர,குணமடைவதை காணலாம் .காற்றை சுத்திகரிப்பதில் பெரும்பங்கு வகிப்பது இலுப்பை மரம் சூழலுக்கு மிகவும் இதமானது .
குறிப்பு - இவையெல்லாம் எந்த வித ஆராய்ச்சியும் செய்து நிரூபிக்கப்படாதவை .ஹமாம் போன்று இதை எந்த டாக்டரும் பரிந்துரைப்பதில்லை .

#இலுப்பை #பாரம்பர்யம்

Address

59, Reddiyarpalayam
Pondicherry
605010

Opening Hours

Monday 10am - 6am
Tuesday 10am - 6am
Wednesday 10am - 6am
Thursday 10am - 6am
Friday 10am - 6am
Saturday 10am - 6am

Telephone

+919488455115

Alerts

Be the first to know and let us send you an email when Cithiramaezhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cithiramaezhi:

Share