16/10/2024
#பெறுநர்
மேதகு ஆளுநர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
ராஜ்பவன், கிண்டி,
சென்னை.
#மதிப்பிற்குரிய அய்யா. வணக்கம்.
எங்களது சங்கம் மருந்தாளுனர்கள் நலனிற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் செயல்பட வேண்டியும், துவங்கப்பட்டது. மருந்தாளுனர்களின் வாழ்க்கையின் நலனுக்காக, சங்கத்தின் சில கோரிக்கைகளை தங்கள் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் இக்கோரிக்கைகளை தயவுசெய்து பரிசீலனை செய்து ஆவன செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் மருந்தகத்தில், மருந்தாளுநர் மட்டுமே
மருந்துகளை கையாள வேண்டும் என்ற பார்மசி சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை நாடு முழுவதும் முழுமையாக செயல் படுத்தவும், முதலில் தமிழ்நாட்டில் செயல்படுத்த கோருகிறோம்.
மருந்தாளுநரர்கள் பணிபுரியும் அனைத்து தளங்களிலும் industrial pharmacist dispensing pharmacist Teaching pharmacist etc
அடிப்படை சம்பளமாக ,
20000/-
குறையாமல் நிர்ணயம் செய்ய வேண்டுகிறோம்.
பாதுகாப்பு அற்ற மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்திட சட்டம் இயற்றப்பட வேண்டுகிறோம். மருந்தாளுநர் மேற்பார்வையில், அறிவுரையின் படி நேரடியாக மருந்து வழங்குவதே மக்கள் நலனுக்கு உகந்தது.மருந்தாளுநரின் நேரடி விற்பனை போலி மருந்துகள் புழக்கத்தை தடுக்கும்.
purchasing doctors
ஆக இருந்தாலும் அவர்களுடைய கிளினிக்கில் கண்டிப்பாக மருந்தாளுனர்கள் இருக்க வேண்டும் என்ற சட்டம்
இயற்றப்பட வேண்டுகிறோம்.
மருந்தகத்தில் மருந்தாளுனர்கள் இருப்பதை உறுதி செய்யும் Pharmacy inspector
பதவிகளை பார்மசி கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மூலம் உடனடியாக நிரப்பவும், அதன் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுத்தவும் வேண்டுகிறோம்.
உயிர்காக்கும் மருந்துகளுக்கான குறிப்பாக இன்சுலின் புற்றுநோய்
மருந்துகள்,
இவற்றிற்கெல்லாம் முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டுகிறோம்.
மருந்து மற்றும் அழகு சாதன சட்டம் 1940
அனைத்தையும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கிட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
மருந்து கட்டுப்பாட்டு துறையின் மாநில அளவில் உயர்ந்த பதவியான
இயக்குனர் பதவியை
மருந்தியல் கல்வி பயின்றவருக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் வேறு மருத்துவ படிப்பு படித்த நபர்களுக்கு வழங்க வேண்டாம் என பணிவுடன் கேட்டு கொள்கிறோம்
மருந்து விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனை கடைகளில் (wholesale medical agency )
கண்டிப்பாக முழு நேர பணியில் ஒரு மருந்தாளுனர் நியமிக்கப்பட வேண்டும் என புதிய சட்ட திருத்தம் கொண்டு வர ஆவன செய்ய வேண்டுகிறோம்
உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் இந்தியா முழுவதிலும் அனைத்து சில்லறை மருந்து விற்பனை கடைகளிலும்
ஒரே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற
சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும்,
தள்ளுபடி விற்பனையை தடுக்கவும் ஆவன செய்ய வேண்டு கின்றோம்.
சாதாரணமாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத
சிறிய நோய்களுக்கு
குறிப்பாக சளி இருமல் காய்ச்சல்
தலைவலி
இது போன்ற நோய்களுக்கு மருந்தாளுனர்களே மருந்துகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத
சாதாரண மருந்துகளை
பரிந்துரைக்கலாம் என்ற சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டுகிறோம். இதனால் கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைவர்.
மருந்தியல் கல்லூரிகளின் தரத்தை ஆராய்ந்து அவற்றில் ஏற்படக்கூடிய சில குளறுபடிகளை நீர்க்கும் வகையில்
மருந்தாளுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு
மருந்தியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த,
அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுகிறோம்.
pharmacovogilance
தரத்தை உயர்த்திடும் வகையில
drug safety centre
ஒவ்வொரு தாலுகா அளவிலும் உருவாக்கப்பட கோருகிறோம்.
மருந்தாளுனர்களின் எதிர்காலம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என தனிப்பட்ட நல வாரியம், அமைக்கப்பட வேண்டி கேட்டு கொள்கிறோம்.
மருந்தாளுநர்கள் தொழில் தொடங்கிட அரசு மூலம் மானியம் வழங்கிட ஏற்பாடு செய்து தர வேண்டுகிறோம்.
ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பார்மசி கல்லூரிகள் தொடங்கவும் ( இப்போது 2 கல்லூரிகள் மட்டுமே. 1.MMC ( சென்னை )
2.MMC -மதுரை ).
மற்றும் மருந்தாளுனர்களை ஆசிரியராக நியமித்து வேலைவாய்ப்பு வழங்கவும் ஆவன செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.
இனி வரும் காலங்களில் அரசே மருந்து நிறுவனங்கள்( Drugs manufacturing units)தொடங்கி பார்மசி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நன்றி
உண்மையுள்ள...
#தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்கம்