DrChristopher TVK Tirunelveli

DrChristopher TVK Tirunelveli பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

10/09/2026

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், திருநெல்வேலியில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களுடன்,திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் எஸ். கே. கிறிஸ்டோபர் அவர்கள்கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக தொடங்கி வைத்தார். செப்டம்பர் 09 முதல் அக்டோபர் 01 வரை நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, மாவட்டம் மற்றும் மண்டல அளவில் சாதனை படைக்க வாழ்த்துகள்!

பணகுடி – வள்ளியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் செங்கல்சூளைகளுக்கு லைசன்ஸ் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான முக்கிய...
08/09/2026

பணகுடி – வள்ளியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் செங்கல்சூளைகளுக்கு லைசன்ஸ் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான முக்கிய கோரிக்கையை, திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், கழகப் பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. என். ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து,
செங்கல்சூளை சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தார்.மேலும், ராதாபுரம் தொகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஒன்றிய மற்றும் பேரூர் கழகங்களை மறுசீரமைத்து, கழக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

07/09/2026

திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எஸ். கே. கிறிஸ்டோபர் அவர்கள், இன்று சட்டப்பேரவையில் ராதாபுரம் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

வள்ளியூர் & பணகுடி பகுதிகளில் உள்ள செங்கல் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் புதிய லைசன்ஸ் வழங்குதல் தொடர்பாகவும்,

பணகுடி & திசையன்விளை பகுதிகளில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை உயர்கல்வி நிறுவனங்களை அரசு கல்லூரியாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும்,

மாண்புமிகு அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பி, தொகுதி மக்களின் நலனையும், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியையும் முன்னிறுத்தினார்.

மக்களின் கோரிக்கைகள்… சட்டப்பேரவையின் குரலாக! ராதாபுரத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்!

காவல்துறையை நவீனமயமாக்கி, சட்டம்–ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ₹200 கோடி மதிப்பில்...
04/09/2026

காவல்துறையை நவீனமயமாக்கி, சட்டம்–ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ₹200 கோடி மதிப்பில் 2,000 புதிய வாகனங்கள் வழங்கும் மக்கள் நலத் திட்டம்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பெண்களுக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, பெண்களின் திறமைக்கும் துணிச்சலுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகள், கூடுதல் காவலர் பணியிடங்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்புகள் மூலம் மக்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் அரசு!

Dr. கிரிஸ்டோபர் S.K.
திருநெல்வேலி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
மற்றும் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்

02/09/2026

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளும் மேம்படுத்தப்பட்டு, தேவையான அளவில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

மேலும், மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்கு நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமனம், BLS ஆம்புலன்ஸ்களை ALS ஆம்புலன்ஸ்களாக தரம் உயர்த்துதல், வள்ளியூர் அரசு மருத்துவமனையை ஒரு முக்கிய Referral Centre ஆக மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைதார்.
மக்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர்
திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்

31/08/2026

குத்திரைபாஞ்சான் அருவி – சுற்றுலா வளர்ச்சிக்கான குரல்! 💦🌿

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பணகுடி அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குத்திரைபாஞ்சான் அருவியை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

தரமான சாலை வசதி, நடைபாதை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதோடு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இக்கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட துறையினர் நேரில் ஆய்வு செய்து, கிடைக்கக்கூடிய நிதி நிலைமைக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. S. ராஜேஷ் குமார் அவர்கள் உறுதியளித்துள்ளார். 🤝

மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து எடுத்துரைத்து, இர�

29/08/2026

மக்களின் நலனே முதன்மை… சுகாதாரமே நமது முன்னுரிமை! 🩺

சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையில், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது முதல், அவசர சிகிச்சை, புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், Preventive Healthcare மற்றும் உடல் பருமனுக்கான சிகிச்சை வசதிகள் வரை பல்வேறு முக்கிய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தார்.

“நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம்!”

மக்களின் ஆரோக்கியத்திற்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கும்
மாண்புமிகு இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழக செயலாளர் Dr. S.K. கிறிஸ்டோபர் அவர்கள்.

Address

Radhapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DrChristopher TVK Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share