25/12/2025
Merry Christmas! 🎄✨
Have a joyful day filled with peace, happiness, and good health.
Wishing you and your family a wonderful Christmas 😊
*கிறிஸ்துமஸ் தினம்..*
அத்தனை கிறித்தவ யோகியருக்கும் வாழ்த்துக்கள்.!!!...
இயேசு, ஒரு உயர்ந்த ஞானி..
அவரது *மலைச் சொற்பொழிவு இன்றளவும், ஆழ்ந்த யோக இரகசியங்களை உட்பொதிந்து வைத்திருக்கின்றது..*
அதன் மூலக் கருத்தை உயர்ந்த உண்மைகளை, *நுட்பங்களை, சாதாரண மனிதர்கள் அறிவு நுட்பம் குறைத்தோர், உணர்ந்து கொள்வது இயலாதது..*
அதனால் தான், அவர், மலைப் பிரசங்கத்தை துவங்கும் முன், *"கண் உள்ளவன் காணக் கடவன்",* என்றும், *"காது உள்ளவன், கேட்கக் கடவன்"*, என்றும் கூறி பிரசங்கத்தை துவங்கினார்...
அதன்படி, எல்லா கண்களும், உள்ளதை உள்ளபடி பார்ப்பதில்லை, எல்லா காதுகளும், உள்ளதை உள்ளபடி கேட்பதில்லை என்பது உட்பொருளாகிறது..
எல்லாவற்றையும், உவமைகள், கதைகள் வாயிலாகவே விளக்கினார்...
கதைகளை கேட்பவர்கள் கருத்துக்களை விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..
*உண்மைகள் புரிந்திருந்தால், இன்றைய மதக் குழப்பங்கள் இல்லாமல் போயிருக்கும்...*
*என்னைக்* (நான் என்பதை) *காண்கிறவன், என் பிதாவையும்* (எனக்கு மூலமான வெளியையும்) *காண்கிறான்...*
*சொர்க்கத்திற்கு போகும் வாயில் மிக குறுகலானது..*
*அதன்வழி உட்செல்ல முயன்றும் முடியாதவர்கள் பலர்...*.
(இந்த *குறுகலான வழியை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை*).
இன்னும் உயர்ந்த போதனைகள், அவர் போதித்தது...
தன்னை உணர்ந்து, *பிதாவும் நானும் ஒருவரே...* என்பதையும் அறிந்து கொள்ள சொன்னார்...
நாம், பிதாவை வெளியே தேடிக் கொண்டு இருக்கிறோம்....
*என்னை பின்பற்றுகிறவன்,* (நான் என்பதை அறிந்து கொண்டவன்) *ஒருபோதும் இருளிலே* (துன்பத்தில்) *நடவான்*. (இருக்க மாட்டான்)
*நீங்கள், உலகத்திற்கு, உப்பாக இருக்கிறீர்கள். உப்பு சாரமற்றுப் போனால், தெருவிலே போவோர், வருவோர் மிதிக்கும் படியாக தெருவிலே கொட்டப்படும்.*
ஒழுக்கமற்ற மனிதன் தூற்றப்படுவான் என்பதை அவ்விதம் விளக்குகிறார்...
*நானே,* (நான் என்பதே) *உலகத்திற்கு ஒளியாகவும், வழியாகவும் இருக்கிறேன்* (இருக்கிறது)...
இன்னும் ஆழ்ந்த உண்மைகளை சாதாரணமாக பேசுகிறார்...
நாம் *சிந்தித்தால் அன்றி, விளங்கிக் கொள்ள முடியாது..*.
வணங்குகிறேன்...
*இனிய கிறிஸ்துமஸ் தினம் வாழ்த்துகள்*
அன்புடன்
மெர்க்குரி பார்மா,சங்கரன்கோவில்.
Mercury Pharma