Casia Herbals -Tamilnadu

Casia Herbals -Tamilnadu Casia is a herbal product made from Cassia Auriculata. website:www.casia.co.in
Shop here:http://casia.co.in/herbal-hair-treatment.html

Casia makes herbal products for hair & body care using Cassia auriculata

~~The Casia Hair Advantage~~
•Increases hair growth
•Strengthens the roots
•Reduces hair fall
•Smoothens hair

~~The Casia Body Advantage~~
•Prevents skin diseases
•Reduces body odour
•Cools the body

Key ingredients: Cassia auriculata, Hibiscus rosa-sinensis, Lawsonia inermis, Rosa centifolia, Chrysopogon zizanioides, Azadirachta indica, Murraya Koenigii.

14/06/2017

Loading...

24/03/2017

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

நெல்லிக்காய்

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை அரைத்து, அதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். அதிலும் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். மேலும் தினமும் நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் நறுக்கிப் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, தினமும் தலைக்கு ஊற்றி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு மிகவும் நல்லது.

வெங்காயம்

பச்சை வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் சிறந்த ஒரு பொருள். அதற்கு தினமும் வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றை, தலையில் தடவி, மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

இஞ்சி

இஞ்சி பலனுக்கு அளவே இல்லை. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. எனவே இஞ்சியின் சாற்றை எடுத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தடைபட்டிருந்த கூந்தல் வளர்ச்சி மீண்டும் நன்கு ஆரோக்கியத்துடன் வளரும்.

செம்பருத்தி

கூந்தலை ஆரோக்கியத்துடன் வைப்பதிலும், கூந்தல் உதிர்தலைத் தடுப்பதிலும் செம்பருத்தி முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதிலும் செம்பருத்தியின் இலை மற்றும் பூ இரண்டுமே சிறந்தது. அதற்கு செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வருவதால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, நரை முடி வருவதையும் தடுக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்ததை, காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை

கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் கறிவேப்பிலையும் மிகவும் சிறந்த பொருள். ஆகவே கறிவேப்பிலையை அரைத்து, அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பொருள், தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழித்து, கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

பாதாம்

பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே இரவில் படுக்கும் போது பாதாமை நீரில் ஊற வைத்து, காலையில் அந்த பாதாமை அரைத்து, பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரில் அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் அடர்த்தியாக வளரும். வேண்டுமெனில் பாதாம் எண்ணெயை தினமும் கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, குளித்தால் கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வளரும்.

கொத்தமல்லி இலை

ஆயுர்வேதத்தில் கூந்தல் உதிர்தலைத் தடுக்க கொத்தமல்லியை பயன்படுத்துவார்கள். அதிலும் கொத்தமல்லியை அரைத்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் செம்பருத்திப்பூ பேஸ்ட் கலந்து, கூந்தலுக்கு தடவினால், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை செய்ய வேண்டும். வேண்டுமென்றால், கொத்தமல்லி சாற்றை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தும் குளிக்கலாம்.

லாவண்டர் எண்ணெய்

ஆய்வுகளில் பலவற்றில் லாவண்டர் எண்ணெயில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் சக்தி அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே லாவண்டர் எண்ணெயை வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தினமும் செய்வதால், கூந்தல் உதிர்தலுக்கு காரணமான மனஅழுத்தமும் குறையும்.

வேப்பிலை

வேப்பிலையின் நன்மைகளை சொல்லவா வேண்டும். அதிலும் கூந்தல் உதிர்தலில் இதன் நன்மைக்கு அளவே இல்லை. எனவே கூந்தல் உதிர்தல் இருப்பவர்கள், வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அந்த இலைகளை எடுத்து அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து. 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பாக்டீரியா நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

ரோஸ்மேரி

மூலிகைகளில் ரோஸ்மேரி ஒரு சிறந்த மூலிகைச் செடி. அதிலும் ரோஸ்மேரியின் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாடிக் போன்றவை அதிகம் இருப்பதால், அவை மயிர் கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கும். ஆகவே ரோஸ்மேரியின் எண்ணெயை வைத்து, தினமும் மசாஜ் செய்தால், நிச்சயம் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

அவகேடோ மற்றும் தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இவற்றை தலைக்கு பயன்படுத்தினால், விரைவில் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதற்கு அவகேடோவை அரைத்து காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, தினமும் அதனை தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ்

ஆலிவ் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டுமே கூந்தல் உதிர்தலை நிறுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆகவே ஆலிவை வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, மென்மையாக வேக வைத்து, பின் அதனை எடுத்து, அரைத்து, அந்த பேஸ்ட்டை கூந்தலுக்கு தடவினால், நல்ல பலனை பெறலாம். இல்லையெனில் ஆலிவ் ஆயிலை தலைக்கு தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், சில நாட்களில் கூந்தல் உதிர்தலில் உள்ள மாற்றத்தை நன்கு அறியலாம்.

கேரட் ஜூஸ்

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, நிறைய தண்ணீர் மற்றும் காய்கறி அல்லது பழச்சாற்றை குடிக்க வேண்டும். குறிப்பாக, கேரட் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கும், கூந்தலுக்கும் நிறைய நன்மைகளைத் தருகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

அதிமதுர இலை

அதிமதுரத்தின் இலை மற்றும் வேர் இரண்டுமே கூந்தலுக்கு நன்மையை தருவது. ஆகவே வாரத்தில் இரண்டு முறை, அதிமதுரத்தின் இலை அல்லது வேரை அரைத்து, சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

08/03/2017
15/02/2017

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா?

முட்டை

முட்டை சல்பர் நிறைந்தது மற்றும் பிற பல புரதங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. செலினியம், ஜிங்க், அயர்ன், அயோடின், பாஸ்பரஸ் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. முடி வளர்ச்சிக்கு முட்டை பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக ஆலிவ் எண்ணெயுடன் பயன்படுத்தும் போது சிறந்த பயனளிக்கிறது.

ஒரு முட்டை வெள்ளைக்கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து வீட்டிலேயே சொந்தமாக முடி இழப்பு பேஸ்ட் தயாரிக்கவும். அதனை உங்கள் உச்சந்தலை அல்லது முடியில் நன்றாக தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் நன்றாக சுத்தம் செய்யவும்.

நெல்லிக்காய்

முடி இழப்பு பிரச்சனை மற்றும் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த வழிமுறையாக உள்ளது. இதற்கு ஆதாரமாக இருப்பது இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அணுக்கள் வலுவூட்டி. இதனை உங்கள் உச்சந்தலையில் தேய்க்கலாம். அனால் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கும் சுகாதாரத்திற்கும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் கலவை தயாரிக்க அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது நல்வாழ்வு கடைகளில் நெல்லிக்காய் பொடியை வாங்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொண்டு அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதனை உச்சந்தலையில் தேய்த்து உலர்ந்த பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

முடி வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை சல்பர் மேம்படுத்துகிறது. பூண்டு மற்றும் வெங்காயம் முடி வளர்ச்சியை தூண்டும் சல்பர் ஆதாரத்தை அதிக அளவில் கொண்டுள்ளன. முடி வளர்ச்சியைத் தூண்ட பூண்டை இவ்வாறு பயன்படுத்தவும். 4-5 பூண்டு துண்டை நசுக்கி அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
பின் அந்த கலவையை குளிர்விக்க வேண்டும். குளிர்வித்த பின் அதனை உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். வெங்காயத்தினை வெட்டுவதன் மூலம் கிடைக்கும் சாற்றினை உச்சந்தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.

மருதாணி

ஆசிய மக்களின் முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் வலிமையான ஆற்றலைக் கொண்ட மருதாணியை பயன்படுத்துவதாக, நீண்ட காலமாக அறியப்படுகின்றது. இதனை கடுகு எண்ணெயுடன் கலக்கும் போது வலுவான இயல்புகளைப் பெறுகிறது. 250 மி.லி. கடுகு எண்ணெய் மற்றும் 60 கி என்ற அளவில் இந்த கலவை தயாரிக்கப்படுகிறது.

மருதாணி இலைகள் முழுமையாக நிறம் மாறும் வரை அதனை சூடு படுத்த வேண்டும். இக்கலவையை குளிர்வித்த பின் மூடியுடன் கூடிய கொள்கலனில் அதனை வைக்கவும். தினமும் இந்தக் கலவையை தலையில் தேய்த்து வர வேண்டும்.

செம்பருத்தி

செம்பருத்தி நம் தலைக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது முடி நரைப்பதை தடுப்பதற்கும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. செம்பருத்திப் பூவை தொடர்ந்து பயன்படுத்துவது உங்களை வழுக்கையிலிருந்து பாதுகாக்கும். இந்தியாவில் உள்ள கேரள மக்கள் தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி கலந்து பயன்படுத்துவதே அவர்களது அடர்த்தியான கூந்தலுக்கு காரணம் ஆகும்.

நீங்களாகவே செம்பருத்தி பேஸ்ட் தயாரித்து உச்சந்தலை மற்றும் முடிகளில் தேய்த்து வரலாம். இரண்டு செம்பருத்திப் பூவை எடுத்துக் கொண்டு, அதனை எள் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அதனை தேய்த்து 2-3 மணிநேரங்களுக்கு பின் தலையை அலசவும்.

28/01/2017

வைட்டமின் சி :

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

23/01/2017

தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கூந்தல் சிக்கடைவதை தடுக்கும்

கூந்தலானது அடிக்கடி சிக்கடைந்து கொண்டிருந்தால், அவற்றை எளிதில் சரிசெய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும் கூந்தல் வறட்சியுடன் அசிங்கமாக காணப்படும் போது, அவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

மயிர்கால்களை வலுவாக்கும்

தேங்காய் எண்ணெயால் கூந்தலை பராமரித்தால், மயிர்கால்களானது வலுவடைவதுடன், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கும்.

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்

தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

பொடுகுத் தொல்லையை தடுக்கும்

ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. இத்தகைய பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து குளித்து வாருவதுடன், தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள். இப்படி தவறாமல் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொலிவான கூந்தல்

கூந்தலின் பொலிவை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமானால், கண்ட கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், தினமும் கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.

HAPPY NEW YEAR 2017
31/12/2016

HAPPY NEW YEAR 2017

Advance happy Deepawali
27/10/2016

Advance happy Deepawali

14/10/2016

முடி உதிர்வதைத் தடுக்க பூண்டு சாற்றினை யூஸ் பண்ணுங்க...

பூண்டு சாற்றினை தயாரிப்பது எப்படி?

முழு பூண்டு மூன்றினை எடுத்து, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, அவற்றில் இருந்து சாறு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, தேவையான போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

பூண்டு சாற்றினை பயன்படுத்தும் முன்...

உங்கள் ஸ்கால்ப்பில் ஏதேனும் காயங்கள் இருந்தால், பூண்டு சாற்றினைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அதில் உள்ள அமிலம் காயங்களை மேலும் மோசமாக்கும். உங்களுக்கு வறட்சியான முடி என்றால், 1/2 மணிநேரத்திற்கு முன் ரோஸ் வாட்டரை தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். இதனால் பூண்டு சாற்றினை தலைக்கு பயன்படுத்திய பின் முடி சிக்காவதைத் தடுக்கலாம்.

பூண்டு சாற்றினைப் பயன்படுத்திய பின்...

பூண்டு சாற்றினை தலையில் பயன்படுத்திய பின், 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீப்பு கொண்டு மென்மையாக முடியில் உள்ள சிக்கை நீக்கி, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். பிறகு தலைமுடியை அலசி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

எத்தனை நாளுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்?

வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் இந்த சாற்றினை பயன்படுத்தக் கூடாது. இப்படி ஒரு மாதத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

பூண்டு சாறு முடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம் உள்ளது. இந்த சேர்மம் இரத்த ஓட்டத்தை ஸ்கால்ப்பில் அதிகரித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் பூண்டில் உள்ள காப்பர் முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், புதிய முடி வளரவும் செய்யும்.

Address

Sivagangai
630002

Alerts

Be the first to know and let us send you an email when Casia Herbals -Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Casia Herbals -Tamilnadu:

Share