R Ramesh Pandi Wellness Coach and Trainer

R Ramesh Pandi Wellness Coach and Trainer Its my page about HEALTH WEALTH HAPPINESS... Creating awareness on nutrition, personal wellbeing an

💚 *💃 பெண்களே... ஒரு நிமிஷம் நின்று இதை படிங்க! 💃 💚*💚 *Hi Lucky's Family! 💚**உங்கள் நியூட்ரிஷன் சாரின் அன்பு வணக்கம்! 🙏*"...
01/08/2026

💚 *💃 பெண்களே... ஒரு நிமிஷம் நின்று இதை படிங்க! 💃 💚*

💚 *Hi Lucky's Family! 💚*

*உங்கள் நியூட்ரிஷன் சாரின் அன்பு வணக்கம்! 🙏*

"வீட்டுல எல்லாருக்கும் சாப்பாடு போட்டாச்சா?" 🍛

"பிள்ளைங்க சாப்பிட்டாங்களா?" 👨‍👩‍👧‍👦

"கணவர் சாப்பிட்டாரா?" ❤️

எல்லாரையும் கேட்டுட்டு...

❓ *"நான் சாப்பிட்டேனா?"*ன்னு மட்டும் கேட்க மறந்துடுறீங்களே... ஏன்? 😔*

━━━━━━━━━━━━━━

⚠️ *ஒரு உண்மை தெரியுமா?*

*_பெண்கள் பல பேருக்கு..._*

😵 *சோர்வு*

😴 *தூக்கம் வராமை*

🩸 *இரத்தசோகை*

🦴 *எலும்பு பலவீனம்*

😣 *முடி உதிர்தல்*

😫 *ஹார்மோன் பிரச்சினைகள்*

*இது எல்லாமே வயசு காரணம் மட்டும் இல்ல...*

❌ *சரியான சத்தான உணவு இல்லாததாலும்தான்!*

━━━━━━━━━━━━━━

👩‍⚕️🥗 *_இன்றைய ஸ்பெஷல்: பெண்களுக்கு ஏன் Balanced Diet அவசியம்? 🥗👩‍⚕️_*

*வயசு கூடக் கூட, நம்ம உடம்புக்குத் தேவையான சத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும்.*

*"வீட்டுல எல்லாரும் சாப்பிட்டாச்சு... எனக்கு மிச்சம் இருந்தா போதும்!"* என்று எப்போதும் தியாகம் செய்யாமல், உங்களுக்கான சத்தான உணவையும் கொஞ்சம் கவனியுங்கள்.

ஏனென்றால்...

*நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும்! ❤️*

━━━━━━━━━━━━━━

🌸 *_Balanced Diet சாப்பிட்டால் என்ன பலன்?_*

⚡ *நாள் முழுக்க சுறுசுறுப்பு:* சோர்வு குறைந்து, உடலில் நல்ல சக்தி கிடைக்கும்.

❤️ *இதய ஆரோக்கியம்:* இதய நலத்தைப் பாதுகாக்க உதவும்.

🦴 *எலும்புகள் வலிமை:* கால்சியம், வைட்டமின் D மூலம் எலும்புகள் உறுதியாகும்.

🩸 *இரத்தசோகை வராமல் பாதுகாக்கும்:* போதுமான இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

🧠 *மூளை செயல்பாடு மேம்படும்:* கவனம், நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.

🛡️ *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:* உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

━━━━━━━━━━━━━━

*_👧 வயதுக்கேற்ற சத்துக்கள்_*

🌱 *வளரும் வயது பெண்கள்:*
✅ Protein
✅ Calcium
✅ Vitamin D
✅ Iron

👩 *இளம் பெண்கள்:*
✅ சமநிலை உணவு
✅ நல்ல கொழுப்புகள்
✅ Fibre
✅ போதுமான தண்ணீர்

🤰 *கர்ப்பகாலம்:*
✅ Protein
✅ Folate
✅ Iron
✅ Calcium
✅ நிறைய தண்ணீர்

👵 *40+ & Menopause:*
✅ Calcium
✅ Vitamin D
✅ Protein
✅ Fibre
✅ இதயத்திற்கு நல்ல உணவுகள்

━━━━━━━━━━━━━━

🥗 *ஒரு Healthy Plate எப்படி இருக்க வேண்டும்?*

🥬 ½ தட்டு – காய்கறிகள்

🥚 ¼ தட்டு – Protein (முட்டை, பருப்பு, மீன், கோழி)

🌾 ¼ தட்டு – முழுதானியங்கள்

🥜 சிறிதளவு நல்ல கொழுப்புகள் (Nuts & Seeds)

💧 மறக்காமல் போதுமான தண்ணீர்

━━━━━━━━━━━━━━

🌿 *மறக்கக் கூடாத சூப்பர் சத்துக்கள்*

🥚 Protein

🩸 Iron

🦴 Calcium

☀️ Vitamin D

🥬 Folate

🌾 Fibre

🥜 நல்ல கொழுப்புகள்

━━━━━━━━━━━━━━

💡 *Daily Healthy Habits*

🥗 தினமும் நிறைய வண்ணமயமான காய்கறிகள்.

🍎 ஜூஸை விட முழுப் பழம்.

💧 2–3 லிட்டர் தண்ணீர்.

🚶 தினமும் குறைந்தது 30 நிமிடம் நடை அல்லது உடற்பயிற்சி.

😴 7–9 மணி நேர தரமான தூக்கம்.

🩺 வருடத்திற்கு ஒருமுறை உடல்நல பரிசோதனை.

━━━━━━━━━━━━━━

*_🌟 Women's Health Formula_*

*🥗 நல்ல உணவு*



*🏃 தினசரி உடற்பயிற்சி*



*💧 போதுமான தண்ணீர்*



*😴 நல்ல தூக்கம்*



*❤️ Self Love*

= ✨ Healthy • Happy • Confident Woman ✨

━━━━━━━━━━━━━━

*💚 இன்றைய நினைவூட்டல்:*

உங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்வது சுயநலம் அல்ல... அது உங்கள் குடும்பத்திற்கான மிகப்பெரிய முதலீடு!

*நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான்... உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருக்கும்! ❤️*

🔥 *இன்றைய Punch Dialogue*

*"வீட்டை கவனிக்கிற சூப்பர் ஹீரோயின் நீங்க...*

*ஆனா ஹீரோயின்-ஆன உங்க Health-ஐ கவனிக்காத வில்லியும் நீங்களே!" 💪❤️*

🌹 *நினைவில் வையுங்கள்...*

நீங்க நல்லா இருந்தா...

👨‍👩‍👧‍👦 குடும்பம் நல்லா இருக்கும்!

*நீங்க சந்தோஷமா இருந்தா... 🏡 வீடு சந்தோஷமா இருக்கும்!*

💚 ஆகவே...

*"முதல்ல உங்களை நேசிங்க... அப்புறம் உலகத்தை நேசிங்க!"* ✨

*~ Nutrition Sir RRP-ABI 🥤✈️*
All is WELL! If You EAT WELL!!
*📞 98436 10020 | 95143 10030*

🥤 *கோகா-கோலாவும் வயிற்று நார்க்கட்டியும் (Phytobezoar): ஒரு வெல்னஸ் கோச்சின் பார்வை!**வணக்கம்! நான் உங்கள் 'நியூட்ரிஷன் ...
21/07/2026

🥤 *கோகா-கோலாவும் வயிற்று நார்க்கட்டியும் (Phytobezoar): ஒரு வெல்னஸ் கோச்சின் பார்வை!*

*வணக்கம்! நான் உங்கள் 'நியூட்ரிஷன் சார் ரா ரமேஷ் பாண்டி,'*

*என்னது? "கோகா-கோலா குடிச்சா வயித்துல இருக்குற கட்டியெல்லாம் கரைஞ்சிடுமாமே சார்? இனிமேல் டெய்லி ஒரு பாட்டில் வாங்கி குடிச்சிர வேண்டியதுதான்!"* அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? இருங்க இருங்க... அவசரப்பட்டு கடையை நோக்கி வண்டியை திருப்பாதீங்க! 😉

சமீபத்துல சமூக வலைத்தளங்கள்ல ஒரு நியூஸ் பயங்கரமா சுத்திட்டு இருக்கு. *"மருத்துவர்கள் வயிற்றில் உருவாவற நார்க்கட்டியை (Phytobezoar) கரைக்க கோகா-கோலாவை பயன்படுத்துறாங்க"* அப்படின்னு.

*"என்னப்பா இது! இத்தனை நாளா குளிர்பானம் உடம்புக்கு கெடுதலுன்னு சொன்னீங்க, இப்போ என்னடான்னா கோக் குடிச்சா கட்டி கரையும்னு சொல்றீங்களே?"* அப்படின்னு உங்களுக்குத் தோணுறது புரியுது. இதுல இருக்குற உண்மையும், அந்த அறிவியல் ரகசியமும் என்னன்னு ஒரு வெல்னஸ் கோச்சா உங்களுக்கு தெளிவா சொல்றேன், கேளுங்க!

---

🔍 *உண்மை என்ன? (The Fact Check)*

1. *மருத்துவ ஆய்வு சொல்வது என்ன?*
ஆமாங்க, 2013-ல The American Journal of Gastroenterology இதழ்ல வெளியான ஆய்வின்படி, வயிற்றில் உருவாகும் Phytobezoar (ஃபைட்டோபிஸோர்) என்ற குறிப்பிட்ட நார்க்கட்டியை கரைக்க கோகா-கோலா பயன்படுது. இதுல 91.3% வெற்றி கிடைச்சிருக்குங்கிறது நிஜம்தான்!

2. *அது எப்படி கரைக்குது?*
கோக்-ல இருக்குற பாஸ்போரிக் மற்றும் கார்பனிக் அமிலம் (pH 2.6) நம்ம வயித்து அமிலத்தோட பி.ஹெச் (pH) அளவுக்கு ஈடானது. அதுல இருக்குற CO2 குமிழ்கள் அந்த நார் உருண்டையோட கெட்டித் தன்மையை உடைச்சு மென்மையாக்குது.

3. *அறுவைசிகிச்சை தவிப்பு:*
பெரிய சர்ஜரி பண்ணிதான் இந்த கட்டியை எடுக்கணும்ங்கிற நிலமையில, ஹாஸ்பிட்டல்ல டியூப் மூலமாவோ அல்லது நேரடியாவோ 3 லிட்டர் கோக் வரை கொடுத்து, எண்டோஸ்கோபி மூலமா ஆபரேஷன் இல்லாம கரைச்சு எடுக்குறாங்க.

> ⚠️ *ஆனா ஒரு நிமிஷம்! (Warning Zone)*
*"அப்போ எனக்கு வயிறு உப்புசமா இருந்தா நான் கோக் குடிக்கலாமா?"* அப்படின்னு கேட்டா... நோ! நெவர்!
இது வயித்துல 'நார்க்கட்டி' இருக்குறவங்களுக்கு, மருத்துவமனையில் மருத்துவர்களின் கடுமையான கண்காணிப்பில் மட்டுமே தரப்படுற ஒரு அவசரகால சிகிச்சை. சாதாரண அல்சர், அஜீரணம், கேஸ் விவகாரத்துக்கு வீட்ல உட்கார்ந்து கோக் குடிச்சீங்கன்னா, இருக்கிற வயித்து புண் இன்னும் பெரிசாகிடும், ஜாக்கிரதை!

---

🥗 *ஒரு வெல்னஸ் கோச்சா என் கேள்வி: "நோய்க்கு அப்புறம் கோக்... நோயே வராம இருக்க நியூட்ரிஷன் இருக்கே!"*

*_கட்டி வந்த அப்புறம் கோக் குடிச்சு கரைக்கிறதை விட, அந்த கட்டியே உருவாகாம தடுக்கிறதுதானே புத்திசாலித்தனம்?_*

*இந்த Phytobezoar எதனால வருது தெரியுமா?*
நாம சரியா செரிக்காத தாவர நார்கள், பழத்தோல்கள், விதைகளை அப்படியே முழுங்கி, வயிறு அதை செரிக்க முடியாம திணறும் போதுதான்! இது வராம தடுக்க நம்ம ஊட்டச்சத்து மற்றும் வாழ்வியல் முறையில சில எளிய மாற்றங்களைச் செஞ்சாலே போதும்:

1. *மெல்லுதல்... மெல்லுதல்... மீண்டும் மெல்லுதல்!*

செரிமானம் வாயிலயே ஆரம்பிச்சிடுதுங்க! உணவை அவசர அவசரமா விழுங்காம, நல்லா கூழ் மாதிரி மென்று சாப்பிட்டாலே பாதி பிரச்சனை முடிஞ்சது.

2. *சரியான முறையில் சமைப்பது*

கடினமான நார்ச்சத்துள்ள காய்கறிகளை நல்லா வேகவெச்சு சாப்பிடுங்க. பச்சை காய்கறி தோல்கள், பழுக்காத அத்திப்பழம், கொய்யா தோல்களை அதிகமா சாப்பிடுறதை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் நல்ல ஹெல்தி ஸ்மூத்தியா (Smoothies) எடுத்துக்கலாம்.

3. *போதிய அளவு தண்ணீர்!*

நார்ச்சத்து உடம்புல சரியா வேலை செய்யணும்னா தண்ணீர் ரொம்ப முக்கியம். உடம்புல தண்ணி குறைந்தா, இந்த நார்கள் எல்லாம் ஒண்ணா திரண்டு வயித்துல பந்து மாதிரி உருண்டையாயிடும்!

4. *புரோபயாடிக்குகள் (Probiotics) உதவுமா?*

*"சார், புரோபயாடிக் குடிச்சா அந்த கட்டி கரையுமா?"* அப்படின்னு கேட்டா... நேரடியா கரையாது! ஆனா, புரோபயாடிக் சாப்பிடும் போது குடலின் இயக்கம் *(Gut Motility)* சீராகி, உணவு வயிற்றில் தேங்காம கீழே நகர உதவி செய்யும்.

---

💡 *கடைசி வரி (Bottom Line)*

ஆபத்து காலத்தில் கோகா-கோலா ஒரு மருந்து மாதிரி பயன்படலாம். ஆனா, தினமும் அதை குடிச்சா அதுவே ஆபத்தாயிடும்!

கட்டி வந்த பிறகு கோக் தேடி ஓடுறதை விட, தினமும் சரியான ஊட்டச்சத்து, நல்ல உணவை மென்று சாப்பிடும் பழக்கம், போதுமான தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினா எந்த கட்டியும் நம்மை ஒன்னும் செய்ய முடியாது.

*"வருமுன் காப்பதே சிறந்தது... ஊட்டச்சத்தே சிறந்த மருந்து!"*

*~ Nutrition Sir RRP-ABI🥤✈️*
All is Well If You Eat Well!!
Cell: *9843610020, 9514310030*

--- # # *🤖 பிரையன் ஜான்சனும்...  ‘பர்ஃபெக்ஷன்’ பரமசிவங்களும்! 😂**_வணக்கம், நான் உங்கள் நியூட்ரிஷன் சார் ரா ரமேஷ் பாண்டி ...
08/07/2026

---

# # *🤖 பிரையன் ஜான்சனும்... ‘பர்ஃபெக்ஷன்’ பரமசிவங்களும்! 😂*

*_வணக்கம், நான் உங்கள் நியூட்ரிஷன் சார் ரா ரமேஷ் பாண்டி 🙏_*

இந்த பிரையன் ஜான்சன் (Bryan Johnson) இருக்காரே... அவர்தான் உலகத்தோட ஆகப்பெரிய **‘Bio-hacker’** 🧬. மனுஷன் சாகவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கார் 🏃‍♂️.

காலையில எந்திரிச்சு இத்தனை மில்லிகிராம் சாப்பாடு 🥗, இத்தனை கேலரி தண்ணி 💧, 100 சப்ளைமென்ட் மாத்திரை 💊, அப்புறம் ஆப்ஜெக்ட்ஸ் எதுவும் இல்லாத ரூம்ல தூக்கம்னு 😴... ஒரு ரோபோட் ரேஞ்சுக்கு வாழ்ந்துட்டு இருக்கார் 🤖.

*ஆன்டி-ஏஜிங் (Anti-aging) உலகத்துல இவரை ஒரு கடவுள் மாதிரி கும்பிடுறாங்க* 🧘‍♂️. நானும் ப்ரொஃபஷனலா இவரை ஃபாலோ பண்றவன்தான் 👨‍⚕️. ஆனா, ஒரு **Wellness Coach**-ஆ இவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பின் மண்டையில ஒரு பல்ப் எரியும் 💡.

> 💡 **நம்ம... 100% Wellness அப்படிங்கிறது 80% ஊட்டச்சத்து 🥗 + 20% Workout 🏋️‍♂️ + உறக்கம் 😴 + 100% Mindset 🧠.**
> **ஆம்! ஏஜ் ரிவர்சலுக்கு பர்மனண்ட் ரிமோட் கண்ட்ரோல் வெளியில கிடையாது 🎯. அது நம்ம மூவ்மெண்ட் 🏃‍♂️, நம்ம தூக்கம் 💤, நம்ம உணவு 🍲... எல்லாத்துக்கும் மேல நம்ம ‘மனசுல’ இருக்கு!** ❤️

நம்ம உடம்புக்கு மட்டும் கலோரி கணக்கு பாத்தா பத்தாது பாஸ், மனசுக்கும் கொஞ்சம் மசாலா தேவை 🌶️😉.

---

# # # 🕸️ பர்ஃபெக்ஷன் என்னும் ‘சைலண்ட்’ ஆப்பு! 🤫

"நான் பாயிண்ட் 5 மில்லி கிராம் கூட தப்பு பண்ண மாட்டேன்"னு நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா உங்களை நீங்களே ஜெயில் கைதி மாதிரி லாக் பண்ணும்போது 🔒, உங்க மனசு கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கும் ⏳.

அப்புறம் ஒரு நாள், *"என்னை வச்சு காமெடி பண்ணலையே?"* 😜 அப்படின்னு உங்களுக்கு எதிரா கொடி பிடிக்க ஆரம்பிச்சிரும் 🚩!

என் வெல்னெஸ் சென்டர் அனுபவத்துல ஒரு சிம்பிள் தியரி சொல்றேன் 🧘‍♂️:

* 🤪 **அப்பப்போ தப்பு செஞ்சு, மொக்கை வாங்குறவங்க:** மெதுவா, ஆனா ஜாலியா வாழ்க்கையில முன்னேறுவாங்க 🐢✨!
* 🚀 **100% பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்க:** ராக்கெட் வேகத்துல முன்னேறுவாங்க. ஆனா, அந்த ஸ்பீடுல தங்களோட 'ஆன்மாவை' எங்கயாவது டிராஃபிக்ல தொலைச்சிட்டு வந்துடுவாங்க 🚗💨!

அப்புறம் ஒரு நாள் ஒரு சின்ன சொதப்பல் நடக்கும்போது, *"நான் எல்லா ஆப்பையும் கரெக்டாத்தானே டிசைன் பண்ணுனேன், எனக்கு ஏன் இந்த ஆப்பு வந்துச்சு?"* 🤦‍♂️-னு அவங்களால ஏத்துக்கவே முடியாது. மென்டல் பிரேக்-டவுன் ஆகி நிப்பாங்க 💔.

உதாரணத்துக்கு காஃபி டே ஓனர் ☕. இந்தியன் காஃபி பிரண்ட்ட உலகமெல்லாம் கொண்டு போனவர் 🌍. ஒரு பெரிய பிசினஸ் மேக்னட் 💼. பயங்கர பர்ஃபெக்ஷனிஸ்ட். ஆனா, வாழ்க்கையில ஒரு சின்ன கடன் பிரச்சனை 📉. பிசினஸ்ல சறுக்குன உடனே... மனுஷன் சூசைட்! Yes, தற்கொலை பண்ணிக்கிட்டார் 😢.

---

# # # 🤕 அந்த ஆட்டோஇமியூன் பிரச்சனை... 🧪

சமீபத்துல இந்த பெர்ஃபெக்ஷன் பிரையன் ஜான்சனுக்கு ஏதோ ‘ஆட்டோஇமியூன்’ (Autoimmune) பிரச்சனை வந்ததா பேசிக்கிட்டாங்க 🦠. அதுக்கு மெடிக்கல் ரீதியா என்ன காரணம்னு தெரியல 🤷‍♂️.

ஆனா என்னைக் கேட்டா... 24 மணி நேரமும் உடம்பையும் மனசையும் மிலிட்டரி கேம்ப் மாதிரி வச்சிருந்தா வர்ற **ஸ்ட்ரெஸ்ஸே** (Stress) 💥 அந்த உடம்பை கன்பியூஸ் பண்ணி, அதுக்குள்ளேயே சண்டை போட வச்சிருக்கும்! ⚔️ இது என் பார்வை, தப்பாவும் இருக்கலாம்...

ஆனா மனுஷன் பயங்கர கெட்டிக்காரர் 😎. அந்த நோயையும் வச்சு *"ஆட்டோ இமியூனை அலறவிடும் components எப்படி?"* அப்படின்னு ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து யூடியூப்ல போட்டுட்டாரு 🎥. பிசினஸ் மைண்ட்! 💰

---

# # # 🤪 "So What?" — மனசுக்கும் ஒரு ‘லீவ்’ கொடுங்கப்பா! 🏖️

வெயிட் லாஸோ ⚖️, டயட்டோ 🥗... எதுவா இருந்தாலும் ஏதோ சித்ரவதை முகாம் மாதிரி பண்ணாதீங்க 🙅‍♂️.

* 🥦 **6 நாள்** நியூட்ரிஷன், காய்கறி, பழங்கள், சூப், ஜூஸ்னு டயட் இருந்தீங்களா?
* 🍗 **7-வது நாள்** ஒரு வேளை ஜாலியா பிரியாணியை அடிச்சுட்டு போங்க!
* 🔄 **அடுத்த நாள்** திருப்பி பழையபடி ரொட்டீனுக்கு வரலாம்.

**So What? மனுஷன் அப்படித்தான்!** 🤷‍♂️✨

வாரம் 7 நாளும் ஆபீஸ்க்கு போனா ஓனர் மேல கொலைவெறி வருதுல்ல? 😡 அதே மாதிரிதான் 7 நாளும் மனசை கட்டுப்பாட்டுல வச்சிருந்தா, அது ஒரு நாள் உங்க மண்டையிலேயே கொட்டும் 👊.

ஹெல்த் ❤️, வெல்த் 💰, ஹேப்பினெஸ் 😊 எதுவா இருந்தாலும்... *"அய்யோ.. இதை செஞ்சே ஆகணும்!"* அப்படின்னு பிபி-யை ஏத்திக்காதீங்க 📉. முடிஞ்ச அளவுக்கு நல்லா செய்வோம்... அவ்ளோதான்! 👍

---

# # # 😎 வாழ்க்கை ரொம்ப சிம்பிள்... நாமதான் ஓவர் ஆக்டிங் பண்றோம்! 🎭

வாழ்க்கை ரொம்ப சுலபம்னு சொன்னா, இந்த காலத்துல எவனுக்கும் அஜீரண கோளாறு வந்துடுது 🤦‍♂️. பெருசா காம்ப்ளிகேட் பண்ணாதான் அது லைஃப்னு நம்புறாங்க 🌀.

* 🚶‍♂️ காலையில எந்திரிச்சு ஒரு சின்ன வாக்கிங்.
* 🥗 அளவா ஒரு நல்ல உணவுமுறை.
* 😴 நல்ல ஒரு குட்டித் தூக்கம்.
* 📱 ❌ வீட்டுக்கு வந்து மொபைலை ஓரமா வச்சிட்டு...
* 👨‍👩‍👧‍👦 😃 பசங்களோடவும் வைஃபோடவும் கொஞ்ச நேரம் சிரிச்சு பேசுறது.
* 🍕 அப்ப அப்ப fun food!
* 🍔 எப்பையாவது junk food.
* 💼 ஒழுங்கா வேலை செஞ்சு நாலு காசு சம்பாதிக்கிறது.
* ☕ அப்ப அப்ப ஓய்வு கொடுக்கிறது.

இவ்வளவுதான் பாஸ் வாழ்க்கை! 🌈

இதை விட்டுட்டு, கலோரியை மெஷின்ல அளக்குறேன் 📊, தூக்கத்தை ஆப்-ல பாக்குறேன்னு 📲 ஓவரா சீன் போடாதீங்க. நிதானமா, ரசிச்சு வாழுங்க! 😊✨

அதுக்காக...

**EAT 🍽️, SLEEP 😴, REST 🛋️, REPEAT 🔁**

அப்படிங்கற ஓவர் ஃப்ரீடமும் உடம்புக்கு ஆகாது ⚠️.

**Life is Simple, Complicate பண்ணாதீங்க!** 🕊️

🎵 *ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி...*

🎵 *ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி!*

🎵 *வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி!!* 🎶

---

வாழ்க வளமுடன் 🙌

*~ Nutrition Sir RRP-ABI 🥤✈️*

All is Well! If You EAT Well!! 🥗

🤙 *9843610020, 9514310030*

🧠 *நம்ம வண்டியை லாரி முட்டுனா என்ன பண்ணுவோம்? ஹாஸ்பிடல் போவோம்... ஆனா இவர்?! 💥**வணக்கம் மக்களே! 👋**நான் உங்க நியூட்ரிஷன்...
25/06/2026

🧠 *நம்ம வண்டியை லாரி முட்டுனா என்ன பண்ணுவோம்? ஹாஸ்பிடல் போவோம்... ஆனா இவர்?! 💥*

*வணக்கம் மக்களே! 👋*
*நான் உங்க நியூட்ரிஷன் சார் ரமேஷ் பாண்டி.*
இன்னைக்கு நம்ம சேனல்ல பாக்கப்போறவரு சும்மா சாதாரண ஆள் கிடையாது. "மனசு நினைச்சா எதையும் சாதிக்கலாம்" அப்படிங்கிற டயலாக்கை, சும்மா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸோட நிறுத்தாம, தன் சொந்த வாழ்க்கையிலேயே செஞ்சு காமிச்ச ஒரு அல்டிமேட் கில்லாடி தான் இந்த ஜோ டிஸ்பென்ஸா (Joe Dispenza)! 😎
கதைக்குள்ள போலாமா? 🏃‍♂️
1. *1986-ல நடந்த அந்த ட்விஸ்ட்! 🚴‍♂️🚚*
நம்ம ஜோ பாய் இளமை துள்ளலோட சைக்கிள் ரேஸ்ல போயிட்டு இருக்கும்போது, பின்னாடி வந்த ஒரு லாரி "டமார்"னு வந்து அடிச்சது. ரிசல்ட்? முதுகெலும்புல 6 இடத்துல பயங்கர ஃபிராக்சர்! டாக்டர்கள் எல்லாம் கை விரிச்சு, "தம்பி, இனி நீங்க லைஃப் லாங் வீல் சேர் தான், பேசாம ஒரு மெகா ஆபரேஷன் பண்ணிடுவோம்"னு சொன்னாங்க.
2. *டாக்டர் சொன்னா நாங்க கேக்கணுமா?! 🤷‍♂️*
நம்ம ஆளு என்ன பண்ணாரு தெரியுமா? "ஆபரேஷனும் வேணாம், ஒன்னும் வேணாம்... என்னை நானே சரி பண்ணிப்பேன்"னு ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டாரு! (நிஜமாவே தான் பாஸ்!).
கிட்டத்தட்ட 10 வாரம் படுத்த படுக்கையா இருந்தப்ப, அவர் பண்ண ஒரே விஷயம்: "மெடிடேஷன் அண்ட் மைண்ட் பவர்".
கண்ணை மூடிட்டு, தன் முதுகெலும்பு தானாவே ஒன்னு சேர்ந்து, சூப்பரா நடக்குற மாதிரி மைண்டுக்குள்ளேயே ஒரு 4K தியேட்டர் ஓட்டினாரு! 🎬
3. *10-வது வாரத்துல நடந்த மேஜிக்! 🪄*
சயின்ஸே தலை சுத்துற அளவுக்கு, வெறும் 10 வாரத்துல எந்த ஒரு ஆபரேஷனும் இல்லாம, மனுஷன் தானா எந்திரிச்சு நின்னுட்டாரு! (நம்ப முடியலல? ஆனா அதான் நிஜம்!). 12-வது வாரத்துல ஜிம்முக்கே போக ஆரம்பிச்சிட்டாரு!
4. அப்புறம் என்ன... உலகத்துக்கே கிளாஸ் தான்! 🌍📚
"என்னடா இது மேஜிக்கா இருக்கு"னு நரம்பியல், குவாண்டம் பிசிக்ஸ்னு எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு, இப்ப உலகம் முழுக்க சுத்தி சுத்தி கிளாஸ் எடுத்துட்டு இருக்காரு.
அவர் சொல்ற சிம்பிள் மேட்டர் இதுதான்:

> "காலைல எந்திரிச்ச உடனே பழைய கவலைகளையே நினைச்சுட்டு இருந்தா, லைஃப் அப்படியே தான் இருக்கும். உங்க எண்ணங்களை மாத்துங்க... உங்க உடம்பும் மாறும், லைஃப்பும் மாறும்!"

நாமளும் தான் காலைல 5 மணிக்கு அலாரம் வச்சுட்டு, "இன்னும் ஒரு 5 நிமிஷம்"னு தூங்கிட்டு இருக்கோம்! 😜 இனிமேலாவது நம்ம மைண்ட் பவரை பாசிட்டிவான விஷயங்களுக்கு யூஸ் பண்ணுவோம் மக்களே!
*_Stay Healthy, Think Wealthy! 🔥_*

~ *Nutrition Sir RRP-ABI🥤✈️*

Giv a ❤️ if you love it

 # # *🎾 படுக்கையறை டு பாரிஸ்: ஒரு 'மாஸ்' மங்கையின் கதை! 😮🔥**"வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க தோற்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்...
17/06/2026

# # *🎾 படுக்கையறை டு பாரிஸ்: ஒரு 'மாஸ்' மங்கையின் கதை! 😮🔥*

*"வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க தோற்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோற்பான்"*-ன்னு சும்மா டயலாக் பேசிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு நடுவுல, அதை நிஜமாக்கிக் காட்டியிருக்காங்க நம்ம போலந்து நாட்டுப் பொண்ணு **மாஜா ச்வாலின்ஸ்கா (Maja Chwalinska)**!

24 வயசு தான் ஆகுது. உலக ரேங்கிங்ல 114-வது இடம். 'பிரெஞ்சு ஓபன்' ஆடணும்ன்றது அவங்க வெறி. ஆனா, அங்க நேரடியா விளையாட தகுதியே இல்லை. அதுமட்டும் இல்லாம, விதி அவங்க கூட பயங்கரமா 'கபடி' விளையாடியிருக்கு!

# # # 💥 விதியின் விளையாட்டு (அக்கா பார்த்த சோதனைகள்):

* **2021-ல டிப்ரஷன்:** படுக்கையை விட்டு எந்திரிக்கவே முடியாத அளவுக்கு கடுமையான மன அழுத்தம். (நம்ம ஆளுங்க ரீல்ஸ் பார்த்துட்டு டிப்ரஷன்-னு சொல்ற மாதிரி இல்ல பாஸ், இது சீரியஸ்!)
* **2022-ல முழங்கால் ஆபரேஷன்:** வீட்டை விட்டே நகர முடியாத நிலைமை.

ஆனா அக்கா அசரல! "டச்" விட்றக் கூடாதுன்னு லோக்கல் மேட்ச் எல்லாத்துலயும் கலந்துக்கிட்டு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. (நாம தான் எக்ஸாமுக்கு முதல் நாள் புக்க தேடுவோம், ஆனா அவங்க அப்படி இல்லை!)

# # *💸 நோ காசு... நோ மணி... நோ ஹனி!*

ஒரு வழியா ஆசைப்பட்டு பாரிஸ் நகரத்துக்கு வந்து இறங்கியாச்சு. ஆனா கையில காசைக் காproperty-அக் காணோம்!

> ஹோட்டல்ல ரூம் எடுக்கக் கூட காசு இல்லை. "ஜெயிக்கிற குதிரை மேல தான் காசு கட்டுவோம்" அப்படின்னு பெரிய பெரிய பிராண்ட்ஸ் எல்லாம் இவங்களை கண்டுக்கவே இல்லை. (உலக வழக்கம் தானே!)

அப்போ தான் **'ஓஷ்' (Osh)** அப்படின்ற எனர்ஜி டிரிங்க் கம்பெனி, "இந்தாப்பா சின்னதா ஒரு ஹெல்ப்"னு கை தூக்கி விட்டாங்க.

# # *🚀 அப்புறம் நடந்ததெல்லாம் 'ஹிஸ்டரி'!*

மெயின் மேட்சுக்குள்ள போக 3 தகுதிப் போட்டி... அதுல ஜெயிச்சு, அப்புறம் மெயின் மேட்ச்ல 6 போட்டிகள்னு வரிசையா எதிரிகளை துவம்சம் பண்ணி **ஃபைனல்ஸுக்கே போயிட்டாங்க!** 😲

* பிரெஞ்சு ஓபன் ஹிஸ்டரிலயே, தகுதி பெறாம வந்து ஃபைனல்ஸ் வரைக்கும் போன முதல் ஆள் நம்ம மாஜா தான்!
* ஃபைனல்ஸ்ல 'மிரா ஆண்ட்ரீவா'கிட்ட தோத்து ரன்னர்-அப் ஆனாலும், அவங்களுக்கு கிடைச்ச பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
💰 **14 லட்சம் யூரோக்கள்! (அதாவது இந்திய ரூபாயில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய்!)**

ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாளைக்கு 150 யூரோவுக்கு ரூம் எடுக்கக் காசில்லாம இருந்த பொண்ணு, இன்னைக்கு 15 கோடியோட நிற்குது!

# #*򓠠இது அதிர்ஷ்டமா? 'நோ வே'!*

உழைக்காதவன் வீட்டு வாசல்ல அதிர்ஷ்டம் சும்மா வந்து 'காலிங் பெல்' அடிக்காது பாஸ்! இது முழுக்க முழுக்க அவங்களோட விடாமுயற்சி, வெறித்தனம், அப்புறம் அந்த டென்னிஸ் பேட் செஞ்ச மேஜிக்!

ஜெயிச்ச ஆண்ட்ரீவா தன் டென்னிஸ் மட்டையை மாஜாவுக்கு கிப்டா கொடுத்தப்போ, **"என் லைஃப்ல இவ்வளவு அன்பை நான் பார்த்ததே இல்ல"**-னு அக்கா உருகியிருக்காங்க. (நமக்கே கண்ணு வேர்க்குதுப்பா!)

**நமக்கு என்ன பாடம்?**
மன அழுத்தம், முழங்கால் ஆபரேஷன், காசில்லாத கொடுமை-னு எல்லாத்தையும் தாண்டி ஒரு பொண்ணு சாதிக்க முடியும்னா... மொபைல் டேட்டா தீர்ந்து போச்சுன்னு கவலைப்படுற நாம இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! 👍

---

*~🥤 NUTRITION SIR RRP-ABI ✈️*
*உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரும் தளம்!*
👉 **இந்த 'மாஸ்' ஸ்டோரி புடிச்சிருந்தா ஒரு லைக் & ஷேர் தட்டி விடுங்க ஃப்ரெண்ட்ஸ்!**

 # # *🛑 'ரிட்டையர்மென்ட்' - இது ஒரு ஸ்லோ பாய்சன் தெரியுமா மக்களே? 🇯🇵 vs 🇮🇳**ஜப்பான் காரன்கிட்ட போய் "ரிட்டையர்மென்ட்"* (...
16/06/2026

# # *🛑 'ரிட்டையர்மென்ட்' - இது ஒரு ஸ்லோ பாய்சன் தெரியுமா மக்களே? 🇯🇵 vs 🇮🇳*

*ஜப்பான் காரன்கிட்ட போய் "ரிட்டையர்மென்ட்"* (Retirement)-னு சொன்னா, "அப்படின்னா எந்த பிராண்ட் நூடுல்ஸ்?"னு கேப்பான். ஏன்னா அவங்க அகராதியிலேயே அப்படி ஒரு வார்த்தை கிடையாது!

*நம்ம ஊர்ல மட்டும் தான், அப்பா ரிட்டையர் ஆன* மறுநாளே சோபா செட்ல உட்கார வச்சு, கைல ரிமோட்ட கொடுத்து, "அப்பா... நீங்க மாடா உழைச்சது போதும், இனிமே சும்மா இருங்க"னு சொல்லி அவங்கள 'துருப்பிடிக்க' வைக்கிறோம். 🛠️

---

# # # *📖 அந்த குட்டி ஸ்டோரி:*

நம்ம ஊர்ல ஒருத்தர் ரிட்டையர் ஆனாராம். முதல் ஒரு வாரம் 'நிம்மதி'னு நினைச்சாரு. ரெண்டாவது வாரம் வீட்ல இருக்குற சிலிண்டர்ல இருந்து, உப்பு டப்பா வரைக்கும் எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சாரு.

அவர் சும்மா இல்லாம, கிச்சன்ல போய் "ஏன் இவ்வளவு கடுகு போடுற?"னு வைஃப் கிட்ட அட்வைஸ் பண்ண போய்... இப்போ அவர் நிலைமை? காலையில 6 மணிக்கு பால் பாக்கெட்ல ஆரம்பிச்சு, நைட்டு குப்பை கொட்டுற வரைக்கும் 'Full-time field work' பண்ணிட்டு இருக்காரு! 🏃‍♂️💨

**Moral:** வேலை செய்யாத உடம்பு, சீக்கிரம் வீணாயிடும். அது ஆபீஸா இருந்தாலும் சரி, வீட்டு தோட்டமா இருந்தாலும் சரி!

---

# # # 🌸 ஒகினாவா தாத்தாவும்... நம்ம ஊர் தாத்தாவும்!

*ஜப்பான்ல 96 வயசு கோபாயாஷி தாத்தா இன்னைக்கும் மீன் பிடிக்கப் போறாரு. "ஏன் தாத்தா?"னு கேட்டா, "அதுதான் என் **இகிகாய் (Ikigai)**"ங்கிறாரு.

ஆனா நம்ம ஊர்ல? 60 வயசு ஆனாலே, "எனக்கு முட்டி வலிக்குது, மூச்சு வாங்குது"னு சொல்லி பெட்ல படுத்துக்குறோம். ஜப்பான்ல 'நோக்கம்' (Purpose) இருக்கு, நம்ம ஊர்ல 'தூக்கம்' தான் அதிகமா இருக்கு! 😴

---

# # # *⚠️ உஷார் மக்களே!*

ஒரு காரை ஓட்டாம நிறுத்தி வச்சா எஞ்சின் ஜாம் ஆகுற மாதிரி, காலங்காலமா ஓடிட்டு இருந்த உடம்பை திடீர்னு "சும்மா இரு"னு சொன்னா, அதுக்கு 'துரு' பிடிச்சிடும்.

**வேலையை மாத்துங்க... ஆனா ஓடுறதை நிறுத்தாதீங்க!** உங்க வீட்டுப் பெரியவங்களை சும்மா உட்கார வைக்காதீங்க. அவங்களுக்குப் பிடிச்ச ஏதோ ஒரு சின்ன வேலையை (செடி வளர்க்குறது, கடைக்கு போறது) செய்ய விடுங்க. அப்போதான் அவங்க 'செல்லு' (Cell) எல்லாம் உயிர்ப்போட இருக்கும்! ⚡

---

உங்க வீட்டுப் பெரியவங்க ரிட்டையர் ஆன அப்புறம் அவங்ககிட்ட நீங்க பார்த்த 'விசித்திரமான' மாற்றம் என்ன? 🧐

ஒரே ஒரு வார்த்தையில **கமெண்ட்** பண்ணுங்க! (உதா: "கிச்சன் அட்வைசர்", "தூக்க மாத்திரை", "வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி") 👇

பிடிச்சிருந்தா ❤️ தட்டுங்க! உங்க ரிட்டையர்டு குரூப்புக்கு இதை 🔁 **ஷேர்** பண்ணி அவங்களை கொஞ்சம் தட்டி எழுப்புங்க!

~ **Nutrition Sir RRP-ABI** ✈️

All is WELL! If You EAT WELL! 🥤

---

*_வணக்கம் LUCKY'S FAMILY! 🥤✈️_*🍬 **இனிப்பின் இனிய சதி!** 😎"சுகர் ஃப்ரீ"ன்னு பெயர் வச்சாலே, அது தேவதையா மாறிடுமா என்ன? 🤔ந...
04/06/2026

*_வணக்கம் LUCKY'S FAMILY! 🥤✈️_*

🍬 **இனிப்பின் இனிய சதி!** 😎

"சுகர் ஃப்ரீ"ன்னு பெயர் வச்சாலே, அது தேவதையா மாறிடுமா என்ன? 🤔

நீரிழிவு / உடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்களிடம் நான் அடிக்கடி கேட்கும் ஒரு கிளாசிக் டயலாக்:

👨‍⚕️ : "சீனி (White Sugar) சேர்க்காதீங்க..."

🧑 : "சரிங்க சார்... நாட்டு சர்க்கரை சேர்க்கறேன்!"

👨‍⚕️ : "அதுவும் வேண்டாம்..."

🧑 : "அப்போ கருப்பட்டி!"

👨‍⚕️ : "அதுவும் வேண்டாம்..."

🧑 : "அப்போ தேன்!"

👨‍⚕️ : "அதுவும் வேண்டாம்..."

🧑 : "அப்போ... சுகர் ஃப்ரீ மாத்திரை?!"

😅😅😅

இது கொஞ்சம் இப்படித்தான் நண்பர்களே...

🚬 "சிகரெட்டை விடுங்க"ன்னு சொன்னா... "சரி, நான் பீடி குடிக்கிறேன்!"னு சொல்ற மாதிரி!

---

# # # 🍭 உடை மாறும்... குணம் மாறாது!

சீனி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, தேன்... இவை எல்லாமே வேறு வேறு உடை போட்ட "ஒரே குடும்பத்து" உறவினர்கள் தான்! 😄

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை (Blood Glucose) உயர்த்துவதில்... **"நாங்க எல்லாரும் ஒன்னு, எங்களை பிரிக்க முடியாது!"** என்று கை கோர்த்து நிற்பார்கள்.

---

# # # 🧠 இனிப்பு என்பது சுவை அல்ல... ஒரு போதை!

ஒரு துளி இனிப்பு நாக்கில் பட்ட உடனே, நம் மூளை (Brain) செய்யும் வேலை என்ன தெரியுமா?

👉 *"மச்சி... இன்னொரு முறை கொடு!"*

👉 *"கொஞ்சம் இன்னும் அதிகமா கொடு!"*

👉 *"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொடு!"*

😂😂😂

அதனால்தான், சீனியை நிறுத்தினால் நாட்டு சர்க்கரைக்கும், அதை நிறுத்தினால் கருப்பட்டிக்கும், கடைசியில் **"சுகர் ஃப்ரீ தான் என் உயிர்!"** என்றும் ஓடுகிறோம்! 🤦‍♂️

---

# # # 💊 சுகர் ஃப்ரீயின் 'ரகசிய' ஆபத்து!

சுகர் ஃப்ரீ சாப்பிடுவதால் சர்க்கரை ஏறாமல் இருக்கலாம், ஆனால் அது **இனிப்பு சுவையின் மீதான உங்கள் காதலை** அப்படியே உயிரோடு வைத்திருக்கும்!

> சுருக்கமாகச் சொன்னால்... நீங்கள் இனிப்பை விவாகரத்து செய்யவில்லை, வீடு மட்டும்தான் மாற்றி இருக்கிறீர்கள்! 😜

# # # 🍰 "சுகர் ஃப்ரீ" லட்டு கதை!

சாதாரண லட்டு என்றால், *"ஐயோ சுகர் ஏறிடும்"* என்று பயந்து பாதியோடு நிறுத்துவோம்.

ஆனால், அதுவே "சுகர் ஃப்ரீ லட்டு" என்றால்?

😎 *"இது ஹெல்தி!"*

😎 *"இது சேஃப்!"*

😎 *"இது டயட்!"*

அப்படீன்னு சொல்லிக்கிட்டே... ஒன்று, இரண்டு, மூன்று... பாத்திரமே காலி! 😂

அப்புறம் ஏன் சுகர் ஏறுதுன்னு ஆச்சரியம்! லட்டுல சீனி இல்லாம இருக்கலாம்... ஆனா **மாவுச்சத்து (Carbs)** இருக்கே நண்பர்களே!

---

# # # 🎯 Craving-ஐ வெல்ல ஒரே வழி!

*"கொஞ்சம் இனிப்பு..."*

*"வாரத்துல ஒரு நாள் மட்டும்..."*

இப்படிப் பேசுவதெல்லாம் மூளையுடன் நாம் நடத்தும் தற்காலிக சமாதானப் பேச்சுவார்த்தை! 🤣

இனிப்பு ஆசையை (Sugar Craving) முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டுமா?

✅ **இனிப்பு சுவை கொண்ட அனைத்திலிருந்தும் டோட்டலாக விலகுங்கள்.** அப்பொழுதுதான் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அந்த அடிமைத்தனத்திலிருந்து அமைதியாகும்.

---

# # # ☕ அப்போ டீ, காபி குடிக்கவே கூடாதா?

கண்டிப்பாகக் குடிக்கலாம்! ஆனால்...

❌ சீனி வேண்டாம்

❌ நாட்டு சர்க்கரை வேண்டாம்

❌ கருப்பட்டி / தேன் வேண்டாம்

❌ சுகர் ஃப்ரீ கூட வேண்டாம்!

✅ **ப்ளாக் டீ (Black Tea)**

✅ **ப்ளாக் காபி (Black Coffee)**

✅ **ஹெர்பல் டீ / க்ரீன் டீ**

இவற்றை குடிக்கப் பழகிப் பாருங்கள். முதல் சில நாட்கள் *"வாழ்க்கையே கசந்து போச்சு"* அப்படீன்னு தோணலாம்! 😂 போகப் போகத்தான் புரியும், இவ்வளவு நாளா நம்ம நாக்கு நம்மள ஏமாத்திக்கிட்டு இருந்ததுன்னு!

---

# # # 💡 நினைவில் வையுங்கள்:

> ஆரோக்கியமான வாழ்வின் முதல் படி, சர்க்கரையை விடுவது அல்ல... **இனிப்பு சுவையின் அடிமைத்தனத்திலிருந்து (Sugar Addiction) வெளியே வருவதுதான்!** 🔥

இன்று உங்கள் டீயில் இருந்து இனிப்பை வெளியே அனுப்புங்கள்...

நாளை உங்கள் வாழ்க்கையில் இருந்து நோய்ப் பயத்தை வெளியே அனுப்பலாம்! 💪🥤

**- Nutrition Coach RRP-ABI** 🥤✈️

*(Healthy Mind, Wealthy Life)*

*_Hi👋 LUCKY'S WELLNESS FAMILY🙏_* # *📱 ஏரோப்ளேன் மோட் தியரி (The Airplane Mode Theory)*உங்களை நீங்களே கண்டறிய கொஞ்சம் டிஸ...
23/05/2026

*_Hi👋 LUCKY'S WELLNESS FAMILY🙏_*

# *📱 ஏரோப்ளேன் மோட் தியரி (The Airplane Mode Theory)*
உங்களை நீங்களே கண்டறிய கொஞ்சம் டிஸ்கனெக்ட் ஆகுங்கள்! ✈️📴

உங்கள் மொபைலை **ஏரோப்ளேன் மோடில் (Airplane Mode)** போடும்போது என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

* **வெளிப்புற சிக்னல்கள் அனைத்தும் நின்றுவிடும்.**
* **தொடர்ந்து வரும் தேவையற்ற சத்தங்கள் மறைந்துவிடும்.**
* **முடிவில்லாத நோட்டிபிகேஷன்கள் அப்படியே உறைந்துவிடும்.**

ஆனால் கவனித்தீர்களா? **அதற்காக அந்த போன் செயலிழந்து போவதில்லை.** கேமரா இன்னும் அழகான புகைப்படங்களை எடுக்கும். மியூசிக் பிளேயர் உங்களுக்குப் பிடித்த பாடல்களைத் தொடர்ந்து இசைக்கும். ஆஃப்லைன் ஆப்ஸ்கள் வேலை செய்யும், உங்கள் குறிப்புகளும் (Notes) சேமிக்கப்படும்.

அப்போதுதான் ஒன்றை நீங்கள் உணர்வீர்கள்—அந்த மொபைல் **ஒருபோதும் பயனற்றது அல்ல.** அதன் திறமையை நிரூபிக்க வெளிப்புற உலகத்திலிருந்து வரும் தொடர்ச்சியான தொந்தரவுகளும், குறுக்கீடுகளும் அதற்குத் தேவையில்லை!

---

# *👤 மனிதர்களாகிய நாமும் அப்படியேதான்!*

வெளி மனிதர்களின் அங்கீகாரம், மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் இடைவிடாத டிஜிட்டல் சத்தங்களுக்கு நாம் மிகவும் அடிமையாகிவிடுகிறோம். இதனால் நமக்குள்ளே இருக்கும் உண்மையான வலிமையை நாம் மறந்துவிடுகிறோம்.

* நீங்கள் முக்கியமானவர் என்று உணர்வதற்கு எல்லா நோட்டிபிகேஷன்களும் தேவையில்லை.
* உங்கள் மதிப்பைத் தெரிந்துகொள்ள மற்றவர்களின் கருத்துக்கள் தேவையில்லை.
* நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க தொடர்ந்து கவனச்சிதறல்கள் தேவையில்லை.

வெளிப்புற சத்தங்களை நீங்கள் முற்றிலுமாக நிறுத்தும்போது கூட, **உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும், வளர முடியும், புதிய விஷயங்களை உருவாக்க முடியும்!**

> **முக்கியமான தாரக மந்திரம்:** சில நேரங்களில், உங்கள் வாழ்க்கையிலும், ஆரோக்கியத்திலும், சிந்தனையிலும் மிக வேகமாக முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி—இந்த உலகத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் விடுபட்டு, **உங்களுடைய சொந்த உள்மனதின் குரலை** மீண்டும் ஒருமுறை கூர்ந்து கவனிப்பதுதான்.

இன்று உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். "ஏரோப்ளேன் மோடிற்கு" மாறி, உங்கள் உள்ளார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் இலக்குகளை மீண்டும் ஒருமுறை ரீசார்ஜ் செய்யுங்கள்! 🎯🌟

*~ Nutrition Sir RRP-ABI🥤✈️*

*🧘‍♂️ மனமே ரிலாக்ஸ் பிளீஸ்!**************************************** # *🧠 நீங்க முதல்ல உங்ககூட Agree பண்றீங்களா?* (Disagr...
20/05/2026

*🧘‍♂️ மனமே ரிலாக்ஸ் பிளீஸ்!*
***************************************

# *🧠 நீங்க முதல்ல உங்ககூட Agree பண்றீங்களா?*
(Disagreement vs Change)

மனித உறவுகளுக்குள்ளே விரிசல் விழறதுக்கு முக்கியமான காரணமே இந்த 'கருத்து வேறுபாடு' (Disagreement) தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... நீங்க எப்பவாவது உங்ககூடவே 100% உடன்பட்டிருக்கீங்களா?

* **நேற்று vs இன்று:**
* நேத்து உங்களுக்கு சரின்னு தோணுன ஒரு விஷயம், இன்னைக்கு தப்புன்னு தோணலாம்.
* **5 வருடங்களுக்கு முன்பு:** அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க வச்சிருந்த கொள்கைகளும், இன்னைக்கு நீங்க யோசிக்கிறதும் ஒன்னா இருக்கா? கண்டிப்பா இல்லை.

நாமே நாளுக்கு நாள் மாறிட்டே இருக்கும்போது, நாம யார்கூட கருத்து வேறுபாடு வச்சிருக்கோமோ, அவங்களும் காலப்போக்கில் மாறக்கூடிய ஒரு சாதாரண மனிதர் தான் இல்லையா?

---

# *🤝 Integrity & 'இன்பார்மல்' உறவுகள்*

சமூகத்துல மத்தவங்க கூட நல்ல உறவை மெயின்டெய்ன் பண்ணனும்னா, முதல்ல உங்களுக்குள்ள ஒரு நல்ல உறவு இருக்கணும்.

> **உங்களுக்கும், உங்கள் மனசாட்சிக்கும் இடையே உள்ள அந்த உண்மையான உறவுக்குப் பேர்தான் "Integrity" (நேர்மை).**
அது இல்லாதப்போ தான் மனசுக்குள்ள குழப்பம் வருது.

அடுத்தபடியா, எந்தவொரு உறவிலும் ரொம்ப 'பார்மலா' (Stiff) இருக்காம கொஞ்சம் **இன்பார்மலா (Informal)** பழக கத்துக்கணும். ஏன்னா, இன்பார்மலா இருக்குற இடத்துல தான் தவறுகளை ஏத்துக்கிற மனப்பக்குவமும், மன்னிப்பும் இருக்கும். எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் 100% பெர்ஃபெக்ஷனை எதிர்பார்க்க முடியாது பாஸ்!

---

# *🌍 Emotional Instability-ஐ வெல்வது எப்படி?*

இன்னைக்கு உலகத்துல இருக்குற மிகப்பெரிய பிரச்சனையே இந்த மனநிலை தடுமாற்றம் (Emotional Instability) தான்.

சுற்றி நடக்குற நெகட்டிவ் விஷயங்களை பார்த்து நாம ஹெல்ப்லெஸா ஃபீல் பண்ணாம இருக்கணும்னா, நாம இருக்கிற சூழலை முதல்ல கலகலப்பானதாகவும், அன்பானதாகவும் (Cordial Environment) மாத்தணும். இது ஒரு வண்டிக்கு கிரீஸ் (Grease) போடுற மாதிரி! உராய்வை குறைச்சு, உங்களை உங்களோட சூழலுக்கு ராஜாவா மாத்திடும்.

---

# *😇 நல்ல குணமும் ஆபத்தா?*
(The Trap of Righteousness)

"நான் ரொம்ப நேர்மையானவன், நான் தப்பே பண்ண மாட்டேன்" அப்படின்னு நீங்க நினைக்கும்போது, உங்களுக்கே தெரியாம மனசுக்குள்ள ஒரு திமிர் அல்லது இறுக்கம் (Stiffness) வந்துடும். அப்புறம் மத்தவங்களை விரல் நீட்டி குத்தம் சொல்ல ஆரம்பிச்சுடுவோம்.

* **தவறை ஒப்புக்கொள்ளுங்கள்:** நம்மகிட்டயும் குறைகள் இருக்குன்னு நாம உணரும்போது தான், அடுத்தவங்களோட குறைகளை நம்மால சகிச்சுக்க முடியும்.
* **செய்நன்றி மற (நீ செய்ததை):** அதனாலதான் "நல்ல காரியம் செஞ்சா அதை உடனே மறந்துடு" அப்படின்னு சொல்றாங்க.

உங்களோட கெட்ட குணங்கள் மட்டும் உங்களுக்கு எதிரி இல்லைங்க; உங்க நல்ல குணங்கள் தரும் 'அகங்காரம்' கூட உங்களை கோபக்காரராகவும், முரடனாகவும் மாத்திடும். அதனால, நல்லது-கெட்டது ரெண்டையுமே தலைக்கு ஏத்திக்காம, சரணாகதி அடைஞ்சு, ரிலாக்ஸா வாழப் பழகுங்க.

---

# *🛌 ஸ்ட்ரெஸ் ஃப்ரீ லைஃப் & மெடிடேஷன்*

ஒரு ரெண்டு நாள் தொடர்ந்து தூங்காம இருந்து பாருங்க... சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பயங்கரமா எரிச்சல் வரும். அதுவே நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பாருங்க, அதே சூழ்நிலையை கூலா கையாளுவீங்க. வித்தியாசம் இவ்வளவுதான்!

> **நெகட்டிவ் எண்ணங்களை தாண்டி வர்றதுக்கு "தியானம்" (Meditation) தான் ஒரே வழி.**

மெடிடேஷன் பண்ணும்போது, பாசிட்டிவ் எண்ணங்கள் தானாவே மனசுல ஊற்றெடுக்கும். மன அழுத்தம் (Stress) குறையும்போது உங்களோட கிரியேட்டிவிட்டி அதிகமாகும்; தொட்டதெல்லாம் துலங்கும், சக்சஸ் நிச்சயம்!

*~ Nutrition Sir RRP-ABI🥤✈️*

📉 **உங்கள் BMI எவ்வளவு? ஆரோக்கியத்தின் அளவுகோல் இதோ!** 📉உங்கள் நியூட்ரிஷன் சாரின் அன்பு வணக்கம்! 🌷 நமது உடலின் ஆரோக்கியத...
05/05/2026

📉 **உங்கள் BMI எவ்வளவு? ஆரோக்கியத்தின் அளவுகோல் இதோ!** 📉

உங்கள் நியூட்ரிஷன் சாரின் அன்பு வணக்கம்! 🌷

நமது உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் **BMI (Body Mass Index)** மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், நமது உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தால் மட்டுமே அது உண்மையான ஆரோக்கியம்! நமது எலும்புகள் தாங்கக்கூடிய எடையை விட, கூடுதல் எடை உடலில் சேரும்போதுதான் அது நோய்களுக்கு வழிவகுக்கிறது. 🌷

---

🧮 **BMI கணக்கிடுவது எப்படி? (மிக எளிது!)**

இதற்கான சூத்திரம் இதோ:
🌿 **BMI = எடை (கிலோகிராமில்) / [உயரம் (மீட்டரில்)]²** 🌿

**உதாரணத்திற்கு:**
உங்கள் உயரம் **160 செ.மீ** (1.6 மீட்டர்) மற்றும் எடை **60 கிலோ** என்றால்:

1️⃣ உயரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்: **1.6 x 1.6 = 2.56**
2️⃣ எடையை வகுக்கவும்: **60 ÷ 2.56 = 23.44**

✅ **உங்கள் BMI: 23.44** (இது ஒரு மிகச் சரியான அளவு!)

---

📊 **முடிவுகள் என்ன சொல்கிறது?**

* **18.5 - 24.9:** மிகச் சிறப்பு! (ஆரோக்கியமான எடை) 👍
* **25.0 - 29.9:** கவனம் தேவை! (அதிக எடை) 😟
* **30.0-க்கு மேல்:** உடனே மாற்றத்தை நோக்கி வாருங்கள்! (உடல் பருமன்) ⚠️

---

✨ **சரியான எடை... சந்தோஷமான வாழ்வு!** இன்றே உங்கள் BMI-யை கணக்கிட்டு பாருங்கள்! உங்கள் முடிவுகளை கீழே கமெண்ட் செய்யுங்கள் அல்லது எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். 👇

*~ Nutrition Sir RRP-ABI* 🥤✈️

**LUCKY'S WELLNESS**
**Hr. Dr. R RAMESH PANDI B.E., DFN., D.ACU.**
**Mrs. ABIRAMI SUNDARI M.A., B.Ed., DFN.**
*Wellness Coaches*
📞 **9843610020, 9514310020**

---

Address

Lucky's Wellness, 6 Jawli Kadai Street
Sivakasi
626123

Telephone

+919843610020

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Ramesh Pandi Wellness Coach and Trainer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R Ramesh Pandi Wellness Coach and Trainer:

Shortcuts

Share