Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Tenkasi
  • Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்
Directions Contact the business

Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம் பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !!

தென்காசி வடக்கு மாவட்டம் அதிகாரபூர்வமான தளம்

அச்சன்புதூர் 13வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: உள் இருப்புப் போராட்டம்  இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅச்...
05/10/2026

அச்சன்புதூர் 13வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: உள் இருப்புப் போராட்டம் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அச்சன்புதூர்: தென்காசி வடக்கு மாவட்டம், SDPI கட்சியின் அச்சன்புதூர் நகர மேற்கு கிளை சார்பில், அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கக் கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.

13வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட குடிநீர் பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, SDPI கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் முகம்மது நயினார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் அச்சன்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அச்சன்புதூர் நகரத் துணைத் தலைவர் காஜா மைதீன், கடையநல்லூர் தொகுதி இணைச் செயலாளர் நாகூர் கனி,நகரசெயற்குழுஉறுப்பினர்முஹம்மது கஸ்ஸாலி
கிளைத் தலைவர் செய்யது அலி உள்ளிட்ட SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அச்சன்புதூர் 13வது வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை இரண்டு நாட்களுக்குள் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் அளித்துள்ள உறுதியின்படி விரைந்து நடவடிக்கை எடுத்து, 13வது வார்டில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என SDPI கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆழ்ந்த இரங்கல்திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. E. ராஜா M.A., B...
04/10/2026

ஆழ்ந்த இரங்கல்

திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. E. ராஜா M.A., B.L., MLA அவர்களின் சகோதரரும், தென்காசி 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான திரு. E. பாலமுருகன் அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

அன்னாரின் மறைவால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினரையும், திரு. E. ராஜா MLA அவர்களையும் நேரில் சந்தித்து, SDPI கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இத்துயரமான நேரத்தில் இறைவன் மனவலிமையையும், ஆறுதலையும் வழங்குவானாக.

இவன்
SDPI கட்சி
தென்காசி வடக்கு மாவட்டம்

திமுக-வின் தென்காசி வடக்கு மாவட்ட  செயலாளரும் வாசு தேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன திரு E.ராஜா M.A.B.L, MLA அவர்களின...
03/10/2026

திமுக-வின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் வாசு தேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன திரு E.ராஜா M.A.B.L, MLA அவர்களின் சகோதரும் தென்காசி 31-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரான E.பாலமுருகன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு SDPI கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

வெளீயீடு
SDPI-கட்சி தென்காசி வடக்கு மாவட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் ஞ...
03/10/2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சேக் முகம்மது ஒலி அவர்களின் தலைமையில் கடையநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட பொதுச் செயலாளர் இம்ரான் கான் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் N. தமிம் அன்சாரி ஆர்ப்பாட்டத்தை தொகுத்து வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தங்களது கண்டனங்களை பதிவு செய்து, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது நயினார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஜாஹிர் உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிசார் முஹம்மது, செய்யது முஹம்மது உஸ்மானி, மகளிர் அணி மாவட்டத் தலைவர் கதீஜா, மாவட்ட பொதுச் செயலாளர் நசீரா, SDTU மாவட்டத் தலைவர் முகைதீன், மாவட்டச் செயலாளர் முகமது யாசின், வர்த்தக அணி மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது, வேளாண் அணி மாவட்டத் தலைவர் முஹம்மது காசிம், மாவட்டச் செயலாளர் சையத் அலி பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் சாஜிதலி, செயலாளர் சாகுல் ஹமீத், வாசுதேவநல்லூர் தொகுதி துணைத் தலைவர் சையது அலி பாதுஷா, பொருளாளர் திவான் ஒலி, IT விங் கடையநல்லூர் தொகுதி தலைவர் அகமது மக்தூம் உள்ளிட்ட சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் யாசர்கான் MC மற்றும் மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பரக்கத் நிஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கடையநல்லூர் நகரச் செயலாளர் தாஜுதீன் மற்றும் நகரப் பொருளாளர் கனி மற்றும் SDTU மாவட்ட தலைவர் மைதீன் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் J. ஜாபர் அலி உஸ்மானி
கண்டன உரை நிகழ்த்தினர் தனது உரையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை, பண்பொழி, வடகரை, புதூர், கடையநல்லூர், புளியங்குடி, பாம்புக்கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கடையநல்லூர் நகரத் தலைவர் ஹக்கீம் சேட் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

02/10/2026
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.இடம் : மணிக்க...
01/10/2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இடம் : மணிக்கூண்டு அருகில் ,கடைய நல்லூர்

நாள் : அக்டோம்பர் 02-2026
நேரம் : மாலை 04:30 மணியளவில்

Address

Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sdpi It wing தென்காசி வடக்கு மாவட்டம்:

Shortcuts

Share