Kavin Diabetes Centre

Kavin Diabetes Centre It's a centre located in walajabad offering diabetes health education and care to the rural and semi urban people at an affordable cost. UNITE FOR DIABETES

I would like to extend a professional welcome to my newest followers: Karthick Vadivel, Thiviya Psychiatrist, Ajith Anba...
21/01/2026

I would like to extend a professional welcome to my newest followers: Karthick Vadivel, Thiviya Psychiatrist, Ajith Anbarasan, Venkat Ponnila, Suresh Chidambaram, மு.வெங்கடேசன் அ.முனுசாமி, Sugashini Kalyani, Marshall Joseph, Arulmozhi Umachandran, Elangovan Selangovan, Haribabu Babu, Chandra Kanth, ர.அருண் குமார் விவசாயி நத்தாநல்லூர், அன்பில் அன்பரசு, Saravanan Ramachandran, Udhaya Kumar, Gopinath Mohan, Sakthi Sakthi, Vinayagam Yashwa, Sudhakar, T. Sankar, Ssk Sathiya, Senthil Kumaran RS, Walajabad Pa RajniBabu, Velvizhi. I am excited to have you onboard.

“சர்க்கரை அளவு சாதாரணமாக இருந்தாலும்Insulin Resistance இருக்கலாம்.”👉 Insulin Resistance (இன்சுலின் எதிர்ப்பு) அறிகுறிகள்...
20/01/2026

“சர்க்கரை அளவு சாதாரணமாக இருந்தாலும்
Insulin Resistance இருக்கலாம்.”

👉 Insulin Resistance (இன்சுலின் எதிர்ப்பு) அறிகுறிகள் – 👇

🔍 Insulin Resistance – அறிகுறிகள்
1️⃣ எடை தொடர்பான அறிகுறிகள்
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்தல்

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இருந்தும் எடை குறையாமல் இருப்பது

இடுப்பு சுற்றளவு அதிகரித்தல்

2️⃣ தோல் மற்றும் வெளிப்புற மாற்றங்கள்
கழுத்து, கைகுழி, இடுப்பு பகுதிகளில் கருமை நிறம்
(Acanthosis Nigricans)

தோல் கட்டிகள் (Skin tags)

முகப்பரு (குறிப்பாக பெண்களில்)

3️⃣ பசி மற்றும் சக்தி குறைவு
உணவு சாப்பிட்டவுடன் மீண்டும் பசி

இனிப்புப் பொருட்கள் மீது அதிக ஆசை

உணவுக்குப் பிறகு சோர்வு, தூக்கமாக இருப்பது

நாள் முழுவதும் சக்தி குறைவு

4️⃣ சர்க்கரை தொடர்பான அறிகுறிகள்
காலையில் சர்க்கரை சாதாரணமாக இருந்தும்
உணவுக்குப் பிறகு அதிகமாக இருப்பது

Prediabetes

சர்க்கரை அளவு அடிக்கடி மாறுதல்

5️⃣ ஹார்மோன் மற்றும் மாற்றுச்சத்து பிரச்சனைகள்
PCOD / மாதவிடாய் முறையின்மை (பெண்களில்)

கர்ப்பம் அடைவதில் சிக்கல்

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver)

கொலஸ்ட்ரால் / ட்ரைகிளிசரைடு அதிகம்

6️⃣ இதய நோய் அபாய அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தம்

குடும்பத்தில் நீரிழிவு / இதய நோய் வரலாறு

இடுப்பு சுற்றளவு அதிகரித்தல்

7️⃣ மனம் மற்றும் நினைவாற்றல் மாற்றங்கள்
நினைவு மங்கல் (Brain fog)

கவனம் செலுத்த முடியாமை

மனநிலை மாற்றம்

எளிதில் கோபம்

இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் நிலையை உணவு உடற்பயிற்சி வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாக சரி செய்ய முடியும்.

StressAwareness





















🩺 ஏன் Insulin Resistance, Diabetes-ஐ விட ஆபத்தானது?கிளினிக்கிற்க்கு வரும் பெரும்பாலானோர் உணவுக்கு முன் உணவுக்கு பின் ரத்...
19/01/2026

🩺 ஏன் Insulin Resistance, Diabetes-ஐ விட ஆபத்தானது?

கிளினிக்கிற்க்கு வரும் பெரும்பாலானோர் உணவுக்கு முன் உணவுக்கு பின் ரத்த சர்க்கரை அளவை பார்த்து விட்டு எனக்கு சர்க்கரை நோய் இல்லை தானே டாக்டர் என்று கேட்கின்றனர் அவர்களிடம் உங்களுக்கு தற்பொழுது சர்க்கரை நோய் இல்லை. ஆனால் வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிப்பேன்.
அதற்கான விளக்கம்

1️⃣ (Silent Disease) அமைதியாக ஆரம்பிக்கும் நோய்

Insulin Resistance பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும்

சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கலாம்

ஆனால் உடலுக்குள் சேதம் மெதுவாக தொடங்கிவிடும்

👉 Diabetes தெரியும்; Insulin Resistance தெரியாமல் வளர்கிறது.

2️⃣ முழு உடலையும் பாதிக்கும்

Insulin Resistance காரணமாக:

Insulin அளவு அதிகரிக்கும்

வயிற்றுக் கொழுப்பு அதிகரிக்கும்

ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படும்

இதன் விளைவாக:

நீரிழிவு நோய்

❤️ இதய நோய்

🧠 பக்கவாதம்

🫀 கொழுப்பு கல்லீரல் (Fatty Liver)

🩸 உயர் இரத்த அழுத்தம்

இரத்த கொழுப்பு அதிகரித்தல்

🧬 ஹார்மோன் கோளாறு (PCOD)

இவை அனைத்தும் சேர்ந்து Metabolic Syndrome எனப்படும்
👉 இதய தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகம்.

3️⃣அதிக Insulin உடலுக்கு விஷம்

தொடர்ந்து அதிக Insulin → ரத்த நாள சேதம்

உடலில் அழற்சி அதிகரிப்பு

புற்றுநோய் வளர்ச்சிக்கும் ஆதரவு

👉 பலர் சர்க்கரையை மட்டும் கட்டுப்படுத்துகிறார்கள்,
Insulin-ஐ கவனிப்பதில்லை.

4️⃣5️⃣ Diabetes கட்டுப்படுத்தலாம் – Insulin Resistance மோசமாகும்

Diabetes மருந்துகளால் கட்டுப்படுத்தலாம்

Insulin Resistance வாழ்க்கைமுறை மாற்றம் இல்லாமல் சரியாது

5️⃣ இன்சுலின் resistance இளம் வயதிலேயே ஆரம்பிக்கிறது

இளம் வயதினர், இளைஞர்களிலும் காணப்படுகிறது

காரணங்கள்:

Stress

தூக்கக் குறைவு

ஜங்க் உணவு

உடற்பயிற்சி இல்லாமை

“Diabetes என்பது பனிப்பாறையின் மேற்பகுதி.
Insulin Resistance அதன் அடிப்படை.”















18/01/2026
18/01/2026

“மன அழுத்தம் மனதில் மட்டும் இல்லை –
உடலையும் பாதிக்கிறது.
அதை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியம்.”

“மன அழுத்தம் மனதில் மட்டும் இல்லை –உடலையும் பாதிக்கிறது.அதை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியம்.”
18/01/2026

“மன அழுத்தம் மனதில் மட்டும் இல்லை –
உடலையும் பாதிக்கிறது.
அதை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியம்.”

18/01/2026

“Stress மனதில் மட்டும் இல்லை – உடலையும் பாதிக்கும்.
அறிக, கவனியுங்கள், கட்டுப்படுத்துங்கள்.”

17/01/2026

Insulin Resistance – இதை இன்றே சரி செய்தால், நாளை நோய் இல்லை!






17/01/2026







அரிசியா? கோதுமையா? 🤔 அரிசியில் கோதுமையை விட குறைந்த மாவுச்சத்து உள்ளது, ஆனால் அது சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்ட...
16/01/2026

அரிசியா? கோதுமையா? 🤔

அரிசியில் கோதுமையை விட குறைந்த மாவுச்சத்து உள்ளது, ஆனால் அது சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்டது.

கோதுமையில் அரிசியை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

எனவே, அரிசியாக இருந்தாலும் சரி, கோதுமையாக இருந்தாலும் சரி, குறைந்த அளவில் உட்கொண்டு, போதுமான அளவு காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொண்டால் இரண்டுமே நல்ல உணவு தான். 🌾🍚👍💪😊👌💕👏💛😍🌸

இன்று கிளினிக்கிற்கு 34 வயது உடைய நபர் சளி இருமலுக்கு  சிகிச்சை பெற வந்திருந்தார். அவர் அவருடைய பிரச்சனைகளை கூறிய பின் த...
15/01/2026

இன்று கிளினிக்கிற்கு 34 வயது உடைய நபர் சளி இருமலுக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். அவர் அவருடைய பிரச்சனைகளை கூறிய பின் தான் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆனால் தற்பொழுது எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை என்றும், எல்லா கெட்ட பழக்கங்களை உடைய தன்னுடைய நண்பர்கள் நலமாக இருப்பதாகவும் எனக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினார்.
அவருடைய பழைய பரிசோதனை முடிவுகளை நீங்கள் படத்தில் காணலாம் அவர் மிக அதிக சர்க்கரை அளவுகளை மருந்துகள் எடுத்து கட்டுப்பாட்டில் வைக்க கூடிய அளவிற்கு குறைவதையும், ஆனால் மீண்டும் அவர் மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் அதிகமாவதையும் அந்த படத்தில் காணலாம். சர்க்கரை நோயை எதிர்கொள்ள சர்க்கரை நோய் பற்றிய புரிதல் வேண்டும் மற்றும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அவருக்கு ஆறுதலை கூறிவிட்டு ரத்த சர்க்கரை அளவை பார்த்து வருமாறு கூறியுள்ளேன்.

சர்க்கரை நோய் என்பது நீண்ட நாட்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமலும் இருப்பதாலும் உள் உறுப்புகளில் பாதிப்புகளை மெதுவாக ஏற்படுத்துவதாலும் மக்களிடத்தில் இந்த நோய்க்கு போதுமான கவனம் இருப்பதில்லை.

இந்த நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு மற்றும் உடற்பயிற்சி அதனுடன் இந்த நோயை எதிர்கொள்ள மன வலிமையினை வளர்த்துக் கொள்வது

தடுப்பதற்கான வழிகள்:

உணவு: மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்தல்; புரதச்சத்து நிறைந்த கறி, மீன், முட்டை, பயறு வகைகளை உணவில் சேர்த்தல். காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்

உடற்பயிற்சி: உடல் செயல்பாடு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.

வாழ்க்கை முறை: ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முக்கியம்.

💥💥💥💥💥💥

Address

73, Raja Street
Walajabad
631605

Opening Hours

Monday 5pm - 9pm
Tuesday 5pm - 9pm
Wednesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Friday 5pm - 9pm
Saturday 5pm - 9pm
Sunday 10:30am - 1pm

Telephone

+918526162262

Alerts

Be the first to know and let us send you an email when Kavin Diabetes Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavin Diabetes Centre:

Share