Jumaira Ayurvedic Shop

Jumaira Ayurvedic Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jumaira Ayurvedic Shop, Medical and health, Colombo.

28/01/2024
பன்னீர் பூ நீரிழிவிற்கான தீர்வுபார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத...
14/09/2020

பன்னீர் பூ நீரிழிவிற்கான தீர்வு

பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத பயன்பாட்டில் இதன் பங்கு அதிகம் உள்ளது. குறிப்பாக இது இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது.

உட்கொள்ளும் முறை

குறிப்பிடத்தக்க வகையில் இந்த காய்களை பீங்கான் கப்பில் மட்டுமே ஊற வைக்க வேண்டும். இதில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதால் நீங்கள் தினமும் குடிக்கும் டீ கப்பை பயன்படுத்துவது சிறந்தது. ஊற வைப்பதற்கு அறை கப் தண்ணீர் போதும்.

(type -1) முதல் கட்ட சர்க்கரை நோய்க்கு 3 இல் இருந்து 4 காய்கள்.
(type -2) இரண்டாம் கட்ட சர்க்கரை நோய்க்கு 7 இல் இருந்து 8 காய்கள்.
தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்பு படியாக குறைந்து விடும். நீங்கள் இதை சாப்பிட ஆரம்பித்ததும் மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்களின் சர்க்கரையின் அளவு வெகு விரைவில் குறைவதை பார்க்கலாம்.

கருஞ்சீரகம் பயன்கள்கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத...
12/09/2020

கருஞ்சீரகம் பயன்கள்

கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.

`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது.

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால் கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.

பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

Address

Colombo
00600

Opening Hours

Monday 09:30 - 19:30
Tuesday 09:30 - 19:30
Wednesday 09:30 - 19:30
Thursday 09:30 - 19:30
Friday 09:30 - 19:30
Saturday 09:30 - 19:30

Telephone

+94771580804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jumaira Ayurvedic Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jumaira Ayurvedic Shop:

Shortcuts

Share