Vip ponnu

Vip ponnu Motivation & Money Tips
🏆 நிதி சுதந்திரம் மற்றும் வெற்றிக்கான எளிய வழிகாட்டி.

14/05/2026

Save பண்ணு செயல்ப்படுத்து

Amen
13/05/2026

Amen

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fan...
13/05/2026

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content!
Thankyou friends

13/05/2026

இது usefulனா SAVE பண்ணுங்க 🔖
சம்பளம் நல்லா வந்தாலும் மாத முடிவில் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லையா?










தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்ட மகளிடம் அப்பா கேட்டார்.“எப்படி இருக்கு ஸ்கூல்?”அவள் மெதுவாக சொன்ன...
13/05/2026

தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்ட மகளிடம் அப்பா கேட்டார்.

“எப்படி இருக்கு ஸ்கூல்?”

அவள் மெதுவாக சொன்னாள், “பிடிச்சிருக்கு பா…”

சிறிது நேரம் அமைதியாக இருந்து, பிறகு மனசுக்குள்ள இருந்த ஒரு உண்மையை வெளிப்படுத்தினாள்.

“பா… யாராவது எந்த ஸ்கூலில் படிக்கிறன்னு கேட்டா சொல்லவே கொஞ்சம் கூச்சமா இருக்குப்பா. முன்னாடி பெரிய பிரைவேட் ஸ்கூலில் படிச்சேன்… இப்ப கவர்மெண்ட் ஸ்கூல் என்று சொன்னா என்ன நினைப்பாங்கன்னு தோணுது…”

அப்பா சிரித்தார்.

“டாக்டர் ஆனா கவர்மெண்ட் டாக்டர் என்று சொல்றதுக்கு கூச்சப்படுவியா? இன்ஜினியர் ஆனா கவர்மெண்ட் இன்ஜினியர் என்று சொல்ல வெட்கப்படுவியா?”

அவள் உடனே, “இல்ல பா… அது பெருமையா சொல்லுவேன்” என்றாள்.

அப்பா மெதுவாக சொன்னார்,

“அதே மாதிரி தான். நீ படிக்கிற பள்ளியும் உன் பெருமைதான். யாராவது கேட்டா தைரியமா சொல்லு. நம்ம தேர்வு தான் நம்ம அடையாளம்.”

பிறகு அவர் தொடர்ந்தார்…

“அரசுப் பள்ளியில் எல்லாமே குறைன்னு நினைக்காதே. இங்க புத்தகம் கிடைக்கும், ஆனால் கற்றுக்கொள்ள வேண்டியது உன் முயற்சி. அதிக சுதந்திரம் இருக்கும்… அதையே சரியா பயன்படுத்தணும்.”

“இங்க இருக்கும் நண்பர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்றவங்க. ஆசிரியர்கள் அனுபவம் உள்ளவங்க. அவர்களிடம் கேட்டு கற்றுக்கோ. பயப்பட வேண்டாம், மரியாதையா பழகு.”

அவள் அமைதியாக கேட்டுக்கொண்டாள்… பிறகு மெதுவாக சிரித்தாள்.

“இனி யாராவது கேட்டா தயங்கமாட்டேன் பா…”

அந்த நிமிஷம் அப்பாவின் வார்த்தைகள் அவளுக்குள் தன்னம்பிக்கையா மாறியது.

சில நேரங்களில்… பள்ளி முக்கியமல்ல.
நம்ம மனசு அதை எப்படி ஏற்றுக்கொள்றதுன்றதே முக்கியம்.

💐💐💐

12/05/2026

இது usefulனா SAVE பண்ணுங்க 🔖
நாளைக்கு இல்ல… இப்போவே start பண்ணுங்க!










🔥 சம்பாதிக்க 7 சூப்பர் வழிகள்!உன் திறமை வீணாக விடாதே.இன்று சிறிய அளவில் தொடங்கும் முயற்சி, நாளை பெரிய வருமானமாக மாறலாம்....
12/05/2026

🔥 சம்பாதிக்க 7 சூப்பர் வழிகள்!

உன் திறமை வீணாக விடாதே.
இன்று சிறிய அளவில் தொடங்கும் முயற்சி, நாளை பெரிய வருமானமாக மாறலாம்.

உங்களிடம் ஒரு நல்ல யோசனை, சிறிய முயற்சி, தொடர்ந்து செய்யும் மனப்பக்குவம் இருந்தால்… இணையம் இல்லாமலேயே நல்ல வருமானத்தை உருவாக்க முடியும்.

---

1. வீட்டுச் சாப்பாட்டு தொழில்

வீட்டில் தயாரிக்கும் இட்லி, தோசை மாவு, மதிய உணவு, சாம்பார் சாதம், சிற்றுண்டி, ஜூஸ், மாலை நேர டிபன் போன்றவற்றை உங்கள் பகுதியிலேயே விற்பனை செய்யலாம்.

தொடக்கத்தில் 5–10 ஆர்டர்கள் கிடைத்தாலே நல்ல தினசரி வருமானம் கிடைக்கும்.

---

2. மறுவிற்பனை (Reselling)

உடைகள், அழகு சாதனங்கள், குழந்தைகள் பொருட்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றை கையிருப்பு இல்லாமல் விற்பனை செய்யலாம்.

முதலில் ஆர்டர் பெற்று, பிறகு சப்ளையரிடம் வாங்கி வாடிக்கையாளருக்கு அனுப்பலாம்.

---

3. உன் திறமையே உன் வருமானம்

உங்களுக்கு உள்ள திறமைகளை வருமானமாக மாற்றலாம்.

- தையல்
- மெஹந்தி
- மேக்கப்
- புகைப்படம்
- டியூஷன்
- அலங்காரம்

திறமை இருந்தால் வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

---

4. வாடகைத் தொழில்

ஒருமுறை வாங்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் வாடகைக்கு கொடுத்து லாபம் பார்க்கலாம்.

- நாற்காலிகள்
- மேசைகள்
- பாத்திரங்கள்
- ஸ்பீக்கர்கள்
- அலங்காரப் பொருட்கள்

ஒரு நல்ல passive income வழி.

---

5. உள்ளூர் உதவி சேவைகள்

உங்கள் பகுதியில் மக்களுக்கு தேவையான சிறிய உதவிகளை செய்து வருமானம் பெறலாம்.

- மளிகை பொருள் வாங்கித்தருதல்
- மருந்து வாங்கித்தருதல்
- மின்சார/தண்ணீர் பில் கட்ட உதவுதல்
- ஆவணங்கள் கொண்டு சேர்த்தல்

---

6. விழா மற்றும் நிகழ்ச்சி வேலைகள்

பிறந்தநாள், நிச்சயதார்த்தம், சிறிய விழாக்களுக்கு அலங்காரம் செய்வது நல்ல வருமானம் தரும்.

- Balloon decoration
- Gift wrapping
- Flower decoration
- Welcome setup

வார இறுதிகளில் மட்டும் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும்.

---

7. 💰 ₹500 இருந்தாலும் தொடங்கலாம்

பெரிய முதலீடு தேவையில்லை.

₹500 முதல் ₹1000 இருந்தாலும் ஒரு சிறிய முயற்சியை தொடங்க முடியும்.

முக்கியமானது

நல்ல யோசனை, தொடர்ந்து முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையை மாற்ற முடியும்.

---

தொடங்க சரியான நேரம் எப்போது தெரியுமா?
இப்போதே.

Note: ஆன்லைன் சம்பாதிக்கும் ஆசை இருந்தால் கமெண்ட் ல சொல்லுங்க..

இது போல் பதிவு வேண்டும் என்றால் yes னு கமெண்ட் பண்ணுங்க..

#சம்பாதிப்பு_யோசனை
#சிறுதொழில்
#தமிழ்தொழில்
#பெண்கள்_தொழில்
#வீட்டிலிருந்தே_வருமானம்
#தன்னம்பிக்கை
#வாழ்க்கைமாற்றம்
#தமிழ்ரீல்

12/05/2026

பணம் சம்பாதிக்க சூப்பர் ஐடியா போடுறேன் பாருங்க...

மனிதர்களுக்காக கவலைப்படுவதை நிறுத்துங்கள்…உங்கள் மன அமைதிக்காக வாழ தொடங்குங்கள்.எல்லோரையும் மகிழ்விக்க முயற்சிப்பதில், ந...
11/05/2026

மனிதர்களுக்காக கவலைப்படுவதை நிறுத்துங்கள்…
உங்கள் மன அமைதிக்காக வாழ தொடங்குங்கள்.

எல்லோரையும் மகிழ்விக்க முயற்சிப்பதில், நம்முடைய மன அமைதியை இழந்து விடுகிறோம்.

அதனால்...

உங்கள் மனநிம்மதிக்காக வாழுங்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்காக அல்ல.

​❤️ இந்த வரி உங்கள் மனதைக் தொட்டிருந்தால் YES என்று comment செய்யுங்கள்.

​மறக்காமல் SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Vip ponnu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share