24/03/2026
இலங்கையில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 23 வீதி விபத்துக்கள் இடம்பெறுகிறது. வருடம் ஒன்றிற்கு 3000 இறப்புக்கள் ஏற்படுகிறது . சொல்லனா எண்ணிக்கையில் அடங்காதோர் காயம் அடைகிறார்கள். இதில் 15-44 வயதிற்கு உட்பட்டோரே அதிகம் பாதிப்பிக்குள்ளாகிறார்கள்....
இதில் அதிக எண்ணிக்கையிலான விபதுக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே..
1- விபத்தின் போது ஏற்படும் கடுமையான விசைகள் குருதிக்குளாய்களை சிதைத்து பாரிய இரத்த இழப்பை ஏற்படுத்துவது மட்டும் அன்றி , கடுமையான என்பு முறிவுகளை ஏற்படுத்தும் . எனவே விபத்துக்குள்ளானவரின் அருகில் நீங்கள் உள்ளவராயின் , முதலில் குருதி இழப்பை கட்டுப்படுத்த உதவுங்கள். வெளிக்காயங்கள் ஆயின் துணி ஒன்றினால் நேரடி அளுத்தம் கொடுங்கள்.. அது குருதி இழப்பை கட்டுப்படுத்தவில்லை எனின் காயம் ஏற்பட்ட இடத்திற்கு மேலே (பொதுவாக கை ,கால்கள்) இறுக்கமான கட்டு ஒன்றை இடுங்கள் .. ஆனால் இந்த இறுக்கமான கட்டுக்கள் நீண்ட நேரம் இருப்பின் குறித்த இடங்களுக்கான குருதி தடுப்பை ஏற்படுத்தி கல இறப்பை ஏற்படுத்தும்..(more than 2 hours) .....
2- குருதி இழப்பானது வெளிப்படையாக வெளிக்காயங்களில் இருந்துதான் ஏற்பட வேண்டும் என்பது இல்லை.. மார்புக்குளி (thoracic cavity) , வயிற்றுக்குளி (abdominal cavity) , இடுப்புக்குளி (pelvic cavity) , நீண்ட என்புகள் ( long bones..eg.thigh) போன்ற இடங்களில் மிக முக்கியமான பெரிய குருதிக்குளாய்கள் இருப்பதால் பாரிய குருதி இழப்புக்கள் வெளியே தெரியாதவாறே ஏற்படும் . உதாரணமாக தொடை என்புகள் மட்டும் 2L குருதியை கொள்ளக்கூடியது..( மொத்த உடலின் குருதியே சராசரியாக 5L ) ... எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் குருதி இழப்புக்கள் இல்லை, காயம் இல்லை தானே என்று இருந்தால் இறப்பு ஏற்படலாம்.
3-தலைக்காயங்கள் மிக முக்கியமானவை .. நேரடியான குருதி இழப்புகள் மட்டும் அன்றி , விபத்தின் பின்னரான வாந்தி , மயக்கம், உணர்வு அற்ற நிலைக்குள்ளாதல்( loss of conscious) , காது , மூக்கு பகுதிகளால் இரத்தம் ( indicate basal skull fracture) போன்றவை தலைகாயங்களின் அறிகுறிகள் . ...
இதைவிட தலைக்காயங்கள் intracranial hemorrhages ஐ ஏற்படுத்தக்கூடியவை .... ( தர்பாரில் காட்டுவது போல subdural hematoma வந்தால் 2 hrs ல செத்திடுவாங்கள் எண்டது எல்லாம் பச்சப்பொய்கள்.. விரைவான சிகிச்சைகள் மூலம் காப்பாற்றலாம்)
Note- நோயாளி வாந்தி எடுக்கும் சந்தர்ப்பங்களில் நோயாளியை இடது புறம் சரித்து பிடிப்பதன் மூலம் நுரையீரலிற்குள் வாந்தி நுளைவதை தடுக்கலாம் ( prevent the aspiration)
4- விபத்துகளிக் பின்னர் களுத்துப்பகுதியை இயன்ற அளவிற்கு அசைக்காது , வைத்திய சாலைக்கு கொண்டுவருவதன் மூலம் cervical spine injury ஐ இயன்ற அளவிற்கு தடுக்க முடியும்
5-இதை விட வீதி விபத்துக்களை தாண்டி வெட்டுக்காயங்களில் ( cut injuries) அவயங்கள் துண்டிக்கப்படலாம்..அவ்வாறான சந்தர்ப்பங்களில் துண்டான பாகத்தை தூய்மையான பொலித்தின் பையினுள் இட்டு , அதை இன்னும் ஓர் குளிர் நீர் or ice நிரம்பிய பொலித்தினுள் இட்டு விரைவாக வைத்திய சாலைக்கு எடுத்து வரின் துண்டான அவயத்தை மீள பொருத்த முடியும்..........
6- காயப்பட்ட நபருக்கு உணவு , நீரினை குடுப்பதை தடுக்கவும்
PREVENTION IS BETTER THAN TREATMENT..