12/12/2025
ஒரு அறிவுள்ள பெற்றோராக, யாருக்கும் அநீதியோ அல்லது வன்முறையோ நிகழும்போது, அதை கண்டித்து எதிர்க்க குழந்தைகளுக்கு கற்றுத்தர தயங்கக்கூடாது.
சரி என்பதைக் சரியாகவும், தவறு என்பதைக் தவறாகவும் காணும் திறன் மிகவும் மதிப்புமிக்க பண்பு என்பதை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
யாராவது வன்முறை அல்லது துஷ்பிரயோகம் அனுபவித்து வரும்போது, உதவி பெற யாரை அணுக வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வாறு தகவல் வழங்க வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபத்துடன் அணுகி, தீர்ப்பு வழங்காமல் அவர்களின் கருத்துகளை கேட்டு, குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு கருணையும் அனுதாபமும் நிறைந்த குழந்தைகள் உள்ள சமூகம் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தகைய சூழலை உருவாக்க தேவையான மனப்பாங்கு மாற்றத்தை நமது குழந்தைகளில் விதைப்போம்.