12/08/2026
40+ ஆண்களின் ஆரோக்கியம் | விழிப்புணர்வுத் தொடர் – 03
40+ ஆண்களே… வருடத்திற்கு ஒருமுறையாவது உங்கள் ஆரோக்கியக் கணக்கையும் பாருங்கள்!
வீட்டுச் செலவு, வங்கிக் கணக்கு, வாகனப் பராமரிப்பு, தொழில் மற்றும் குடும்பத் தேவைகள் என அனைத்தையும் சரியான நேரத்தில் கவனிக்கும் நாம், நமது உடலின் நிலையை மட்டும் பல வருடங்களாகப் பரிசோதிக்காமல் விட்டுவிடுகிறோமா?
40 வயதுக்குப் பின்னர் சில நோய்கள் தெளிவான அறிகுறிகள் இல்லாமலேயே ஆரம்பித்து வளரக்கூடும். எனவே நோய் ஏற்பட்ட பிறகு பரிசோதிப்பதைவிட, தனிப்பட்ட அபாயக் காரணிகளுக்கு ஏற்ப Preventive Health Screening மேற்கொள்வது முக்கியமானது.
40+ ஆண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய Health Checks
01 | Blood Pressure
High Blood Pressure பெரும்பாலும் ஆரம்பத்தில் அறிகுறிகளை ஏற்படுத்தாது. அதனால் இரத்த அழுத்தத்தை முறையாகக் கண்காணிப்பது அவசியம்.
02 | Blood Sugar / HbA1c
Type 2 Diabetes மற்றும் Pre-diabetes நிலைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். உடல் பருமன், Family History அல்லது பிற risk factors உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
03 | Lipid Profile
Total Cholesterol, LDL, HDL மற்றும் Triglycerides போன்றவற்றின் மதிப்பீடு இதய இரத்த நாள நோய் அபாயத்தை கணிப்பதில் உதவுகிறது.
04 | Weight, BMI & Waist Circumference
எடை மட்டும் போதாது. குறிப்பாக வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, metabolic health குறித்து முக்கியமான தகவலை வழங்குகிறது.
05 | Liver & Kidney Health
Diabetes, hypertension, obesity, நீண்டகால மருந்துப் பயன்பாடு அல்லது பிற risk factors உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி Liver மற்றும் Kidney function பரிசோதனைகள் தேவைப்படலாம்.
06 | Prostate Health
சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் இருந்தால் அவற்றை அலட்சியம் செய்யக்கூடாது. PSA உள்ளிட்ட prostate screening அனைவருக்கும் ஒரே வயதில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனை அல்ல. தனிப்பட்ட risk factors, Family History மற்றும் நன்மை தீமைகளை மருத்துவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வது பொருத்தமானது.
07 | Full Blood Count மற்றும் பிற பரிசோதனைகள்
தொடர்ச்சியான சோர்வு, உடல் பலவீனம் அல்லது வேறு அறிகுறிகள் இருந்தால் CBC உள்ளிட்ட பரிசோதனைகள் தேவையா என்பதை மருத்துவர் தீர்மானிக்கலாம்.
08 | கண் & பல் பரிசோதனை
பார்வை மாற்றங்கள் மற்றும் பல் ஈறு பிரச்சினைகளையும் வயதின் இயல்பான மாற்றம் என்று புறக்கணிக்க வேண்டாம். குறிப்பாக Diabetes உள்ளவர்கள் கண் பரிசோதனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
09 | Mental Health & Sleep
மனஅழுத்தம், தூக்கமின்மை, அதிக குறட்டை, பகல் நேர அதிக தூக்கம், தொடர்ச்சியான எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்களையும் உங்கள் routine health discussion-இல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 | வயதுக்கேற்ற Cancer Screening
Colorectal cancer உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கான screening பொதுவாக நடுத்தர வயதிலிருந்து முக்கியத்துவம் பெறுகிறது. எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது வயது, Family History மற்றும் தனிப்பட்ட risk factors ஐப் பொறுத்து மாறலாம்.
ஒரு முக்கியமான விடயம்… “Annual Health Check-up” என்றால் ஒவ்வொரு வருடமும் எல்லா laboratory tests ஐயும் செய்வது என்று பொருளல்ல.
உங்கள் வயது, Family History, உடல் எடை, Blood Pressure, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாடு மற்றும் ஏற்கனவே உள்ள நோய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு உண்மையில் தேவையான screening tests ஐ மருத்துவருடன் தீர்மானிப்பதே சரியான அணுகுமுறை.
40 வயதுக்குப் பின்னர் ஆரோக்கியத்தைப் பரிசோதிப்பது நோயைத் தேடுவதற்காக மட்டுமல்ல;
நோய் உருவாகும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து குறைப்பதற்காகவும் ஆகும்.
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பல திட்டங்களை உருவாக்கும் நீங்கள், அந்த எதிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இன்று முதல் திட்டமிடுங்கள்.
- Dr. Fazl-Ul Haque M. Fouze