19/08/2026
இன்றே விண்ணப்பியுங்கள், பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு சுகாதார மேம்பாட்டு திட்டங்களில் இணைந்து பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் (தெரிவு செய்யப்படும் சிலருக்கு மட்டும்).
பயிற்சி உள்ளடக்கம்:
பங்கேற்பாளர்கள் சமூகப் பணிக்கான நடைமுறைசார்ந்த அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்வார்கள், அவற்றுள் அடங்குபவை:
• சுகாதார மேம்பாட்டுப் பண்புகள் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் அவற்றின் பயன்பாடு
• சுகாதாரத்தின் அடிப்படை காரணிகளைப் புரிந்துகொண்டு அவற்றைக் கையாளுதல்
• சமூகம் வழிநடத்தும் நடவடிக்கைகள் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்
• சமூக மட்டத்தில் தொற்றா நோய்களின் (NCDs) அபாயத்தைக் குறைத்தல்
• சமூக ஈடுபாட்டின் மூலம் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுதல்
• சமூகத் தலையீடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்
பின்வரும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdF598jS6noCRcgtqsXGvlNwcWDcX5KLzQGUJZM7s45P6xHYQ/viewform?usp=header